SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அக்கா ஸ்ட்ரிக்ட்... அம்மா ஃப்ரெண்ட்லி!

2022-10-07@ 15:57:54

நன்றி குங்குமம் தோழி

சின்னத்திரை நடிகை ஸ்ரித்திகா


‘‘நாம் மனம் விட்டுச் சிரித்து கஷ்டங்களை பரிமாறும் ஒரே உறவு நட்புதான். எந்த ஒரு சூழலிலும் நம்மை விட்டுக்கொடுக்காத உறவு. எங்கிருந்தாலும் நமக்காக வருவார்கள். அப்படிப்பட்ட நட்புகளை தான் சம்பாதித்து இருக்கேன். எனக்கு நிறைய நண்பர்கள் இல்லை என்றாலும். விரல் விட்டு எண்ணக்கூடிய அந்த நண்பர்கள் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்கள்’’ என்கிறார் மகராசி புகழ் ஸ்ரித்திகா. இவர் தன் வாழ்க்கையில் சந்தித்த நட்பு என்ற மகத்தான உறவு பற்றி விவரிக்கிறார்.

‘‘நான் பிறந்தது வளர்ந்தது படிச்சது எல்லாம் மலேசியாவில். அங்க பத்தாம் வகுப்பு வரை படிச்சேன். அதன் பிறகு சென்னையில் தான் +1 மற்றும் +2 முடிச்சேன். காரணம் என் அக்கா சுதா. அவங்க ளுக்குதனியார் ெதாலைக்காட்சியில் காம்பயரிங் வேலை கிடைச்சதால படிச்சிட்டே வேலையும் பார்த்து வந்தாங்க. +2 முடிச்சிட்டு விடுமுறையில் இருக்கும் போது அக்கா கூட ஸ்டுடியோ போவேன். அப்போது எனக்கும் காம்பயரிங் வாய்ப்பு வந்தது. நானும் அக்கா போல கம்பயரிங் செய்து கொண்டே பட்டப்படிப்பு படிக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனால் என்னால் ரெகுலர் கல்லூரி போக முடியல. காரணம் காம்பயரிங் மட்டுமில்லாமல் விளம்பரத்திலும் நடிச்சேன்.

கூடவே சினிமா வாய்ப்பும் கிடைச்சது. ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் இரண்டாவது ஹீரோயினா நடிச்சேன். அதன் பிறகு மதுரை டூ தேனிப் படத்தில் ஹீரோயினா நடிச்சேன். இந்த சமயத்தில் தான் திருமுருகன் சாரின் நாதஸ்வரம் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. அக்கா தான் நல்ல பிராஜக்ட், சன் டிவியில் பிரைம் ஸ்லாட், நல்ல பெயர் கிடைக்கும்ன்னு சொன்னா. ஐந்து வருஷம் அந்த சீரியல் சூப்பர் ஹிட். அதைத் தொடர்ந்து குலதெய்வம், கல்யாண பரிசு இப்ப மகராசி மற்றும் தெலுங்கு சீரியலில் நடிச்சிட்டு இருக்கேன்’’ என்றவர் தன்னுடைய பள்ளிக்கால நட்பு பற்றி விவரித்தார்.

‘‘நான் மலேசியாவில் படிச்சதால், அங்கு சைனீஸ் ஃப்ரெண்ட்ஸ் தான் இருந்தாங்க. நாங்க ஐந்து பேர். இதில் மூன்று பேர் சைனீஸ், நானும் சுமித்ராவும் இந்தியர்கள். ஏழாம் வகுப்பில் இருந்து தான் நாங்க ரொம்ப க்ளோசானோம். நாங்க ஐந்து பேருமே ரொம்ப நல்லா படிப்போம். முதல் ஐந்து ரேங்க் நாங்க தான் எடுப்போம். அதேபோல் ஸ்கூல் லீடர்களாகவும் நாங்க தான் இருப்போம். சொல்லப்போனா நாங்க ஐந்து பேருமே டீச்சர்ஸ் பெட்ன்னு தான் சொல்லணும்.

பள்ளியில் படிக்கும் போது பெரிசா எங்கும் வெளியே போனது கிடையாது. அப்படி நாங்க போன இடம்ன்னு பார்த்தா கெண்டிங் ஹைலாண்ட்ஸ். எல்லாரும் குடும்பத்துடன் போனோம். நாங்க படிப்பாளி என்பதால் பள்ளியில் சேட்டை எல்லாம் செய்ததில்லை. ஆனா வகுப்பு நடக்கும் போது தூங்கிடுவேன். காரணம் நான் இரவு பத்து மணிக்கு மேல தான் படிக்கவே ஆரம்பிப்பேன். இரண்டு மணி வரை படிப்பேன்.

