SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தடம்புரளும் தாம்பத்ய ரயில்

2019-02-07@ 16:39:21

நன்றி குங்குமம் டாக்டர்

கவர் ஸ்டோரி


தாம்பத்ய உறவில் இறைநிலை அடையலாம் என்பது முன்னோர் வகுத்த நியதி. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு நேர்மாறாக, சாத்தானின் பாதையாக மாறி இந்த உறவு பயணித்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன தீர்வு என்று ஆண் மலட்டுத்தன்மை மற்றும் செக்ஸ் ஹெல்த் மருத்துவரான ஷா துபேஷ்-ஷிடம் பேசினோம்...

‘‘30 வருடங்களுக்கு முன்னர் கணவன் - மனைவி இடையே தாம்பத்ய உணர்வில் அதிக நாட்டம் இருந்தது. ஆனால், இந்தக் காலக்கட்டத்தில், செக்ஸ் உணர்வு என்பது குறைவாகவே உள்ளது. இதற்குப் பலவிதமான காரணங்கள் உள்ளன. 1940-ல் அமெரிக்காவில் போர்னோகிராபி என்பது மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.

இப்போது அந்த ஆபத்தான புரட்சிக்கு இந்தியாவும் ஆளாகிவிட்டது. 15 முதல் 20 வயதுக்குள்ளேயே டிஜிட்டல் மீடியாவால் போர்னோகிராபி எக்ஸ்போஷர் சீக்கிரமாகவே இன்றைய இளைஞர்களுக்குக் கிடைத்துவிடுகிறது.

மேற்கத்திய கலாச்சாரம் ஆசிய நாடுகளுக்குப் பரவ ஆரம்பித்த பிறகு, நாமும் அவற்றைப் பின்பற்றவும், பிரதிபலிக்கவும் ஆரம்பிக்கிறோம். அதனால், அந்த மக்களுடைய செக்‌ஷுவல் பழக்க வழக்கங்களுக்கு மெல்லமெல்ல ஆட்படத் தொடங்குகிறோம். அது மட்டுமில்லாமல் நம்முடைய பண்பாட்டை இழக்கத் தொடங்குகிறோம். எனவே, டிஜிட்டல் மீடியா துணையுடன் போர்னோகிராபி எக்ஸ்போஷர் சராசரியாக 14 வயதிலேயே ஆரம்பித்துவிடுகிறது. அந்த வயதில் செல்போனில் பாலுணர்வைத் தூண்டும் வீடியோக்களைப் பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர்.

அதன் விளைவாக, சுய இன்பம் அனுபவிக்கின்றனர். இன்று கணவன்-மனைவி இடையே தாம்பத்ய மீதான நாட்டம் குறைந்து வருவதற்கு இது முக்கிய காரணமாக இருக்கிறது.பள்ளிப் பருவத்திலேயே செக்ஸ் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வதால், அதை செய்து பார்க்கும் ஆவலுக்கு ஆளாகி முயற்சி செய்கிறார்கள். அதன் காரணமாக, முதல் உறவு என்பது சராசரியாக 9,10-ம் வகுப்பு படிக்கும்போதே தொடங்குகிறது. எனவே, அவர்கள் எளிதாக உணர்ச்சிக்கு அடிமையாகி விடுகின்றனர்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டு மென்றால், அந்ததந்த காலக்கட்டங்களில், அந்தந்த வயதுக்குரியவற்றை உணர வேண்டும்; அனுபவிக்க வேண்டும். ஆனால், 24, 25 வயதில் பெரியவர்கள் அமைத்து தருகிற இல்லறம் வழியாக உண்டாகக்கூடிய செக்ஸ் நாட்டம், அதனால் ஏற்படுகிற சந்தோஷம் சிறு வயதிலேயே ஏற்பட்டு விடுகிறது. அதனால், நரம்பியல்ரீதியாகவே அவர்களுடைய மூளை சோர்வாகிவிடுகிறது. நான்கு சுவர்களுக்குள் நடக்க வேண்டிய உறவில் நாட்டம் குறைவதற்கு, இரண்டாவது காரணமாக இது அமைகிறது.

செக்ஸ் ஆர்வம் குறைவதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. பொதுவாக, ஆண்களுக்கு 35 வயதுக்கு மேலே, ஆண்மைக்குக் காரணமான Testosterone என்ற ஹார்மோன் குறையும். இந்த ஹார்மோன் ஒரு விஷயத்தைச் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம், கோபம், செக்ஸ் ஆர்வம் போன்றவற்றை தூண்டக் கூடியது. ஓர் ஆணை ஆணாக வைப்பதும் இதுதான். இன்று நிறைய ஆண்களுக்கு Testosterone குறைவாக இருப்பதைப் பார்க்கிறோம்.

இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்கள், வேலை செய்கிற சூழல்(ஒரே இடத்தில் பலமணி நேரம் அமர்ந்தவாறு வேலை செய்தல்), கடின உழைப்பற்ற வேலை, உடற்பயிற்சிகள் செய்யாமல் இருத்தல் என பலவிதமான காரணங்களால் தாம்பத்ய ஆர்வம் குறைவதைப் பார்க்க முடிகிறது.
தாத்தா - பாட்டி காலத்தில் விவசாயம், கடலில் மீன் பிடித்தல், உணவிற்காக விலங்குகளை வேட்டையாடல், காடு, மலைகளில் விறகு சேகரித்தல் போன்ற கடின உழைப்புக்கு முக்கியத்துவம் இருந்தது. ஆண்களும் இத்தொழில்களில் சளைக்காமல் ஈடுபட்டனர். அன்றைய ஆண்கள் உடலைக் கட்டுகோப்பாக வைத்திருந்தனர்.

இன்றைய ஆண்கள் உடலை ஃபிட்னெஸ்சாக வைத்திருப்பதில் ஆர்வம் இல்லாமல் காணப்படுகின்றனர். Body Mass Index சீராக வைப்பது இல்லை. உடல் எடை அதிகரித்தல், அளவுக்கு அதிகமான கொழுப்பை உடலில் சேர விடல் போன்ற காரணங்களாலும் தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைந்து வரு
வதைக் காண முடிகிறது. ஏனென்றால், உடலில் கொழுப்பு அதிகமாக அதிகமாக ஆண்களுடைய ஹார்மோன் பெண்களுடைய ஹார்மோனாக மாறிவிடுகிறது. இந்த மாற்றம் விரை பகுதியிலும் நடைபெறும். இதுபோல் டெஸ்டோடீரோன்(Testosterone) குறைவதால் உயிரணுக்கள் உற்பத்தியாவதும் கணிசமாக குறைகிறது. இதனால், குழந்தை இன்மை, மலட்டுத்தன்மை என்ற இரண்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அடுத்து, தாம்பயத்ய ஆர்வமின்மைக்கு மரபணு குறைபாடும் முக்கிய காரணமாக உள்ளது. இன்றைய ஆண்கள் ஆணாக இருப்பதற்கு Testosterone மற்றும் Y Chromosome முக்கிய காரணங்களாக உள்ளன. இவற்றில், Y Chromosome உடலின் ஒவ்வொரு செல்லிலும் காணப்படும். இந்தக் குரோமோசோமில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், விரை சரியாக உருவாகியிருக்காது.

சுருங்கி காணப்படும். தாடி வளர்ச்சி குறைவாக இருக்கும். உடல் எடை அதிகமாக இருக்கும். ஹார்மோன்கள் சரியான விகிதத்தில் இருக்காது. இவர்களுக்கு தாம்பத்யத்தில் விருப்பம் இருக்காது. சில ஆண்களுக்குப் பிறந்ததில் இருந்தே ஹார்மோன் சுரத்தல் இருக்காது. 15 வயதில் வர வேண்டிய பருவம், 20 வயதில்தான் வரும்.

இதில் எந்தக் காரணமாக இருந்தாலும், விரை சிறியதாக இருக்கும். ஹார்மோன்கள் சுரத்தல் ஏற்றத்தாழ்வுடன் இருக்கும். ஓர் ஆணுக்கு மேலே சொல்லப்பட்ட பாதிப்புகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் செக்ஸ் ஆர்வம் கொஞ்சமும் இருக்காது.புகைப்பிடிக்கும் பழக்கமும், மது அருந்தும் வழக்கம் உள்ளவர்களுக்கும் ஆணுறுப்புக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும்.

ஆணுறுப்பு சுருங்குவதால், இவர்களுக்கு உணர்ச்சியும் இருக்காது. ஒரு குறிப்பிட்ட வயது வரை உணர்ச்சி உள்ளதுபோல் தெரியும். ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு இருக்காது. தினமும் ஆல்கஹால் எடுத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு விறைப்புத்தன்மை, உணர்ச்சி இருக்கும். ஆனால், விந்து வெளியேறாது. இக்குறைபாடு உள்ள ஆண்களால் மனைவியைத் திருப்திப்படுத்த இயலாது.

கூட்டுக்குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து, கணவன்-மனைவி தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர். மனைவியுடன் தாம்பத்யம் வைத்துக் கொள்வதற்குப் பொருளாதார தேடல் ஒரு தடையாக உள்ளது. ஜப்பான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் திருமண வயதைக் கடந்த பெண்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்கள் சரியான வாழ்க்கைத்துணை அமையாத காரணத்தால், இவ்வாறு வாழ்வதாக தெரிவிக்கின்றனர். ஆனால், இவ்வாறு கூறும் பெண்கள் பல ஆண் நண்பர்களுடன் வாழ்ந்துவிட்டுத்தான் இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்
கின்றனர் என்று அதிர்ச்சியான சர்வேக்கள் எல்லாம் வெளிவந்திருக்கிறது.

