Stay Hydrated
2018-11-22@ 11:31:25

நன்றி குங்குமம் டாக்டர்
தண்ணீர்... தண்ணீர்...
‘‘தண்ணீர் குடிப்பது என்பது வெறுமனே தாகம் தணிப்பதற்கான உந்துதல் மட்டுமே அல்ல. தண்ணீர் என்பது திரவ வடிவிலான உணவுப்பொருளும் அல்ல. இவற்றையெல்லாம் தாண்டி ஒருவரின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான மருத்துவக் காரணியாக தண்ணீர் இருக்கிறது. அதன் முக்கியத்துவத்தை நாம் எப்போதும் நினைவில் கொள்வது அவசியம்’’ என்கிற இயற்கை மற்றும் யோகா மருத்துவர் மங்கையர்க்கரசி தண்ணீர் மகத்துவம் பற்றித் தொடர்ந்து பேசுகிறார்.
* மூன்று புறமும் எப்படி இயற்கையை நீர் சூழ்ந்திருக்கிறதோ, அதேபோல் நம் உடலும் 75 முதல் 80 சதவீதம் வரையிலும் நீரால் உருவாகி இருக்கிறது. எனவே, நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும், ஒவ்வொரு அணுவுக்கும் நீர்ச்சத்து என்பது மிகவும் அவசியம்.
* உடலில் நீர்ச்சத்து குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அது நோய் வருவதற்கான முக்கிய காரணியாக இருக்கிறது.
* தண்ணீர் குடிப்பதனால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுகிறது. உடல்வெப்பம் சமநிலைக்கு வருகிறது. உடலில் உள்ள அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை சமன்படுகிறது. உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகவும் தண்ணீர் உதவுகிறது.
* மன அழுத்தத்துக்கு மருந்தாகவும் தண்ணீர் பயன்படுகிறது என்பது சுவாரஸ்யமான விஷயம். மன இறுக்கம் மிகுந்த நேரத்தில் தண்ணீர் பருகுவது சிறந்த நிவாரணியாக இருக்கிறது என்று பல்வேறு உளவியல் ஆய்வுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.
* இயற்கை மற்றும் யோகா மருத்துவத்தின் ஒரு முக்கியமான சிகிச்சையாக தண்ணீர் இருக்கிறது. தங்கள் நோயாளிகளுக்குத் தண்ணீர் பருகும் முறை பற்றி மிகப்பெரிய பாடமே இயற்கை மருத்துவர்கள் நடத்துவார்கள்.
* நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சருமம் வறட்சி அடையாமல் பாதுகாக்கவும் தண்ணீரே சர்வ ரோக நிவாரணியாக செயல்படுகிறது என்று தைரியமாக சொல்லலாம்.
* உடலில் உள்ள உப்புச்சத்து அதிகரித்துவிடாமல் அதனை முறையாக வெளியேற்ற தண்ணீர் அவசியம். சோடியம், யூரியா, கால்சியம், புரதம், யூரிக் அமிலம், பொட்டாசியம், கொழுப்பு ஆகியவற்றை வடிகட்டி தேவையான சத்துக்களை ரத்தத்தின் மூலம் உடலின் உறுப்புகளுக்கு அனுப்பும் வேலையையும் தண்ணீர் செய்கிறது.
* சிறுகுடல் மற்றும் பெருங்குடல் தண்ணீர் குடிப்பதனால், அதன் குடல் உறிஞ்சிகளால் ஈர்க்கப்பட்டு அந்த உறிஞ்சிகளின் மூலம் நீரை கழிவுகளுக்கு அனுப்பி மலத்தை வெளியேற்றுகிறது.
* நம் மூளைக்கும் தேவையான அளவு நீர் தேவைப்படுகிறது. காலை எழுந்தவுடன் 250 முதல் 300 மிலி வரை தண்ணீர் அருந்தினால் நம் உடல் புத்துணர்வு பெற்று, மூளையின் திறனும் அதன் மூலம் அதிகரிக்கும்.
* அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் நம் பெருங்குடல் சுத்தம் செய்யப்பட்டு மலத்தை வெளியேற்றுவதற்கு உதவுகிறது.
* எப்போதுமே தண்ணீர் அமர்ந்துதான் பருக வேண்டும். அப்போதுதான், நாம் பருகும் தண்ணீர் உடலில் மெதுவாக உணவுக்குழாயினுள் சென்று மற்ற உறுப்புகளுக்கும் சேரும். நின்றுகொண்டு குடிக்கும்போது தண்ணீர் உடலில் வேகமாகப் பாய்ந்து சென்று நம் உடலின் நீர்ச்சத்து சமநிலையைப் பாதிக்கும். இதனால் உள்ளுறுப்புகள் சிறிது சமநிலை தவறவும் வாய்ப்பு உண்டு.
* காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அல்லது மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் நிறைய தண்ணீர் குடிக்கலாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தாலே உடலின் நீர்ச்சத்து சமநிலை பராமரிக்கப்படும்.
தொகுப்பு: க.இளஞ்சேரன்
மேலும் செய்திகள்
நீரின்றி அமையாது நம் உடல்!
ஆழ்ந்த உறக்கத்திற்கு வெந்நீர் குளியல்!
தண்ணீருக்கு மாற்றே இல்லை!# Save Water
நீரும் மருந்தாகும்!
தண்ணீர் குடிப்பதை தவிர்த்தால் ஆபத்து...!
குடிக்க வேணாம்... அப்படியே கடிக்கலாம்! இது தண்ணீர் புரட்சி
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்