SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளம் தீ மண் சரிவு ரசாயனம் வறட்சி சுனாமி உயிர் பிழைப்பது எப்படி?

2016-01-28@ 15:47:28

நன்றி குங்குமம் டாக்டர்

பேரிடர் மேலாண்மை


சென்னை மற்றும் கடலூரை கதிகலங்க வைத்ததன் மூலம் எல்லோரையும் விழிப்படைய வைத்திருக்கிறது இந்தப் பெருமழை!
இயற்கைப் பேரிடர்களை வரும் முன்னர் தடுப்பது பற்றியும் வந்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் பற்றியும் பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

மழை, வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் மனிதர்களின் உடல்நலத்தை, மனநலத்தை, ஏன் உயிரையே தீர்மானிப்பதில் எத்தனை அதிகாரம் செலுத்துகிறது என்பதையும் இந்த பெருமழையில் புரிந்து கொண்டோம். இயற்கை எதுவும் செய்யும் என்பதற்கு இது ஒரு முன்னோட்டம்தான். இனிவரும் காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மக்கள்!இதுபோன்ற இயற்கைப் பேரிடர் ஏற்படும்போது நம்மை எப்படித் தற்காத்துக் கொள்வது என நிபுணர்களிடம் பேசினோம்.

வெள்ளம் முதல் மண் சரிவு வரை இடர்களிலிருந்து தப்பும் வழி சொல்கிறார் பேரிடர் மேலாண்மை மற்றும் சட்ட ஆலோசகர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி...

‘‘நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களால் ஆனது நம் உலகம். இந்த ஐந்து வகையிலும் நமக்கு எதிர்பாராத பேரிடர்கள் ஏற்படு கின்றன. இந்த இயற்கைப் பேரிடர் ஒவ்வொரு நாட்டுக்கு மட்டுமல்ல... ஒவ்வொரு மாநிலத்துக்கும் தகுந்தாற்போல ஏற்படுகிறது. உதாரணமாக, எரிமலை நம் நாட்டில் ஏற்படாது.  இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் புயல், மழையால் வெள்ளம், நிலநடுக்கம், மண் சரிவு, தீ விபத்துகள் போன்றவைதான் அதிகம் நடக்கின்றன. சுனாமி, ஒரு முறை வந்திருக்கிறது. தொழில்மயம் அதிகமாகி வருவதால் ரசாயனங்களாலும் தொழிற்சாலைகளாலும் ஏற்படும் இடர்பாடு
களையும் இவற்றுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பேரிடர்களைப் பொறுத்த வரை, வரும் முன் தடுக்கும் Pro-active management, வந்த பிறகு நிலைமையை சீராக்க மேற்கொள்ளும் Reactive management என்று இரு வகைகள் உண்டு. முக்கியமாக, எதிர்பாராத பேரிடர்கள் வரும்போது அவற்றைச் சமாளிக்கும் பேரிடர் மேலாண்மையை (Disaster management) மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
நிலநடுக்கம் வரும்போது கட்டிடங்களை விட்டு திறந்தவெளிக்கு வந்துவிட வேண்டும். லிஃப்ட்டை பயன்படுத்துவதை விட, படிகளில் வெளியேறுவது நல்லது.

