SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காதலர் பாதை!

2023-02-08@ 17:53:09

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

காதலர்களும்… புது மணத் தம்பதியினரும் எப்போதுமே காதல் மயக்கத்தில் இருப்பதால், தங்களுக்கென ஒரு வழியை கண்டுபிடித்து அதில் ரகசியமாய் பயணித்து அன்யோன்யமாய் இருப்பதை உலகம் முழுவதும் தெரிவிப்பார்கள். அவ்வாறு அவர்கள் பயணிக்கும் சில உலகப் புகழ் பெற்ற இடங்கள்.

*ஜப்பானின் மத்திய கிடாக்யுஷுவில் க்வாச்சி ப்யூஜி தோட்டம் உள்ளது. இங்கு விஸ்டெரியா பூக்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும். சுரங்கப்பாதை போல் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த தோட்டம் காதலர்களின் மனதைக் கவர்ந்த இடம். சீசனில் மட்டுமே இங்கு செல்ல அனுமதி. அதற்கு முன்பே பதிவு செய்திருக்க வேண்டும்.

*இந்தோனேஷியா பாலியில் அரிசி விளையும் வயல்கள் மிகவும் பிரபலம். அடுக்கு அடுக்கு படிக்கட்டுகள் போல் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த வயலினை அதிகாலை நேரத்தில் ஜோடியாக கைக் கோர்த்து நடந்தால் மனதுக்கு ரம்மியமாக இருக்கும். காதலர்களின் மற்றுமொரு பிடித்த ஸ்பாட் இது.

*உக்ரைனில் டனல் ஆஃப் லவ் என்ற சுரங்க ரயில் பாதை உள்ளது. கிளவன் மற்றும் ஆர்ஸ்ஹிவ் என்ற இரண்டு நகரத்தை இணைக்கும் வழியில் இந்த சுரங்க ரயில் பாதை அமைந்துள்ளது. இதன் மொத்த தூரம் 6.4 கிலோ மீட்டர். இதில் 4.9 கி.மீட்டர் காட்டினுள் செல்லும். பாதையின் இருபுறமும் செடிகள் பச்சை பசேலென்று அழகாக காட்சியளிக்கும். இந்த பாதை வழியாக ஒரு நாளைக்கு மூன்று தடவை மட்டுமே இந்த ரயில் பயணிக்கும். மற்ற நேரங்களில் இது காதலர்களின் சுரங்கப் பாதையாக மாறிவிடும்.

*நார்வேயில் கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரத்தில் ஒரு பாறை அமைந்துள்ளது. வெஸ்ட்லாந்து பகுதியில் அமைந்துள்ள இந்த பாறை செங்குத்து வடிவத்தில் அமைந்துள்ளது. இதனை ஏறி இறங்க மொத்தம் 27 கி.மீட்டர் பயணிக்க வேண்டும். நல்ல திடகாத்திரமாக இருப்பவர் என்றால் அவர்கள் ஏறி இறங்கவே சுமார் ஏழு மணி நேரமாகும்.

*பாரீஸ் நகரம் காதல் நகரமாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இங்குள்ள ஈபிள் டவர் காதல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், காதலர்கள் விரும்பி இங்கு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள்.

-  ராஜி ராதா, பெங்களூரூ.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்