SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடல் எடையை கட்டுப்படுத்தும் கோவைக்காய்!

2019-10-17@ 11:40:10

நன்றி குங்குமம் டாக்டர்

புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் வளரும் செடி தான் கோவைக்காய். இதனை நாம் அன்றாடம் உணவுகளில் அதிகளவு சேர்த்துக்

கொண்டால் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை பெற முடியும். இது நம் உடலில் உள்ள பலவகையான நோய்க்கு மருந்தாக அமைகிறது.

கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. இவை தோல்நோய்களை  
குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

* கோவைக்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதைத்தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்டநேரம் செயலாற்றும்
திறன் ஏற்படுகிறது.

* தண்ணீர் அதிகம் அருந்தாமல் இருப்பது, உப்பு தன்மை அதிகமான நீரை, நீண்டநேரம் சிறுநீரை அடக்கி வைப்பது, மது பழக்கம் போன்ற காரணங்களால்

சிறுநீரக கற்கள் உருவாகும். வாரத்தில் இருமுறை கோவைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள்,
மலச்சிக்கல் பிரச்னை தீரும்.

* உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்னை ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க

நினைப்பவர்கள், உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய கோவைக்காய் பதார்த்தங்களை உணவுகளில்
அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.

* சர்க்கரை வியாதி ஒரு மனிதனின் பரம்பரை காரணமாகவும் மற்றும் அவனது தவறான உணவு பழக்கங்களாலும் ஏற்படும். சர்க்கரை வியாதி

உள்ளவர்கள் அடிக்கடி கோவைக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரில்

அதிகளவு சர்க்கரை சத்துக்கள் வெளியேறாமல் தடுக்கிறது.

* கோவைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்றுநோய்

ஏற்படாமல் இருக்க உணவில் அடிக்கடி கோவைக்காய் சேர்த்துக் கொள்வது நல்லது.

* இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து தேவையாக இருக்கிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான
அளவில் ரத்தம் சென்று வர கோவைக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது.

* கோவைக்காயில் அதிகளவு ஊட்டச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலின் எலும்பு

வளர்ச்சியடையவும், உறுதியாக இருக்கவும்  மற்றும் இதயம், ரத்தம், நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டு மொத்தமான உடலின் நலனுக்கு
உதவுகிறது.

தொகுப்பு: கவிதா சரவணன், திருச்சி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 30-09-2020

    30-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • formars29

    வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

  • coronadeath29

    கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

  • thee29

    பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

  • vadothara29

    குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்