SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மினரல் வாட்டரில் மினரலே இல்லை! கேன் வாட்ட-ரில் வைரஸ்தான் உள்-ளது!

2017-03-13@ 15:19:25

சுற்றுச்சூழல் பற்றி நிறைய ஆய்வுகள் செய்துவரும் பேராசிரியர் ரஹ்மான் கூறுவது என்ன?இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீரை கவர்ச்சியான ஒரு பெயரை வைத்து பணம் சம்பாதிக்கும் மோசடிதான் நடந்துகொண்டிருக்கிறது’’ என்று தடாலடியாக ஆரம்பிக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை நான் மேலோட்டமாக சொல்லவில்லை. கேன் வாட்டர் எப்படி தயாராகிறது என்று தெரிந்தால் நான் சொல்வதன் அர்த்தம் புரிந்துவிடும். இந்த நிறுவனங்கள் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை ஏதேனும் ஒரு நீர் ஆதாரத்திலிருந்து மொத்தமாக எடுக்கிறார்கள். இந்தத் தண்ணீரில் படிந்திருக்கும் நுண்துகள்கள், பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளை அகற்ற வேண்டும் என்பதற்காக, சில வேதிப்பொருட்களைக் கலந்து சுத்திகரிக்கிறார்கள். தண்ணீரின் அமிலத்தன்மை, காரத்தன்மையை நீக்க வேண்டும் என்பதற்காகவும் சுத்திகரிக்கிறார்கள்.

இந்தத் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகு, கண்ணாடி போல தண்ணீர் தெரியும். இப்போது மேலே சுத்தமாக இருக்கும் தண்ணீரை மட்டும் பாட்டில் / கேன் வாட்டர் தயாரிக்க எடுத்துக் கொள்கிறார்கள். சுத்திகரிப்பின் போது மாசுகள் அகற்றப்படுவது நல்ல விஷயமாக இருந்தாலும், தண்ணீரில் இயற்கையாகவே இருக்கும் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள் இதனுடன் வடிகட்டப்பட்டுவிடுவதால் சத்தில்லாத வெறும் தண்ணீராகவே நமக்குக் கிடைக்கிறது. மினரல் வாட்டர் என்ற பெயரில் விற்கப்படும் தண்ணீரில் மினரல்களே இல்லை என்பதும் ஒரு வினோதமான உண்மை. பெரிய நிறுவனங்கள் சுத்திகரிக்கும் வாட்டரில் தாது உப்புகள் இல்லை என்றால், சரியாக சுத்திகரிக்கப்படாத தண்ணீரில் நச்சுத்தன்மை மிக்க கனிமங்கள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவை அதிகமாக இருக்கின்றன.  இந்த சுகாதாரமற்ற தண்ணீரால் சரும நோய்கள், கால்சியம் சத்துப் பற்றாக்குறையால் எலும்புகள் பலவீன மாவது என்று பல சிக்கல்களும் கூடவே வருகின்றன. வெளிநாட்டினர் தண்ணீரை சுத்திகரிக்கப் பயன்படுத்துகிற Reverse osmosis என்கிற ‘எதிர்ச்சவ்வூடுப் பரவல்’ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

மேற்கத்திய நாடுகளின் சீதோஷ்ண நிலை வேறு, அவர்கள் அருந்தும் தண்ணீரின் அளவு வேறு, வெளியேறும் சிறுநீரின் அளவு வேறு, உடலமைப்பு வேறு போன்ற அடிப்படையான விஷயங்களை நாம் கவனிக்க மறந்துவிடுகிறோம். உண்மையில், தெருக்குழாய்களின் மூலமும் நகராட்சிகளின் மூலமும் அரசாங்கம் கொடுக்கும் குடிநீரே போதுமானதுதான். இந்தத் தண்ணீரை வடிகட்டிக் காய்ச்சிக் குடித்தால், அதைவிட பாதுகாப்பானது எதுவும் இல்லை. தண்ணீரில் இருக்கும் தாது உப்புகளும் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். ஆனால், இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீரையோ, குளோரின் மூலம் சுத்திகரித்து அரசாங்கம் கொடுக்கும் தண்ணீரை யோ நாம் நம்புவது இல்லை’’ என்கிறார் வருத்தத்துடன்!

மினரல் வாட்டரால் ஏற்படும் பாதிப்புகள்?


மருத்துவர் அர்ச்சனா கூறியதாவது: உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி, சாதாரணமாக நமக்குக் கிடைக்கும் தண்ணீரை 10 முதல் 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்துக் காய்ச்சிக் குடித்தாலே போதுமானது. தண்ணீரைக் கொதிக்க வைப்பதோடு அந்த தண்ணீரை சரியாக மூடி வைக்க வேண்டும்,  மினரல் வாட்டரால் நமக்குக் கிடைக்காமல் போகும் சத்துகளை சமன்படுத்த காய்கறிகள், பழங்கள், நல்ல   சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரமற்ற மினரல் வாட்டரால் மட்டும் அல்ல, பொதுவாகவே சுகாதாரமற்ற தண்ணீரால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு, ஹெபடைட்டிஸ் போன்ற நோய்கள் வருகின்றன.

கேன் வாட்டர்

சில யோசனைகள்

1. கேன் வாட்டர் தயாரிப்பாளர்களில் அரசு அங்கீகாரம் பெற்றவர்களை விட,  குடிசைத் தொழில் போல் அங்கீகாரம் இல்லாமல் தயாரித்து விற்பனை செய்து வருபவர்கள்தான் அதிகம்.
2. நுண்கிருமிகள் (strilize) நீக்கப்பட்ட கேன்களில்தான் தண்ணீர் நிரப்பி விற்க வேண்டும். அதனால், கேன் சுத்தமாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.
3. சீல் உடைக்கப்பட்ட வாட்டர் பாட்டில் நாள்பட்டு பயன்படுத்தக்கூடாது.
4. வெளியிடங்களுக்குச் செல்வதாக இருந்தால், முடிந்த வரை வீட்டிலிருந்தே தண்ணீர் எடுத்துச் சென்று பழகுங்கள்.
5. வாட்டர் ப்யூரிஃபையர் பயன்படுத்த விரும்பினால்  6 மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் ப்யூரிஃபையரை சுத்தம் செய்வதும் அவசியம்.

buy naltrexone naltrexone implant removal what is ldn used for
vivitrol shot low dose naltrexone uses what is the difference between naloxone and naltrexone
vivitrol shot is naltrexone a controlled substance what is the difference between naloxone and naltrexone
vivitrol shot naltrexone side effects forum what is the difference between naloxone and naltrexone
where to get naltrexone implant site stopping ldn
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
low dose ldn ldn benefits ldn online
revia medication does naltrexone block tramadol ldn colitis
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
trexan medication blog.aids2014.org naltrexone manufacturer
naltrexone injections click stopping ldn
vivitrol shot information open naltrexone other names
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-01-2021

  28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • jayallithaa_mmeerrr

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

 • 27-01-2021

  27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramukudi

  குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

 • autoooo_maaa

  சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்