கட்டிடத்துக்கு வெளியே இருக்கிற சன்ஷேட், பைப் போன்றவற்றின் மூலமாகவும் வெளியேறலாம். உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்கிற அளவு உயரத்தில் இருக்கும்பட்சத்தில் குதிப்பதிலும் தவறு இல்லை. இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் பயம், பதற்றம் வருவது இயல்பானதுதான். ஆனால், கடந்த கால இழப்புகளைப் பார்க்கும்போது பயமும் பதற்றமும்தான் இழப்புகளைப் பெரிதாக்கி இருக்கின்றன. அதனால், ஒரு நிமிடம் பிரச்னை என்ன, நிலைமை என்ன, குழந்தைகள், பெரியவர்கள், பெண்களைக் காப்பாற்றுவது எப்படி என்று சமயோசிதமாக யோசிக்க வேண்டும். விரைவாகவும் செயல்பட வேண்டும்.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் மண் சரிவு ஏற்படும்போதும், பாறைகள் உருண்டுவிழுகிறபோதும், பெரும்பாலும்  நேராக கீழ்நோக்கித்தான் மண்ணும் பாறைகளும் வரும். அதனால், இடது அல்லது வலது பக்கமாக பக்கவாட்டில் ஓடி தப்பித்து விட வேண்டும். வெள்ளத்தைப் பொறுத்த வரை உடனடியாக திடீரென்று அதிகமாகி விடாது என்பது சாதகமான அம்சம். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வெள்ளம் மேலே ஏறும். அதனால், அதிகாரிகள் வரட்டும் என்று காத்திருக்காமல், கூடிய வரை தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தை மடைமாற்றும் வேலைகளை தங்கள் பகுதிகளில் இருப்பவர்களே செய்து தற்காத்துக்கொள்ளலாம். பூகம்பம் வந்தால் கீழே வர வேண்டும் என்பது போல, மழை வெள்ளம் வரும்போது உயரமான இடங்களுக்குச் சென்றுவிட வேண்டும்.

சமீபத்திய சென்னை வெள்ளத்தில் நீச்சல் தெரிந்த பலர் தப்பித்திருக்கிறார்கள். மற்றவர்களையும் காப்பாற்றியிருக்கிறார்கள். அதனால், நீச்சலை ஒரு தற்காப்புப் பயிற்சியாக எல்லோருமே கற்றுக்கொள்வது  நல்லது. பள்ளியிலேயே இதை கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கலாம். அப்போதுதான் எளிதாக கற்றுக்கொள்கிற அளவு உடலும் மனதும் ஒத்துழைக்கும். இயற்கைப் பேரிடர்கள் நேரிடுகிற போது, வீட்டில் இருக்கும் பொருட்களை விட்டு வெளியேற மனமில்லாமல் பலரும் வீட்டுக்கு உள்ளே இருக்கிறார்கள். சென்னையில் நடந்த உயிரிழப்புகளுக்குப் பின்னால் இந்த மனநிலையும் காரணமாக இருந்தது.

இக்கட்டான நேரத்தில் உயிர்தான் முக்கியம் என்பதை உணர்ந்து உடனடியாக வெளியேற வேண்டும். அதிகபட்சம் 6 அல்லது 8 அடிக்கு மேல் வெள்ளம் வரப்போவதில்லை என்பதால் முடிந்த வரை பொருட்களை உயரமான இடத்தில் வைத்துவிட்டு, விரைந்து வெளியேறிவிட வேண்டும். வீடுகளில் இருக்கிற பொருட்களை மழை, தீ விபத்து, திருடு போவது போன்ற அசம்பாவிதங்களில் இழந்தால் நஷ்டஈடு பெறும் இன்ஸ்யூரன்ஸ் திட்டங்கள் இருக்கின்றன.

அவற்றை அறிந்து காப்பீடு செய்துகொள்ள வேண்டும். பொருட்களுக்கே இன்ஸ்யூரன்ஸ் அவசியம் என்கிற போது, மனிதர்களுக்கு எத்தனை அவசியம் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடியும். மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால், எந்த மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பொருளாதார ரீதியாக நம்மை பாதிக்காத வகையில் தப்பித்துக் கொள்ளலாம்’’ என்கிறார் சங்கர் கிருஷ்ணமுர்த்தி.

தொழிற் சாலைகள் மற்றும் ரசாயனங்களால் ஏற்படும் சிக்கல்களிலிருந்து தப்பிக்கும் வழிகளைச் சொல்கிறார் என்விரான்மென்ட்டல் ஹெல்த் இன்ஜினியரிங் துறையின் தலைவர் சங்கர். “வெள்ளப்பெருக்கால் தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் நீரில் கலந்து மாசுபடுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் சற்று அதிகமாகவே உள்ளது. இந்த கழிவுகள் சாக்கடை நீரிலும், வீடுகளிலுள்ள போர்வெல், கீழ்நிலைத் தொட்டிகள் போன்றவற்றிலும் கலப்பதால் மக்களுக்கு அதிகமான ஆபத்துகள் காத்திருக்கின்றன.

