நன்றி சொல்லும் பொங்கல்!
2023-01-13@ 17:51:56

நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
உணவு தந்து நம்மை வாழவைக்கும் இயற்கைக்கும், சூரியனுக்கும், விவசாயிகள் நன்றி சொல்லும் தினமாக பொங்கல் வழிபாடு இருக்கிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழி அதனால்தான் வந்தது. அறுவடை முடிந்ததும் புத்தரிசியில் பொங்கல் வைத்து உழவுக்கு உதவிய கால்நடைகளுக்கு பொங்கல் பண்டிகைகளில் நன்றி சொல்வோம். அறுவடை தினத்தைக் கொண்டாடும் மரபு உலகெங்கும் உண்டு.
* ரோமானியர்கள் ‘செரிலியா’ என்ற பெயரில் அறுவடை தினத்தினை கொண்டாடுகிறார்கள். பழங்காலத்தில் அங்கு நடை பெற்ற திராட்சை விவசாயத்தை நினைவுபடுத்தும் வகையில் நடைபெறும் விழா இது. இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செய்யவே இந்த விழாவினை இன்றும் கடைப்பிடித்து நடத்துகின்றனர் ரோமானியர்கள்.
* நம்மைப் போல ஜப்பானியர்களும் நெல் புனிதமானது. அவர்களும் நெல் அறுவடை முடித்து, அறுவடைத் திருவிழா கொண்டாடுகிறார்கள். திருவிழா நாள் வரை புதிதாக விளைத்த நெல் அரிசியை யாரும் உண்ண மாட்டார்கள்.
* அமெரிக்கப் பழங்குடியினர்கள் ‘கிரீன் கார்ன் பெஸ்டிவல்’ என்ற பெயரில் சோளம் அறுவடை முடிந்ததும் விழா எடுக்கின்றனர். நல்ல விளைச்சல் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் விழா இது.
* சீனர்கள் நெல் மற்றும் கோதுமை அறுவடைக்கு பிறகு விழா கொண்டாடுகின்றனர். இவ்விழாவின் போது ‘மூன் கேக்’ என்னும் பாரம்பரியமான பலகாரத்தை உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்து உண்பார்கள். குடும்பத்துடன் இனைந்து இரவில் ‘நிலாவைப் பார்த்தல்’ சடங்கு தான் இந்த மூன் கேக் திருவிழா. அறுவடை எவ்வளவு சிறப்பாக நடைபெறுகிறதோ அதேேபால் அந்த தினத்தில் நிலா மற்ற நாட்களை விட மிகப் பெரிய வடிவில் காட்சியளிக்கும். அன்று முட்டை, இறைச்சி, தாமரை விதை அனைத்தும் கேக்கினுள் ஸ்டப் செய்து சமைக்கப்படும். அதைத்தான் அவர்கள் மூன் கேக் என்கிறார்கள்.
* வியாட்நாமில் ‘ரெட் திரங்து’ என்ற பெயரில் அறுவடை விழா கொண்டாடப்படுகிறது. வயலில் உழைத்த பெற்றோர்கள், அறுவடைக்குப் பிறகு தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த அறுவடை விழா.
* ஜெர்மனி நாட்டின் மலைகளில் மேய்ச்சல் முடித்து விட்டு, மேய்பவர்கள் தங்கள் ஆடு, மாடுகளுடன் வீடு திரும்பும் நாள் ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள். அது கால் நடைகளுக்கு நன்றி சொல்லும் விழா. இங்கு திராட்சை விளைச்சலைக் கொண்டாடி அறுவடைத் திருவிழா நடக்கிறது.
* மலேசியாவில் நெல் விளைச்சலுக்கு கடவுளுக்கு நன்றி செலுத்தி அறுவடை விழா கொண்டாடப்படுகிறது. புதிய அரிவாள்களால் நெல்லை அறுவடை செய்து, வயல் வெளிகளில் கூடி இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
* எகிப்து மக்கள் அறுவடைத் திருவிழாவில் நல்ல விளைச்சல் தந்த ‘மின்’ என்ற கடவுளை வழிபடுகின்றனர்.
தொகுப்பு - எஸ்.மாரிமுத்து, சென்னை.
Tags:
நன்றி சொல்லும் பொங்கல்!மேலும் செய்திகள்
ஆத்ம திருப்தி அளிக்கும் ‘வீடு திரும்புதல்’ திட்டம்!
‘அனைத்தும் சாத்தியம்’ (Museum of Possibilities)
மாற்றத்துக்கான பெண்கள் வான்காரி மாத்தாய்
வாழ்க்கை+வங்கி=வளம்!
மாற்றத்துக்கான பெண்கள் -முதல் பெண் பதிப்பாளர் அன்னை நாகம்மையார்
மருத்துவ வழிகாட்டும் ‘டாக்டர் நெட் இந்தியா’!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி