விரல் வலியை போக்கும் நொச்சி
2016-08-05@ 12:40:08

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் கை, கால் விரல்களில் ஏற்படும் வீக்கம், வலி, விரைப்பு தன்மையை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். விரல்களில் விரைப்பு தன்மை இருக்கும்போது விரல்கள் வெண்மை நிறமாக மாறும்.
மூட்டுக்களில் வீக்கம், வலி ஏற்படும். ரத்தம் ஓட்டம் இல்லாத நிலையிலேயே வெண்மை நிறம் ஏற்படுகிறது. நொச்சி இலையை பயன்படுத்தி கை, கால் விரல்களில் ஏற்படும் விரைப்பு, வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
நொச்சி இலைகளை அரைத்து சாறு எடுக்கவும். ஒரு ஸ்பூன் சாறுடன் சம அளவு தேன் கலந்து காலையில் உணவுக்கு முன்பு சாப்பிட்டு வர விரல்களில் ஏற்படும் வலி, வீக்கம், விைரப்பு தன்மை குணமாகும். சர்க்கரை உள்ளவர்கள்
தேனுக்கு பதிலாக மிளகுப்பொடி சேர்க்கலாம். சீரகத்தை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மஞ்சளுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
இதை வடிகட்டி காலை, மாலை வேளையில் 50 முதல் 100 மில்லி வரை குடித்துவர மூட்டுக்களில் ஏற்படும் வீக்கம், வலி, விரைப்பு மறைந்து போகும். சீரகம் அற்புதமான மருந்தாகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
மஞ்சள் காமாலை நோய் நீக்கும் தன்மை கொண்டது. அமுக்ரா சூரணத்தை பயன்படுத்தி மருந்து விரல்களில் ஏற்படும் வலிக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் அமுக்ரா சூரணத்தில் சிறிது நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இந்த கரைசலுடன் காய்ச்சிய பால், தேன் கலந்து குடித்துவர கை, கால்கள் விரல்களில் ஏற்படும் வலி குறைய ஆரம்பிக்கும். அமுக்ரா சூரணம் உடல் தேற்றியாகவும், காய்ச்சலை தணிக்க கூடியதாகவும் விளங்குகிறது.
வலி, வீக்கத்தை போக்கும் தன்மை கொண்டது. விரல் வலிக்கான மேல்பூச்சு தைலம் தயாரிக்கலாம். 50 மில்லி விளக்கெண்ணெய், சம அளவு வேப்பெண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இதனுடன் சீரகப் பொடியை சேர்த்து சூடுபடுத்தவும். இந்த தைலத்தை ஆறவைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொண்டு விரல்களில் மசாஜ் செய்தால் கைகளில் ஏற்படும் விரைப்பு தன்மை இல்லாமல் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.
வீக்கம், வலி இல்லாமல் போகும். சீரகம் ரத்த ஓட்டத்தை சீர்படுத்த கூடியது. கூந்தல் பளபளப்பாக இருப்பதற்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். செம்பருத்தி பூவை அரைத்து குளிப்பதற்கு முன் கூந்தலில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால்
கூந்தல் மென்மையாகவும், பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
மேலும் செய்திகள்
வாழைக்கிழங்கும் பயன் தரும்...
பருவநிலை மாற்றத்தால் எலும்புகளுக்கும் பாதிப்பு
இயற்கையின் அருட்கொடை
கொரோனாவை வெல்லுமா வீட்டு வைத்தியம்?!
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் தேன்+பட்டைப்பொடி!
பழங்களும் பயன்களும்!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!