அளவுக்கு அதிகமான வெள்ளப்பெருக்கால் தொழிற்சாலைகளுக்குள் புகும் நீர், அங்குள்ள ரசாயனம் கலந்த நீரோடு நகரின் மற்ற கழிவுகளோடு சேர்ந்துவிடுவதால், ஈயம், பாதரசம், கந்தகம், நைட்ரேட் போன்ற ஆபத்தான ரசாயனங்கள் கலந்து நஞ்சாகிவிடுகின்றன. அசுத்தமான நீரை உபயோகிக்கும்போது, உடலில் செல்லும் ரசாயனங்கள் பல நோய்களுக்கு காரணமாகிவிடுகின்றன. வெள்ள நீர் வற்றிய பின்னரும் இந்த நச்சுகள் மண்ணில் தங்கக்கூடியவை.

மண் மூலம் பரவும் ரசாயனங்கள் உடலுக்குள் ஊடுருவி கல்லீரல், சருமம் உள்பட பல நோய்களை ஏற்படுத்தும். சில நோய்களின் விளைவுகள் உடனடியாகவும், சில நோய்களின் விளைவுகள் பல மாதங்களுக்குப் பிறகும் ஒவ்வொன்றாகத் தெரியவரும்.

வீடுகளில் கடிகாரம், டார்ச் லைட் மற்றும் செல்போன் பேட்டரிகளை மற்ற குப்பைகளோடு சேர்த்துப் போடுகிறோம். இதிலிருந்து வெளியேறும் ரசாயனங்களும் நீரில் கலந்து பெருமளவு மாசுபடுத்துகின்றன. இப்போது ஒவ்வொரு தெருக்களிலும் நீரில் அடித்துவரப்பட்ட குப்பைகளை டன் கணக்காக ஒரு இடத்தில் கொண்டு போய் மலைபோல குவிக்கின்றனர்.

சென்னை மாநகரின் குப்பைகளை பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில் மாநகராட்சியினர் சேர்ப்பது வழக்கம். இந்த வெள்ளத்தில் அந்த குப்பைக்கழிவுகள் நகரத்தில் ஊடுருவிவிட்டது. இந்தக் குப்பைக் கழிவுகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் ரசாயனங்களும் நீரில் கலந்து மேலும் பிரச்னைகளை அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்ட மக்களுக்காக ஆங்காங்கே நடத்தப்படும் மருத்துவ முகாம் மற்றும் தனியார் மருத்துவர்கள் ஊசி போட பயன்படுத்தும் சிரிஞ்சுகள், ரத்தங்கள் உறைந்த பஞ்சுகள் போன்றவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.
சானிட்டரி நாப்கின்கள், டயாபர்கள் போன்ற பயோமெடிக்கல் குப்பைகளால் மாசுபடும் நீரின் காரணமாக  கல்லீரல் அழற்சி ஏற்படும் என்பதால் அவற்றை அப்படியே எறியாமல் உரிய முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

பாதையோரக் கடைகளில் விற்கப்படும் காய்கறிகளை வாங்கி சமைக்கும்போது நன்றாக நீரில் சுத்தம் செய்துவிட்டு உபயோகிப்பது நல்லது. சிறு குழந்தைகள் அடிக்கடி கைகளை வாய்க்குக் கொண்டு செல்பவர்களாக இருப்பதால், இந்த நேரங்களில் அவர்களை மிகவும் பாதுகாப்பாக கவனிக்க வேண்டும். நீரில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயச் சூழலில் ஒவ்வொருவரும் இருப்பதால் வெறும் காலோடு செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெளியே சென்றுவிட்டு வந்தவுடன் கை, கால்களை நன்றாக நாம் சுத்தம் செய்து கொள்வதோடு, குழந்தைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க அறிவுறுத்துவதும் அவசியம்’’ என்கிறார் சங்கர்.