காலை 6.30க்கு எழுந்து ஸ்கூலுக்கு போயிடுவேன். நான் ஸ்கூல் லீடர் என்பதால், லேட்டா போக முடியாது. அதனால் காலையில பள்ளி ஆரம்பிச்சதும் தூக்கம் கண்ணை சொருகிடும். நான் நல்லா படிப்பேன் என்பதால் டீச்சரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க. +1, +2 சென்னையில் படிக்கும் போது, ஜெனிஷா, நித்யா, டிவைனி, ஜெரால்டுன்னு நண்பர்கள் கிடைச்சாங்க. ஒரே கிளாஸ் என்பதால் ஒன்னா தான் உட்கார்ந்து இருப்போம். எனக்கு இயற்பியல் பாடம் சுத்தமா பிடிக்காது. அதனால் சைட்டில் டிபன் பாக்ஸ் இருக்கும். அதை பிரித்து டீச்சருக்கு தெரியாம சாப்பிடுவேன். சில சமயம் இவங்க ஏதாவது ேஜாக் சொல்வாங்க. என்னால சிரிப்பை கன்ட்ரோல் செய்யவே முடியாது. சிரிச்சு மாட்டிக்குவேன். இந்த மாதிரி சின்னச்சின்ன லூட்டிகள் தான் பள்ளியில் நடக்கும்.

இங்கேயும் நாங்க ஐந்து பேரும் எப்போதுமே ஒன்னா சுத்திட்டு இருப்போம். அதில் ஜெனிஷா, ஜெரால்ட் கொஞ்சம் ஸ்பெஷல். தேர்வு நடக்கும் போது எல்லாம் நான் ஜெனிஷா வீட்டிற்கு போயிடுவேன். மலேசியாவில் எல்லா பாடமும் மலாயில் தான் இருக்கும். இங்க எல்லாமே ஆங்கிலம் என்பதால், எனக்கு படிக்க ரொம்ப கஷ்டமா இருந்தது. குறிப்பா இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆங்கிலத்தில் புரியல. ஜெனிஷா தான் சொல்லிக் கொடுப்பா.

அதேபோல் சாட் உணவுகளும் முதன் முதலில் எனக்கு அறிமுகம் செய்தது ஜெனிஷா தான். மலேசியாவில் இது போன்ற உணவுகள் எல்லாம் கிடைக்காது. டியூஷன் முடிச்சிட்டு ஜெனிஷா வீட்டு அருகில் இருக்கும் சாட் உணவகத்தில் சாப்பிட்டு தான் வீட்டுக்கு போவோம். அப்புறம் ஜெரால்ட். இப்ப அவன் கல்யாணமாகி நியூசிலாந்தில் இருக்கான். அப்ப  அப்ப பேசுவான். முதன் முதலில் பைக்கில் அவன் கூடத்தான் நான் போனேன்’’ என்றவரின் ரொம்ப பெஸ்ட் ஃப்ரெண்ட் அவரின் அம்மாவாம்.

‘‘அம்மாவும் சரி அப்பாவும் சரி இரண்டு பேருமே ரொம்ப ஜாலி டைப். அப்பாக்கு நானும் அக்கான்னா ரொம்ப உயிர். நாங்க எது கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்திடுவார். அம்மா கிட்டத்தட்ட  ஃப்ரெண்ட் போல தான் நடந்துக்குவாங்க. நான் பீல்டுக்கு வந்தவுடன் ஷூட்டிங் போது எல்லாம் என் கூட வருவாங்க. எனக்கு என்ன தேவையோ பார்த்துப்பாங்க. அக்கா கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருப்பா. அவகிட்ட கொஞ்சம் பயம் இருக்கும். ஆனா அம்மாகிட்ட அந்த பயம் கூட இருக்காது. அக்காவுக்கு கல்யாணமாகி குழந்தை பிறந்ததால, அம்மாவால என்கூட ஷூட்டிங் வர முடியல. இருந்தாலும் ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும், அம்மாகிட்ட பேசின பிறகு தான் எனக்கு தூக்கமே வரும்.

