SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2023-01-24@ 17:19:35

நன்றி குங்குமம் தோழி

*தேங்காய் துருவலை வதக்கிய பிறகு காய்கறி பொரியலில் சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும். சீக்கிரம் கெட்டுப் போகாது.

*தோசை மிளகாய்ப் பொடியில் வரமிளகாயைக் குறைத்து சுக்குப்பொடி சேர்த்தால் உடம்புக்கு நல்லது. எளிதில் ஜீரணமாகும். காரச் சுவையும் இருக்கும்.

- ஆர். பத்மப்ரியா, திருச்சி.

*சாம்பாரில் உப்பு அதிகமாகி விட்டால் வெறு சோற்றை ஒரு சிறிய உருண்டையாக உருட்டிப் போட்டு விட்டால் போதும். உப்புச் சுவை குறைந்து சகஜ நிலைக்கு வந்துவிடும்.

*காபி பொடியை பாட்டிலில் அடைத்து வெளியே வைத்தால் சில நாட்களில் கெட்டியாகிவிடும். அதனை பாட்டிலில் கொட்டியவுடன் ஃபிரிட்ஜில் வைத்தால் கெட்டியாகாது.

*வெந்த பயத்தம் பருப்போ, துவரம் பருப்போ மீந்து விட்டால் அவைகளையும் மாவுடன் சேர்த்து சப்பாத்தி செய்யலாம். வெந்தய கீரையையும் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி செய்யலாம்.

*தேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால் சுண்ணாம்பு சீக்கிரம் உலர்ந்து போகாமல் இருக்கும்.

- கே.எல்.புனிதவதி, கோவை.

*ஊறுகாய் போடும் போது ஊறுகாயின் மேல் சிறிதளவு எண்ணெய் தேங்கி நிற்கும்படி போட வேண்டும். அப்போது தான் காற்றிலுள்ள ஈரப்பதம் காரணமாக ஊறுகாய் எளிதில் கெடாமல் இருக்கும்.

*பப்பாளிக் காயை தோல் சீவி துண்டுகளாக நறுக்கிக் கொஞ்சம் புளி கரைத்த நீரை சேர்த்து வேகவைத்து, வடித்து விட்டு சிறிதளவு சாம்பார் பொடி அல்லது ரசப்பொடி சேர்த்து, அளவோடு எண்ணெய் விட்டு வதக்கி எடுத்தால் ருசியான பப்பாளிக்காய் சைட் டிஷ் தயார்.

- கே.சித்ரா, சென்னை.

*காப்பர் பாட்டம், நான்ஸ்டிக் போன்ற பாத்திர வகைகளை சமையலுக்குப் பயன்படுத்தும் போது, கேஸ் அடுப்பின் தீயை அதிகமாக வைத்து பயன்படுத்தக் கூடாது. தண்ணீர் அதிகம் இல்லாமல், தீயும் அதிகமாக இருந்தால் பாத்திரம் சீக்கிரம் கெட்டுவிடும்.

*கோஸை குக்கரில் ஐந்து நிமிடங்கள் வைத்து எடுத்து நறுக்கினால் எளிதாக நறுக்கலாம். நிறமும் மாறாது.
வைட்ட  மின்களும் குறையாது.

- ஜே. மீனாட்சி, சென்னை.

*பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி அப்பம் வார்த்தால் சரியாக வராது. சிறிய வாணலியை வைத்து கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி, அதில் அப்பம்
செய்தால் சரியாக வரும்.

*ரசத்தில் உப்பு அதிகமாகி விட்டால் அடுப்பிலிருந்து இறக்கியதும் எலுமிச்சம் பழச் சாறை சேர்க்கலாம். தக்காளியையும் சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு கொதிக்க வைக்கலாம். உப்பின் வேகம் குறைந்துவிடும்.

*பொரியல், கூட்டு போன்றவற்றில் உப்பு அதிகமாகி விட்டால், அடுப்பிலிருந்து இறக்கும் சமயம் சிறிதளவு தேங்காயைத் துருவி சேர்த்து கிளறினால் உப்பின் வேகம் குறையும்.

- எஸ்.பாரதி, மதுரை.

*தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுத்தம் பருப்புடன் சிறிதளவு துவரம் பருப்பும், அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்தால் தோசை சிவப்பாக வரும். ருசியும் அதிகம்.

*இட்லி, தோசை மாவு மிகவும் நுரைக்க இருந்தால் தோசை சரியாக வராது. அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் ரவையைக் கலந்து, தோசை ஊற்றி, சிறிது வெந்த பின்பு சிறிதளவு எண்ணெய் விட்டு எடுத்தால் ஒட்டாமல் வரும்.

*பருப்பு போட்டு வைத்த ரசம் மீதமாகி விட்டால், அதிலுள்ள கறிவேப்பிலையை எடுத்து விட்டு நன்கு கடைந்து, சப்பாத்திக்குப் பிசையும் மாவுடன் கலந்து தேவையானால் சிறிது மசாலாத் தூள் சேர்த்து சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும்.

- அ.ஜனனி பிரியா, சென்னை.

கொத்தமல்லி பொங்கல்

தேவையானவை:

பச்சரிசி - 250 கிராம்,
பாசிப்பருப்பு - 150 கிராம்,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
மிளகு - 1 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 2,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி,
கொத்தமல்லித்தழை - 4 கைப்பிடி,
நெய் - 6 தேக்கரண்டி,
முந்திரி - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு,
தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் அடி கனமான பாத்திரத்தில் 600 மில்லி தண்ணீர் ஊற்றவும். நன்றாக கழுவிய பச்சரிசி, பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், 3 தேக்கரண்டி நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து குழைவாக வேக வைக்கவும். பிறகு வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்கவும். பின்னர் அதை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பொங்கலுடன் கொத்தமல்லி விழுதை சேர்த்து கிளறவும். மீதமுள்ள நெய்யில் முந்திரியை போட்டு பொன்னிறமாக வதக்கி, நெய்யுடன் பொங்கலில் ஊற்றிக் கிளறவும். இப்பொழுது சுவையான கொத்தமல்லி பொங்கல் தயார்.

- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-senthilbalaji-8

    சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

  • athisayangal

    நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

  • perunad

    பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

  • turkeydeath11

    துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

  • lantern-festival-china

    உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்