வெள்ளம் மற்றும் தீ விபத்துகள் போன்ற பேரிடர்களின்போது மக்கள் செய்யவேண்டிய வழிமுறைகள் குறித்துப் பேசுகிறார் தமிழ்நாடு தீயணைப்புப் படை மீட்புத் துறையின் துணை இயக்குநரான ப்ரியா ரவிச்சந்திரன். ‘‘மக்கள் பொதுவாக மழை வெள்ள காலங்களில் தங்களுக்குத் தேவையான பொருட்களை சேகரித்து வைத்துக் கொள்வது நல்லது. அவசர உதவிக்கான எண்களை போனிலும் டைரியிலும் குறித்து வைக்க வேண்டும். சரியான நேரத்துக்குத் தகவல் கொடுத்தால்தான் எங்களால் மீட்க முடியும்.
தண்ணீர் வீட்டுக்குள் புகுந்து இருந்தால் வீட்டின் மின் இணைப்பை துண்டிப்பது அவசியம். ஏனெனில், மின்சாரமானது தண்ணீரில் கசிந்து தாக்கக்கூடிய அபாயத்தை உருவாக்கிவிடும்.

பேரிடர்களில் தீ விபத்து முக்கியமானது. பெரும்பாலான தீ விபத்துகளுக்குக் கவனக்குறைவே காரணமாக இருக்கிறது. மின்சார சாதனங்களை தவறாக பயன்படுத்துவதாலும் தீ விபத்து ஏற்படுகிறது. தொழிற்சாலைகளில் ஏற்படும் பெரும்பாலான தீ விபத்துகளுக்கும் மின் கசிவே காரணமாக இருக்கிறது. மின்சார சாதனங்களுக்கு பக்கத்தில் தேவையற்ற பொருட்களை அடுக்கி வைத்திருப்பதும் இந்த அபாயத்தை அதிகப்படுத்தும்.

தீ விபத்து ஏற்படும்போது தீ உடலில் பற்றினால் தரையில் படுத்து உருள வேண்டும். ஓடினால் தீ அதிகமாக பரவும். அடுத்தவர் மீது தீ பரவினால் அவர்களை கீழே தள்ளி உருளச் செய்ய வேண்டும். முடிந்தால் அவர்கள் மீது ஈரச்சாக்கைப் போட்டு தீயை அணைக்க வேண்டும். தீ பரவும் இடங்களில் நிற்கக்கூடாது. தீ பெரிய அளவில் பரவி அணைக்க முடியாத அளவில் இருந்தால் 101 மற்றும் 102 என்ற எண்களுக்கு போன் செய்து தீயணைப்புத் துறையினரின் உதவியை நாடவேண்டும்.’’

இந்தியா ஒரு வெப்ப மண்டல நாடு என்பதால் வெப்பம் நமக்கு பழகிப்போனதுதான். மழை பொய்த்து வெப்பம் அதிகரித்து அதன் காரணமாக ஏற்படும் வறட்சி என்பது அன்றாட வாழ்க்கைச் சூழலையே சிதைத்து விடும். வெப்பம் மற்றும் அதன் காரணமான வறட்சியை சமாளிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? சூழலியலாளரும் எழுத்தாளருமான நக்கீரனிடம் கேட்டோம்...

கோடை வெயிலின் உக்கிரத்தால் இறந்து போன செய்திகளைக் கேட்டிருப்போம். உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தும் உப்பும் வெளியேறி விடுவதுதான் இதற்குக் காரணம். வியர்வை சுரப்பிகள் மூலம் அதிகமாக வியர்வை சுரந்து நீரையும் உப்பையும் வெளியேற்றி விடுகின்றன. இதற்கு போதுமான தண்ணீர் அருந்த வேண்டும் என்பதுடன் கோடைக்காலங்களில் மோர் அருந்தவும் வேண்டும். நீர் மோரில் உள்ள நீரும் உப்பும் சம அளவில் உடலுக்குக் கிடைப்பதால் நீர்வறட்சி ஏற்படாது. இளநீர், நுங்கு மற்றும் பழ வகைகளில் நீரும் உப்பும் இருக்கிறது. பழத்தைச் சாறாக்கிக் குடிக்கும்போது அதனுள் சர்க்கரையை கலந்துவிடுவதால், உப்பு நமக்குக் கிடைப்பதில்லை என்பதால் ஜூஸ் வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

