SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கைவைத்தியம் கத்துக்குவோம்!

2019-08-19@ 14:38:14

*சீரகத்துடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலைக்குக் குளித்துவர சோர்வு, மயக்கம், கண்நோய், தலைவலி, மந்தம் தீரும். சீரகத்தைப் பொடித்து தினமும் காலை, இரவு சாப்பிட்டுவர, வயிற்று உபாதைகள், அஜீரணம், வயிற்றுப் புண் குணமாகும். உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். சீரகத்தை நீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி நீரை அருந்திவர செரிமானக் கோளாறுகள் நீங்கும்.

*முள்ளங்கிச் சாற்றைத் தினமும் அருந்திவர, கல்லடைப்பு மற்றும் நீர்க்கட்டு தீரும். நுரையீரல் வலுவாகும்.

*வசம்பைக் கருக்கிப் பொடித்துத் தேனில் கொடுக்க, குழந்தைக்கு மாந்தம் இருமல் தீரும். நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

*சாதிக்காயைப் பொடித்து நீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி நீரை அருந்த, குழந்தைகள் மற்றும் பெரியவர்களின்
வயிற்றுபோக்குத் தீரும். சாதிக்காயைப் பொடித்து தினமும் ஒரு வேளை தேனில் சாப்பிட்டுவர, ஆண்மைப் பெருகும், விந்து கெட்டிப்படும்.

*சுக்கை வாயில் இட்டு மென்றால் பல்வலி தீரும்; அரைத்துப் பற்றிட  தலைவலி தீரும். சுக்கை வெந்நீரில் அரைத்து பற்று போட மூட்டுவலி வீக்கம் குறையும். சுக்கை பொடித்து அரை சிட்டிகை பாலில் கலந்து சாப்பிட, நன்கு பசி உண்டாகும்.

*கண் நோய்களுக்கு ஆமணக்கு எண்ணெய் நல்ல தீர்வு. உணவில் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துவந்தால், பார்வைத்திறன் மேம்படும். கண்கள் பலமாகும். சருமத்தைப் பாதுகாத்து, மலசிக்கல், மலகட்டைப் போக்கும்.

*நாட்டுப்பூண்டை பாலில் வேகவைத்துச் சாப்பிட்டுவர கொழுப்பு, தேவையற்ற சதை, நீங்கும். பூண்டுச் சாற்றைத் தேனில் கலந்து நாக்கில் தடவினால், குழந்தைகளின் சிறுநாக்கு வளர்ச்சி பிரச்னை, தொண்டைக்கட்டு,இருமல் நீங்கும்.

*கொத்தமல்லி விதையைப் பொடித்துச் சாப்பிட, குடியின் மீதான ஆர்வம் குறையும். கொத்தமல்லி விதைப் பொடியை சோம்புடன் சேர்த்துச் சாப்பிட புளிச்ச ஏப்பம் நீங்கும். கொத்தமல்லி விதை வாய்துர்நாற்றத்தைப் போக்கும்.

*தலையில் புழுவெட்டு உள்ளவர்கள், மிளகு தூளுடன் சிறிது வெங்காயச்சாறு, உப்புக் கலந்து பூசிவர நல்ல பலன் கிடைக்கும். பாதிக்கப்பட்ட இடத்தில் முடி முளைக்கும். மிளகுப் பொடியையும் சோம்புப் பொடியையும் சம விகிதத்தில் எடுத்துகொண்டு சிறிது தேனில் கலந்து சாப்பிட மூலநோய் நீங்கும்.

-யுவதி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்