எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்!
2019-09-09@ 10:14:26

நன்றி குங்குமம் டாக்டர்
சபாஷ்
யாராவது தேடி வந்த மஹாலக்ஷ்மியை வேண்டாம் என்று சொல்வார்களா? அதுவும் 10 கோடி ரூபாய் வீடு தேடி வந்தால்...
பாலிவுட்டில் கனவுக்கன்னியாக கோலோச்சிய நடிகை ஷில்பா ஷெட்டி ஃபிட்னஸ் விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். 44 வயதாகியும் இன்னமும் ஸ்லிம் தோற்றம் மாறாமலிருக்கிறார். உடற்பயிற்சி, உணவுமுறைகள் பற்றியெல்லாம் பல வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
ஷில்பாவின் இந்த பிரபலத்தன்மையையும், அவரது ஃபிட்னஸையும் தங்கள் மருந்து நிறுவன விளம்பரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள ஒரு ஆயுர்வேத மருந்து நிறுவனம் முயன்றிருக்கிறது. ‘எங்களுடைய ஆயுர்வேத மாத்திரைகளை சாப்பிட்டு வருவதால்தான் நீங்கள் ஃபிட்டாக இருப்பதாகக் கூறி விளம்பரத்தில் நடிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்காகவே 10 கோடி சம்பளம் பேசியிருக்கிறது அந்த நிறுவனம். ஆனால், ஷில்பா ஷெட்டி நோ சொல்லிவிட்டாராம்.
‘‘ஒல்லியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு ஒரே வழி வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்வதுதான். மாத்திரை சாப்பிடுவது, பட்டினி கிடப்பது போன்றவற்றால் எந்த பலனும் கிடைக்காது. ஃபிட்னஸ் மாத்திரைகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எடையைக் குறைக்க அவசரப்படும் மக்களை நான் தவறாக வழிநடத்துவது போலாகிவிடும். உங்கள் விளம்பரத்தில் நடிக்க விரும்பவில்லை’’ என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பியிருக்கிறார் ஷில்பா ஷெட்டி. இந்த நிகழ்வைத் தனது சமூகவலைதளத்திலும் குறிப்பிட்டிருக்கிறார்.சபாஷ் மேடம்!
- அ.வின்சென்ட்
மேலும் செய்திகள்
உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு
லாக்டவுன் டயட்
உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்!
அச்சம் தவிர்!
தினமும் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்!
ஆரோக்கியமாக இருப்பதே வெற்றிதான்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்