வீட்டைச் சுற்றி மரங்கள் இருந்தாலே வெப்பத்தின் தாக்கம் குறைந்து விடும். குறிப்பாக புங்கை மரங்கள் இருந்தால் வெப்பத்தின் தாக்கமே இருக்காது. தமிழகத்தின் நில அமைப்புப்படி கோடையில் வட மேற்கு பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.  எனவே, அத்திசையில் வீடு கட்டக்கூடாது. வீட்டில் முற்றங்கள் வைத்துக் கட்டும் பழக்கம் இன்று மிகவும் அருகி விட்டது. வெப்பம் அதிகரிக்கும்போது காற்று மேல்நோக்கி எழும். மேலே எழும் காற்றும் முற்றம் - அதாவது, வென்ட்டிலேஷன் வழியாக வெளியேறி விடும்.

‘எட்டு வருஷத்துக்கு ஒன்னு மொட்ட வருஷம்’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக ஒரு நிலத்தை வறட்சியும் மழையும் தாக்கும் என்பதுதான் இயற்கை. அந்தத் தாக்கத்தில் தன்னை தகவமைத்துக் கொள்வதற்கான வாழ்க்கை முறை நமது முன்னோரிடம் இருந்தது. அது இப்போது நம்மிடம் இல்லை. வறட்சிக் காலத்தில் விளையக்கூடிய நெல் ரகங்களும் காய்கறி வகைகளும் இருந்தன. இதனால் உணவுப் பஞ்சம் இல்லாமல் தங்களை தற்காத்துக் கொண்டார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கை முறையை மீட்டெடுப்பதுதான் வறட்சி, மழை வெள்ளம் என எப்படிப்பட்ட இயற்கைப் பேரிடரிலிருந்தும் மீள்வதற்கான நிரந்தரத் தீர்வாக இருக்கும்’’ என்கிறார்.

சுனாமி தமிழக கடலோரங்களைச் சூறையாடி 9 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. இப்பேரழிவு இனி ஏற்பட்டால் எப்படி தற்காத்துக் கொள்வது என்கிற கேள்வியை சூழலியலாளர் கோ.சுந்தரராஜனிடம் கேட்டோம். ‘‘சுனாமி வருவதைத் தடுக்க முடியாது என்றாலும், முன்கூட்டியே கண்டறிய முடியும். சுனாமி வரப்போகிறது என்பதை அறிந்ததும் கடலோரத்தில் வாழ்கிற மக்கள் எல்லோரும் வெளியேற்றப்பட்டு,  பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட வேண்டும். அந்த இடங்கள் சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும் என்பதும் அவசியம்’’ என்கிறார் சுந்தரராஜன்.

இதுபோன்ற நேரங்களில் உயிர்க்கொல்லி நோய்களைத் தடுப்பது மற்றும் முதலுதவி சிகிச்சை பற்றி விபத்து மற்றும் அவசரசிகிச்சை பிரிவு மருத்துவரான சசிகுமார் விளக்குகிறார். ‘‘தொடர் மழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகளால் ஆபத்தை உண்டாக்கக்கூடிய எலி, கொசு போன்றவற்றால் காலரா, டைபாய்டு, டெங்கு, மஞ்சள் காமாலை, வாந்திபேதி, எலிக்காய்ச்சல் போன்றவை ஏற்படுவது வாடிக்கையான ஒன்றுதான். இவற்றை வரும்முன் காப்பதுதான் சிறந்த வழி.

