SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேனில்தான் தண்ணீர் வாங்குகிறீர்களா? ஒன் மினிட் ப்ளீஸ்...

2017-01-30@ 14:36:36

ஆற்று நீரை குடத்தில் சுமந்து வந்து குடித்தது ஒரு காலம். பின்னர் கிணற்று நீரை சில்லென்று இறைத்து பானையில் வைத்து குடித்ததெல்லாம் அந்த காலம். அப்புறம் போர்வெல் தண்ணீர், கார்ப்பரேஷன் குழாயில் வந்த தண்ணீர் எல்லாவற்றையும் கடந்துவிட்டு இப்போது மிஸ்டர் நடுத்தரம் கேனில் அடைத்து விற்கப்படும் தண்ணீரைதான் பெரும்பாலும் குடிக்கிறார்.
இம்மாதிரி கேன்களில் அடைத்து விற்கப்படும் நீரை சுத்தப்படுத்துவதற்கு பல ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீரை சுத்திகரித்த பிறகு இவற்றை முறையாக நீக்கவேண்டியது அவசியம். செலவுக்கு பயந்து கொண்டு அதை பலரும் செய்வதில்லை. எனவே, இதுபோன்ற நீரை அருந்துபவர்களுக்கு, இந்த வேதிப் பொருட்கள் உடலிலேயே படிந்து சிறுநீரக மற்றும் நரம்புகள் தொடர்பான பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அலாரம் அடிக்கிறார்கள் மருத்துவர்கள்.இதுவும் தவிர, வைரஸ், பாக்டீரியா, ஸ்போர்ஸ் (நுண்ணுயிரிகள் அவற்றிற்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் தங்களைச் சுற்றி ஒரு கூட்டை (spores) ஏற்படுத்தி அதனுள் இருந்து கொள்ளும். சாதகமான சூழல் இருந்தால் அதை உடைத்துக் கொண்டு வெளியில் வரும்) போன்ற நுண்ணுயிரிகள் முறையாக நீக்கப்பட்டுள்ளதா என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. இதனால் தொற்று நோய்கள் பாதிப்பும் வரலாம்என்கிறார்கள்.

உங்களை பயமுறுத்துவதற்காக இதை சொல்லவில்லை. இதற்கு தீர்வும் இருக்கிறது.சில பெரிய நிறுவனங்கள் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் செய்து விற்பனை செய்யும் நீரை பயன்படுத்தலாம். நாம் வாங்கும் கேன் தண்ணீர், இந்த முறையில் சுத்திகரிக்கப்படுகிறதா என்பதை கேட்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.கேன் தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்தினால் நல்லது என்றொரு நம்பிக்கை உள்ளது. அதிலும் பிரச்சினை இருக்கிறது. நாம் அதிகபட்சமாக 100 டிகிரிதான் கொதிக்க வைக்க முடியும். 150 டிகிரி கொதிநிலையிலும் உயிர் வாழும் நுண்ணுயிரிகளும் நீரில் உண்டு.100 சதவீதம் பாதுகாப்பான நீர் என்றால் அது பாதுகாப்பான நிலையில் இருக்கும்  போர்வெல் நீர்தான். மழை நீர் பூமிக்கடியில் செல்லச் செல்ல அதில் உள்ள எல்லா  கிருமிகளும் அழிந்து சுத்தமான நீராகிவிடும். நிலத்தடி நீர் மாசடையாமல்  இருந்தால் அதைவிட பாதுகாப்பான நீர் நாம் பயன்படுத்த வேறு எதுவும் இல்லை.

ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலுக்கு எவ்வளவு செலவு?

மூடி: 25 பைசா
பாட்டில்: ரூ 1.50 முதல் ரூ. 2.50
நீர் சுத்திகரிப்பு : 10 பைசா முதல் 25 பைசா
லேபிள்: 15 பைசா முதல் 50 பைசா
அட்டைப்பெட்டி : 50 பைசா
போக்குவரத்து: 10 பைசா முதல் 25 பைசா
மற்றவை: 25 பைசா
மொத்தச் செலவு : ரூ.2.85 முதல் 4.25 வரை
(லேபர், மார்க்கெட்டிங் செலவுகள் மற்றும் வரி தவிர்த்து)
கடைசியில் நாம் வாங்குவது : ரூ. 10 முதல்
Source: Centre for Science and Environment தரும் தகவல்களிலிருந்து பல்வேறு இடங்களில் திரட்டியது. இது தோராயமான தொகை. இடத்துக்கு இடம் பல்வேறு காரணங்களால் ஓரளவுக்கு கூடுதலாகவோ, குறைவாகவோ வேறுபடலாம்.

pregnant women dimaka.com abortions
naltrexone for alcohol cravings go naltrexone pain management
vivitrol shot low dose naltrexone uses what is the difference between naloxone and naltrexone
vivitrol shot is naltrexone a controlled substance what is the difference between naloxone and naltrexone
when to take naltrexone click revia side effects
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
alcohol naltrexone charamin.com naltrexone uk
naltrexone mechanism of action drug naltrexone low dose naltrexone australia

மேலும் செய்திகள்

Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்