SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூளையில் கட்டி... யாருக்கும் வரலாம்

2019-07-17@ 12:13:44

நன்றி குங்குமம் டாக்டர்

மூளைக்கட்டி எந்த வயதிலும், யாருக்கும் வரலாம். மூளைக்கட்டி ஏற்பட இதுதான் காரணம் என்று மருத்துவர்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் குடும்பப் பின்னணியில் யாருக்கேனும் மூளைக்கட்டி பாதிப்பு இருந்தால் மரபு ரீதியாக அது அந்த வாரிசுகளை பாதிக்கலாம். அளவுக்கு அதிக கதிர்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படக்கூடும்.மூளைக்கட்டி பற்றி அனைவரும் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய சில தகவல்கள்...

உலகளவில் தினமும் 500 பேர் வரை மூளைக்கட்டி (Cerebroma) பாதிப்பு உள்ளவர்களாக கண்டுபிடிக்கப்படுகிறார்கள். இதில் எல்லா வயதினரும் அடக்கம். மூளைக்கட்டி பாதிப்பு பிரைமரி(Primary) மற்றும் செகண்டரி(Secondary) என இரு வகைகளைக் கொண்டது.

பிரைமரி வகை கட்டியானது மூளையில் தொடங்கும். இது கேன்சர் செல்களை உள்ளடக்கியதாகவும், அப்படி இல்லாமலும் இருக்கலாம். செகண்டரி வகை கட்டியானது புற்றுநோய் செயல்களைக் கொண்டதாகவே இருக்கும். இது உடலின் எந்தப் பகுதியிலும் வரலாம். அந்த செல்கள் மூளையைத் தாக்கலாம்.

மூளையின் செயல்களை மைக்ரோஸ்கோப் உதவியுடன் பார்த்து மருத்துவர்கள் கட்டியின் நிலையைக் கண்டுபிடிப்பார்கள். மூளைக்கட்டி பாதிப்பின் அறிகுறியானது அதன் அளவு, பாதிக்கப்பட்டுள்ள இடம் மற்றும் அதன் தன்மையைப் பொறுத்து வேறுபடும்.

பொதுவான அறிகுறிகள்...


தலைவலி, வலிப்பு, பார்வை குறைபாடு, வாந்தி, நடத்தை மற்றும் ஆளுமையில் திடீர் வித்தியாசங்கள், நடப்பதிலும் உடலை பேலன்ஸ் செய்வதிலும் திடீர் அசௌகரியங்கள், பேச்சில் ஏற்படும் திடீர் அசௌகரியம்.

எப்படி உறுதி செய்கிறார்கள்?


பிரச்னையின் அறிகுறிகள், பாதிக்கப்பட்டவரின் குடும்பப் பின்னணி, அவரது உடல்நலம், வேறு பிரச்னைகளுக்காக அவர் எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகள் போன்றவற்றின் அடிப்படையில் மூளைக்கட்டி பாதிப்பானது மருத்துவரால் உறுதி செய்யப்படும். மூளை மற்றும் நரம்பியல் சோதனைகளின் மூலமே இது உறுதி செய்யப்படும்.

சிகிச்சைகள்...

அறுவை சிகிச்சை, ரேடியேஷன், கீமோதெரபி, வலிப்புக்கான சிகிச்சைகள், ஸ்டீராய்டு மருந்துகள், Ventricular peritoneal shunt. பாதிப்பின் தன்மையைப் பொறுத்து, மேற்கண்டவற்றில் பொருத்தமான சிகிச்சை முடிவு செய்யப்படும்.

தற்காத்துக் கொள்வது எப்படி?

மூளையின் ஆரோக்கியத்தில் தூக்கத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. போதுமான அளவு ஆழ்ந்த உறக்கத்தின் மூலம் பாதிப்புகளிலிருந்து மீளலாம். மன அழுத்தம் இன்றி மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். யோகா, தியானம் சுவாசப்பயிற்சி போன்றவற்றைப் பின்பற்றலாம். அரோமா தெரபியும் ஓரளவுக்கு உதவும்.

புற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுப் பழக்கத்துக்கு மாற வேண்டும். உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அது உடலுக்கான பயிற்சியாக மட்டுமல்லாமல் மூளைக்கும் உதவும். செல்போன் உபயோகத்தில் இருந்து விலகி இருத்தல் நல்லது. அளவுக்கதிக மொபைல் உபயோகம் மூளைக்கட்டி அபாயத்தை அதிகரிக்கும்.

- ராஜி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-02-2020

  26-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • speach20

  இந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் பேச்சு

 • carnival20

  ஜெர்மனி கார்னிவல் 2020: வண்ணமயமான மிதவைகள் உலகத் தலைவர்களை கேலி செய்கின்றன...நூற்றுகணக்கான மக்கள் பங்கேற்பு

 • mariyaathai20

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பு: காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

 • viloence20

  டெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மீண்டும் மோதல்: தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்