சில சமயம் ஷூட்டிங்கில் பிரேக் நேரத்தில் கூட அவங்ககிட்ட பேசிட்டு இருப்பேன். எது சரி தவறுன்னு அவங்க எடுத்து சொல்வாங்க. குறிப்பா இந்த துறையில் கிசு கிசு கூட வரும். அந்த நேரத்தில் அதை எப்படி எதிர் கொள்ளணும்ன்னு கத்து தந்திருக்காங்க. ஷூட்டிங்கில் வரும் பிரச்னையை டென்ஷன் இல்லாம எப்படி ஹாண்டில் செய்யணும்ன்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க. எந்த ஒரு விஷயத்தையும் பாசிடிவ்வா பார்க்க சொல்வாங்க. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் கைப்பிடித்து அழைச்சு வந்ததால தான் என்னால் இவ்வளவு காலம் இந்த துறையில் நீடிச்சிருக்க முடியுது.

என்னுடைய இரண்டாவது அம்மா அக்காதான். சின்ன வயசில் நாங்க போடாத சண்டை கிடையாது. டீன் ஏஜ் பருவம் வந்த பிறகு எனக்காக எல்லாமே அவதான் பார்த்து பார்த்து செய்தா. என்னை படிக்க வச்சது, சீரியலில் நல்ல ஆஃபரை தேர்வு செய்து கொடுத்ததும் அவ தான். அம்மா, அக்காவை அடுத்து என் குடும்பத்தில் பார்த்தா என் தம்பி ராஜா. சித்தி பையன். பிரபல நடிகர் பாலய்யா அவர்களின் பேரன். நாங்க இரண்டு பேரும் சேர்ந்தா உடனே அவன் பைக்கில் ஊர் சுற்ற ஆரம்பிச்சிடுவோம்.

அம்மா, அப்பா, அக்கா ஒரு குடும்பம் என்றால்... நான் நடிச்ச ஒவ்வொரு சீரியலும் என்னுடைய மற்றொரு குடும்பம்ன்னு தான் சொல்லணும். இதில் நான் எல்லாரிடமும் நல்லா பேசுவேன். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டும் தான் நம்முடைய வேவ்லெந்த்துக்கு நெருக்கமா இருப்பாங்க. அப்படிப் பார்த்தா இப்ப மகராசியில் எனக்கு ேஜாடியா நடிக்கும் ஆர்யன். இவர் பிரபல நடிகர்
எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன். என்னுடைய பாட்டி எஸ்.எஸ்.ஆர் அவர்களின் இசைக் குழுவில் பாட்டு பாடி இருக்காங்க. நான் அக்கா, அம்மா எல்லாரும் நல்லா பாடுவோம்.

இசை சார்ந்து கத்துக்கணும் தான் நானும் அக்காவும் சென்னைக்கு வந்தோம். ஆனால் சீரியலில் நடிக்க வந்துட்டோம். அப்படியும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் பாட்டு தான் எங்களின் பொழுதுபோக்கா இருக்கும். ஆர்யனும் நானும் இசையால தான் நண்பர்களானோம். அவர் கர்நாடக சங்கீதம் முறையா பயின்றிருக்கார். ரெக்கார்டிங் ஸ்டுடியோ வச்சிருக்கார். நானும் அவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தா போதும் ஸ்பீக்கர்ல பாட்டு போட்டு பாடிக் கொண்டு இருப்போம்.

அவர் வீட்டிற்கு போனாலும், அங்கு கரோக்கி கச்சேரி நடக்கும். இரண்டு பேருக்குமே பாடத் தெரியும் என்பதால், இசை சார்ந்து ஏதாவது செய்யலாம்ன்னு நினைச்சோம். ஆனால் சீரியலில் பிசியா இருப்பதால் நேரம் கிடைக்கல. இசை மட்டுமில்லை எதுனாலும் இப்ப ஆர்யனிடம் தான் ஷேர் செய்வேன்.

மஞ்சு, நாதஸ்வரம் டீமின் கேமராமேன் சரத் அவர்களின் மனைவி. நாதஸ்வரத்தில் நடிக்கும் போது தான் மஞ்சு எனக்கு அறிமுகம். நான் ஷூட்டிங் போகும் போது அம்மா இல்லாத குறையை தீர்த்தவங்க. ஷூட்டிங் மட்டுமில்லாமல், நாங்க வேறு ஊர்களுக்கு கலை நிகழ்ச்சிக்காக போவோம். அப்பெல்லாம் எனக்கு துணையா வருவாங்க. எங்க வீடு பக்கத்தில் தான் அவங்க வீடு. சினிமா கூட நாங்க இருவரும் தான் சேர்ந்து போவோம். இப்பவரைக்கும் எனக்கு ஒரு தேவைன்னா ஓடி வர்றவங்க அவங்க தான்’’ என்றார் ஸ்ரித்திகா.

செய்தி: ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட்பால்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaliand-monkey

  தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

 • light-show-28

  பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்