SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணக்க… ருசிக்க…

2022-07-07@ 15:21:41

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

குடும்பத்தினரையும், உற்றார், உறவினர்களையும் மகிழ்விக்க விருந்தோம்பலில் முக்கிய பங்கு வகிப்பது ‘சாப்பாடு’. அதில் நிறைவு ஏற்பட்டு விட்டால், அதன் சந்தோஷமே ஈடு இணையில்லாத ஒன்றாகும். அதற்கு சில எளிய டிப்ஸ்…

* சாம்பாரில் வெங்காயம் போடும்போது அதை வறுத்துப் போட்டால் சாம்பாரின் சுவை கூடும்.

* பருப்பு ரசம் வைக்கும்போது, தக்காளியும், அரை தேக்கரண்டி நெய்யும் சேர்த்தால் சுவையே அலாதிதான்.

* கீரையை சமைக்கும்போது, தேங்காய் எண்ணெயைக் கொண்டு தாளித்தால் அதிக மணத்துடனும், ருசியுடனும் இருக்கும்.

* எந்த பாயசம் செய்வதாக இருந்தாலும், அதில் ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவை அதிகமாகும்.

* தோசை மாவில் தேங்காய்ப்பாலை சேர்த்து தோசை வார்த்தால் மணமாக இருப்பதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கும்.

* ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய்யை காய வைத்து, பஜ்ஜி மாவில் ஊற்றி, மாவைக் கரைத்து பஜ்ஜி செய்தால் மணத்துடனும், ருசியுடனும் இருக்கும்.

* ரவா தோசை செய்யும்போது இரண்டு டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென இருக்கும்.

* ரசம் செய்து அடுப்பிலிருந்து இறக்கியவுடன் அதில் அரை தேக்கரண்டி சர்க்கரையை கலந்துவிட்டால் ரசம் சுவையாக இருக்கும்.

- அ. திவ்யா, காஞ்சிபுரம்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • vice-ele-6

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

  • cong-protest-5

    விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

  • school-girls-isro-5

    இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

  • america_nancy

    சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

  • icelanddd111

    ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்