இயற்கை பேரழிவின்போது, தண்ணீர் மூலம் பரவக்கூடிய நோய்களைத் தடுப்பதற்கு சுகாதாரமாக இருப்பது அவசியம். சமைப்பதற்கு முன்னும், உணவு பரிமாறும் முன்னரும் சுத்தமாகக் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். சாப்பிடும் முன்னர் எப்போதுமே கைகளை சுத்தமாகக் கழுவிக் கொள்வது நம் உடல்நலத்தைப் பாதுகாக்கும். இயற்கை உபாதைகளுக்கு சென்று வந்தபின்னும் கை மற்றும் கால்களை சுத்தம் செய்ய வேண்டும். பொதுவாக, நாய், பூனை ஆகிய வளர்ப்புப் பிராணிகளின் எச்சில், முடி போன்றவற்றால் தொற்றுநோய் பரவக்கூடிய வாய்ப்புகள் இந்த பேரிடர் காலத்தில் அதிகம். அத்தகைய நேரங்களில் வளர்ப்பு பிராணிகளுடன் நேரத்தை செலவழித்தால் கிருமிநாசினிகளைப் பயன்படுத்திக் கைகளைக் கழுவிவிட வேண்டும்.

ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப்பண்டங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பிஸ்கெட், பிரெட், ஏற்கனவே வெட்டி வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இயற்கைப் பேரிடர் காலத்தில் மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். பயம், பதற்றம் காரணமாக மன அழுத்த நோய்களால் பாதிக்கப்படுவார்கள். இதற்கு, மனநல மருத்துவரை அணுகி மன நல ஆலோசனை பெற்றுக் கொள்வதும் நல்லது.’’

- குங்குமம் டாக்டர் டீம்

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
coupons cialis cialis coupon codes new prescription coupon
concord neo concordia concord neo
concord neo concordia concord neo
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion arguments cheap abortions second trimester abortion
feldene precio feldene d feldene gel precio
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
amoxicilline amoxicillin amoxicillin nedir
viagra naturel viagra femme viagra femme
viagra prodej viagra online viagra prodej
viagra prodej viagra koupit viagra prodej
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret viagra helyett viagra cena
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
abortion price home abortion pill abortion pill is murder
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros blog.griblivet.dk flagyl
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston cijena bez recepta duphaston tablete duphaston tablete za odgodu menstruacije
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
neurontin gabapentin neurontin 400 neurontin
neurontin gabapentin neurontin 400 neurontin
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
duphaston forum duphaston duphaston i ovulacija
duphaston forum house.raupes.net duphaston i ovulacija
lamisil crema lamisil lamisil spray
cialis online coupon cialis.com coupons coupon for free cialis
cialis online coupon cialis.com coupons coupon for free cialis
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
cialis coupon 2015 cialis.com coupons free cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
vermox prospect vermox mikor hat vermox
vermox prospect vermox mikor hat vermox
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill abortion pill price abortion pill side effects
vermox pret corladjunin.org.pe vermox prospect
prescription discount coupons albayraq-uae.com online cialis coupons
herbal abortion pill agama-rc.com information about abortion pill
cialis coupons free achrom.be lilly coupons for cialis
cialis coupons free cialis coupons printable lilly coupons for cialis
how much do abortion pill cost cheap abortion pill cost of medical abortion
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
cialis cialis 20 cialis tablet
cialis online coupon free cialis samples coupon cialis savings and coupons
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
vermox suspenzija vermox cijena vermox tablete nuspojave
abortion pill costs abortion pill cost about abortion pill
voltaren patch bilie.org voltaren ampul
lamisil crema lamisil pastillas lamisil
prescription discounts cards iis75europeanhosting.hostforlife.eu printable coupons for cialis
abortion clinics rochester ny how long does an abortion take after morning pill
naltrexone for alcohol cravings link naltrexone pain management
lowdosenaltrexone org site naltrexone nausea
side effects of naltrexone 50 mg read what is naltrexone
where to get naltrexone implant site stopping ldn
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
low dose ldn blog.admissionnews.com ldn online
naltrexone moa skydtsgaard.dk naltrexone medication
revia medication partickcurlingclub.co.uk ldn colitis
opioid antagonists for alcohol dependence half life of naltrexone naltrexone fibromyalgia side effects
buy naltrexone how does naltrexone make you feel ldn naltrexone

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

 • 18-02-2020

  18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்