SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுவையான காய்கறி வடாம்!

2021-04-08@ 17:56:59

நன்றி குங்குமம் தோழி

வெயில் காலம் துவங்கிவிட்டது. வடாம், வத்தல் என்று வீட்டில் அம்மாக்கள் அதற்காக தயாராகிக் கொண்டு இருப்பார்கள். ஒவ்வொரு நாளும் என்ன வத்தல் போடலாம்னு திட்டம்தீட்டும் பெண்களுக்கு அதற்கான டிப்ஸ்...

* வடாம் போடுவதற்கு பழைய அரிசிதான் நல்லது.

* 1 கிலோ பழைய பச்சரிசிக்கு 100 கிராம் ஜவ்வரிசி கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளவும். ஒரு பங்கு மாவிற்கு 2 பங்கு நீர் விட்டு கரைத்துக்கொண்டு பச்சை மிளகாய் அரைத்து சேர்த்து அடுப்பில் வைத்து நிதானமான தீயில் வேகவிட வேண்டும். உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து நன்கு கிளறி மாவு வெந்து பளபளப்பானதும் இறக்கிவிட வேண்டும். ஆறியதும் எண்ணெய் தடவிய ஷீட்டில் பிழிந்து நல்ல வெயிலில் காய விட வேண்டும்.

* மூன்று நாட்கள் நன்கு காய விட்டு பின் பாத்திரத்தில் வைத்துவிட நன்றாக இருக்கும்.

* எந்தவிதமான வடாமாக இருந்தாலும் மாவில் உப்பு, காரம், புளிப்பு பாதி அளவுதான் இருக்க வேண்டும். அப்போதுதான் காய்ந்த பிறகு பொரித்தால் சுவை சரியாக இருக்கும்.

* வடாம்களுக்கு நடுவில் காம்புடன் கூடிய சிகப்பு மிளகாய் வற்றல்களை ஆங்காங்கு போட்டு விட்டால் காகம் வராது.

* நன்றாக காய வைத்து எடுத்து வைத்தால்தான் நமுத்துப் போகாமல் பொரியும்போது க்ரிஸ்பாக இருக்கும்.

* அரிசி மாவில் போடுவதுபோலவே சிறுதானிய மாவு, ஜவ்வரிசி தனியாக என வடாம் செய்ய சுவையாக இருக்கும்.

* இடியாப்ப அச்சு, பிரண்டை வடிவ அச்சு, ஸ்டார் வடிவ அச்சு என வெரைட்டியாக பிழிந்து காய வைத்து பொரிக்க நன்றாக இருக்கும்.

* காய்கறி ஜூஸ் சேர்த்து (கேரட், தக்காளி, பீட்ரூட்…) தண்ணீருக்குப்பதில் ஜூஸ் கலந்து வடாம் தயாரிக்க சுவையாக இருக்கும்.

* சுண்டைக்காய், பாகற்காய், கொத்தவரங்காய், வெண்டைக்காய், கோவைக்காய் என காய்களை பாதி வேக வைத்து நிறம் மாறாமல் ஆவியில் வேக விட்டு, பின் காய வைத்து பொரிக்க சூப்பராக இருக்கும்.

* மோர் மிளகாய் போடும்போது சின்ன மிளகாய்களைத் தேர்ந்தெடுத்து ஊசியால் அங்கங்கு துளையிட்டு, உப்பு, வெந்தயம், சீரகம் தலா 2 டீஸ்பூன் போட்டு மோர் சேர்த்து அந்த தேவைக்கு கலவையில் ஊற விட்டு பின் காய விட்டு, சற்று காய்ந்ததும் மீதமுள்ள மோர் கலவையில் போட்டு, மறுநாள் நல்ல வெயிலில் காய விடவும். நன்கு காய்ந்ததும் டப்பாவில் வைக்க வேண்டும்.

தொகுப்பு: மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்