இதேபோல் இன்றைய காலக்கட்டத்தில், பொதுவாக இளைய தலைமுறையினர் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள தயங்குகின்றனர். அதேவேளையில், தங்களுடைய உரிமைகள் பற்றி பேச ஆரம்பித்து விட்டனர். இவர்கள் எப்போது அவரவர் உரிமைகள் பற்றி பேசத் தொடங்கினரோ, அப்போதே, பொறுப்புகள், கூட்டுக்குடும்பம் போன்ற சமூக கட்டுப்பாடு உடைந்து விட்டது. என்னுடைய உரிமை என பேச ஆரம்பித்த இவர்கள் Sexual Freedom பற்றியும் பேசுகின்றனர். Couple Swing என்ற கான்செப்ட் ஒரு சில நகரங்களில் நடைமுறைக்கு வந்துவிட்டது. அதாவது, திருமணமான தம்பதியர்கள் Get Together என்ற பெயரில், பெரிய ஓட்டலில் ஒன்றுகூடி, தங்களுடைய வாழ்க்கைத்துணையைப் மாற்றம் செய்து கொள்கின்றனர்.

இவர்கள் தங்களுக்குப் பிடித்த ஆணுடனோ, பெண்ணுடனோ படுக்கையைப் பகிர்ந்து கொள்கின்றனர். இது அமெரிக்காவில் பிரபலமான கான்செப்ட். இதனால், பால்வினை தொற்றுநோய்கள்(Sexual Transmitted Diseases) வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆண்களுக்கு Boredom காரணமாகவும், முன்னரே சொன்ன மாதிரி பெண்களுக்கு ரைட்ஸ் பற்றி பேசுவதாலும் தாம்பத்யத்தில் நாட்டமின்மை, தகாத உறவில் ஆர்வம் போன்றவை தலைதூக்க ஆரம்பித்துவிட்டன.  

சமீபகாலமாக, பிரின்ட், விஷுவல், எலக்ட்ரானிக், டிஜிட்டல் மீடியா என எதுவாக இருந்தாலும், தகாத உறவைக் கண்டிக்கும் கணவனை மனைவியே அடியாட்களை வைத்து கொல்வதை வெளிகொண்டு வருகின்றன. வளைகுடா நாடுகளில் தகாத உறவை ஒடுக்க கடுமையான சட்டதிட்டங்கள் உள்ளன. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், முதல் மனைவி சம்மதித்தால்தான் வேறொரு பெண்ணை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்ய முடியும்.

Sexual Freedom வந்த பிறகு தாம்பத்யத்தில் விருப்பம் குறைந்த, தகாத உறவால் பாதிக்கப்பட்ட ஆண்களை, பெண்களை நிறைய பார்க்க முடிகிறது. பள்ளி, கல்லுரிகளில் படிக்கும்போதே, செக்ஸ் பற்றி உடன் படிக்கும் நண்பர்களால் தெரிந்து கொள்கின்றனர். பிறரைக் கவரும் வகையில் இருக்க விரும்புகின்றனர். உணர்ச்சி களைக் கட்டுப்படுத்த தவறுகின்றனர். வேலையில் ஈடுபாடு, லட்சியம் இல்லாத காரணத்தால் இது மாதிரியான கவனச்சிதறல்கள் வருகின்றன.

எனவே, பள்ளிப்பருவத்திலேயே, படிப்பில் கவனம், உயர்ந்த லட்சியம் போன்றவற்றை மாணவ, மாணவியரிடம் கற்பிக்க வேண்டும். செல்போன், ஃபேஸ்புக் முதலான டிஜிட்டல் மீடியாக்களை அளவோடு பயன்படுத்துதல், சக தோழன், தோழியரின் தூண்டுதலைத் தடுத்தல், பள்ளி இறுதி வகுப்பில் அடிப்படையான பாலியல் கல்வி, திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கைத் துணையுடன் நேரம் செலவிடுதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தினாலே, தகாத உறவை தடுக்கலாம். அதன்மூலம், அழிவை நோக்கி போய்கொண்டு இருக்கிற தாம்பத்யம் என்ற புனிதத்தையும் நாம் மீட்டெடுக்க முடியும் என் கிறார்.’’

- விஜயகுமார்,
படம் : ஆர்.சந்திரசேகர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shortest-man-world-25

  மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

 • modheadd1

  பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

 • canata-storm-24

  வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!

 • north111s

  உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!

 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்