SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2023-01-19@ 17:26:44

நன்றி குங்குமம் தோழி

*பூரி செய்ய மாவை தயாரிக்கும் போது உடனே பயன்படுத்திவிட வேண்டும். அதிக நேரம் கழித்து பூரி சுட்டால் அதிகமான எண்ணெயைக் குடிக்கும்.

*வெண்ணெயில் சிறிது  உப்பைத் தூவி விட்டால் அது அதிக நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் சிறிது கலந்தால்  மிகவும் சுவையாக இருக்கும்.

*நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் ஃபிரஷ்ஷாக இருக்கும்.

- சுந்தரி காந்தி, சென்னை.

*சர்க்கரை, பால், நெய், ரவை தலா அரை கப் எடுத்து அதனுடன் 2 கப் பால் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அடிகனமான வாணலியில் சேர்த்துக் கிளறவும். எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வெந்ததும் இறக்கிப் பரிமாற ‘பால் அல்வா’ தயார்.

*தோசை மாவுடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், மல்லித்தழை, தேங்காய்த் துருவல், மிளகுத்தூள், மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து கலந்து, தோசைக்கல்லில் மெல்லிய தோசையாக ஊற்றி, நன்கு வெந்ததும் எடுத்து இட்லிப்பொடி சேர்த்துப் பரிமாறலாம்.

*மாங்காய்த்துருவலுடன், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். பெருங்காயம், மிளகுத்தூள் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். இரண்டு டேபிள் டீஸ்பூன் மைதாவும் சேர்க்கவும். கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டு, கலவையை உருட்டி, கைகளால் தட்டி, பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து நன்கு காய வைத்து எடுக்கவும். மாங்காய் அப்பளம் தயார்.

- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

*தேங்காய்க்குப் பதிலாக வேர்க்கடலை, முந்திரி போட்டு சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.

*தேங்காய் சட்னி அரைக்கும்போது பச்சை மிளகாய்க்குப் பதில் சிறு துண்டு இஞ்சியும், தண்ணீருக்குப்பதில் புளிக்காத மோரும் சேர்த்து செய்ய வெண்மை நிறத்துடன் பளிச்சென்று இருப்பதுடன் நெடுநேரம் கெடாமல் இருக்கும்.

*சட்னி செய்யும்போது சிறிது வெள்ளைப் பூண்டு சேர்க்க சுவை கூடும்.

*சின்ன வெங்காயத்தை சட்னி அரைத்து கடைசியாக சேர்க்கும்போதும், தாளிக்கும்போது அரிந்து சேர்க்க நன்றாக இருக்கும்.

- மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

*அரைத்த மாவு புளிக்காமல், பொங்காமல் இருக்க அதில் இரண்டு வெற்றிலை களைப் போட்டு வைக்கலாம்.

*எலுமிச்சை ஊறுகாயுடன் சிறிது வதக்கிய இஞ்சி துண்டுகள் சேர்த்தால் ருசி கூடும்.

- எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.

*தேன்குழல், சீடை, முறுக்கு செய்யும் மாவுடன் வெந்நீர் ஊற்றிப் பிசைந்து செய்தால், எத்தனை நாளானாலும் நமுத்துப் போகாது.

- ஆர்.கீதா, சென்னை.

*கறிவேப்பிலை பொடி, புதினா பொடி, கொத்தமல்லி பொடி போன்ற பொடி சாதம் கிளறும்போது ஒரு மூடி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து செய்தால் சாதம் பச்சைப் பசேலென இருப்பதுடன் சுவையும் கூடும்.

*தக்காளி சூப் கெட்டியாக வருவதற்கு தக்காளி பழங்களுடன் சில துண்டு பூசணிக்காயை போட்டு வேக விடுங்கள். இதனால் சத்தும், சுவையும்கூட அதிகரிக்கும்.

- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

*பருப்புப்பொடி அரைக்கும்போது, இரண்டு டீஸ்பூன் ஓமம் சேர்த்து அரைத்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நல்லது.

*முட்டைக்கோஸ் சமைக்கும்போது கொஞ்சம் பால் ஊற்றினால் அதிகமான சுவையும், சத்தும் கிடைக்கும்.

*பிரியாணி சமைக்கும்போது எலுமிச்சம்பழச்சாறு பிழிந்துவிட்டால் கட்டி பிடிக்காது. நல்ல நிறமும் பிடிக்கும்.

*முட்டை, இறைச்சியை வேக வைக்கும்போது லேசான தீயில் வேக வைத்தால் சத்துக்கள் வீணாகாது.

- எஸ்.சடையப்பன், திண்டுக்கல்.

*கார்ன் ப்ளேக்ஸை பாலில் கலந்துதான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. உப்பு, காரம் சேர்த்து தாளித்த தயிரில் கலந்து உண்டால் டேஸ்ட்டாக இருக்கும்.

*பச்சைக்காய்கறிகளை சாலட் செய்யும் முன்பு அதை வினிகரும், உப்பும் கலந்த நீரில் 10 நிமிடம் ஊற விட்டு, எடுத்துக்கழுவி விடவும். பூச்சிகள், அதன் முட்டைகள், புழுக்கள், அழுக்குகள் எல்லாம் சுத்தமாக அகன்று விடும்.

- அமுதா அசோக்ராஜா, திருச்சி.

*கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கினை சீவி கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் போட்டு தண்ணீரில் பாதி வேக வைத்து எடுத்து இட்லி மாவுடன் கலந்து இட்லியாக ஊற்றி வேக வைத்தால் சுவையான மசாலா இட்லி தயார். சுவையும் அருமையாக இருக்கும்.

*சிப்ஸ் செய்த பின்னர் உப்பு போட்டு பிசுறுவதைவிட எண்ணெயில் போடும் முன்பே உப்புக் கரைத்த தண்ணீரில் கிழங்கைப் போட்டு எடுத்து ஆற வைத்து பின்னர் பொரித்தெடுக்க உப்பு ஒரே சீராக இருக்கும்.

*ஃப்ரிட்ஜில் வைக்கும் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக பாலிதீன் கவரில் போட்டு வைத்தால் ஒரு பொருளின் வாசனை வேறு பொருளுக்குப்
போகாமல் இருக்கும்.

*ஜவ்வரிசியை ஊற வைக்காமல், தண்ணீருடன் சேர்த்துக் கிளறினால் வடாம் மணி மணியாக இருக்கும்.

- கே.ஆர்.வசந்தகுமாரி, சென்னை.

முளைப் பயறு அடை

தேவையானவை:

இட்லி அரிசி - ¼ கிலோ,
முளைகட்டிய பாசிப் பயறு,
முளைக்கட்டிய கொண்டைக் கடலை - தலா 1 கப்,
இஞ்சி - சிறிது,
பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் - 1 கப்,
காய்ந்த மிளகாய் - 4,
எண்ணெய்,
உப்பு - தேவையானது.

செய்முறை:

அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து கழுவி காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். முளைகட்டிய கொண்டைக் கடலை, பாசிப்பயறு, இஞ்சியை தனியாக அரைத்து, அரைத்த அரிசி மாவுடன் நன்கு கலக்கவும். பீர்க்கங்காயை பொடியாக நறுக்கி சேர்த்து கலக்கி அடுப்பில் தோசைக்கல்லில் மிதமான தீயில் வைத்து அடையாக தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேக விட்டு திருப்பி போட்டு எடுக்கவும். சத்தான அடை தயார்.

- எம்.வசந்தா, சென்னை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்