SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2022-12-29@ 16:07:18

நன்றி குங்குமம் தோழி

*ஃபில்டரில் காபி பொடி போடுவதற்கு முன் ஒரு மெல்லிய துணியை ஃபில்டரின் அளவுக்கு வெட்டி அதன் உள்ளே வைக்கவும். பின்பு அதன்மேல் காபி பொடியை போட்டு வெந்நீர் ஊற்றினால் ஃபில்டரின் உள்ளே துவாரங்கள் அடைத்துக்கொள்ளாது.

*அடைக்கு ஊறப் போடும்போது துவரம் பருப்புக்கு பதில் கொள்ளு பருப்பை ஊறப்போட்டால் அடை சுவையாக இருக்கும். வாயுத் தொல்லையும் இருக்காது.

*கண்ணாடி பாட்டில்கள் குறுகியதாக இருந்தால் அதை சுத்தம் செய்யும்போது கைவிரல்கள் உள்ளே போகாது. அத்தகைய பாட்டில்களை சுத்தம் செய்ய சுலபமான வழி எலுமிச்சம்பழத்தை சிறிதாக துண்டுகள் செய்து பாட்டிலில் போட்டு அதன் உள்ளே பாதியளவு தண்ணீர் விட்டுக் குலுக்கினால் கறைகள் போய்விடும்.

- ஏ.ஏஸ்.கோவிந்தராஜன், சென்னை.

*துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக் கடலையுடன் வர மிளகாய், பூண்டு, கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்து பாருங்கள். மிக ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும்.

*தோசைக்கு மாவு ஊற வைக்கப் போகிறீர்களா? சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வையுங்கள். தோசை நன்றாக வரும். மொறுமொறுப்பா கிரிஸ்ப்பா இருக்கும்.

- எச்.லோகவதி, மதுரை.

*புளிரசம் வைக்கும் போது மிளகை கொஞ்சம் அதிகமாக வைத்து அரைத்து ரசம் செய்தால் ரசம் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

*உளுந்தம் வடைக்கு மாவு ஆட்டும்போது கொஞ்சம் துவரம் பருப்பை சேர்த்து ஆட்டினால் வடை மெதுவாக இருக்கும்.

- விமலா சடையப்பன், திண்டுக்கல்.

*கேக் செய்யும் போது இன்ஸ்டன்ட் காபிபவுடர் 2 ஸ்பூன் கலந்தால் கேக் நல்ல கலரும், மணமும் தரும்.

*தோசை மாவில் கொஞ்சம் சர்க்கரை, 1 கைப்பிடி கடலை மாவு, ஒரு கைப்பிடி மைதா, ஒரு கைப்பிடி அரிசிமாவு எல்லாம் சேர்த்து தோசை வார்த்தால், ஹோட்டல் தோசை மாதிரியே கோல்டன் பிரவுன் கலரில் மொறுமொறு வென்று வரும்.

*பூரி சுடும் போது எப்போதும் முழு கோதுமை மாவையே பயன்படுத்த வேண்டும். மாவில் கொஞ்சம் சர்க்கரையும், ரவையும் சேர்த்துப் பிசைந்து செய்யவும். எண்ணெய் நன்றாக காய வேண்டும். ஆனால் புகையக் கூடாது. எண்ணெய் சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் புகையும் முன்பே பூரியை போட்டுப் பொரித்தால் உப்பலாக வரும்.

- அபர்ணா சுப்ரமணியம், சென்னை.

*அகத்திக் கீரையை வதக்கும்போது நெய், நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கினால் கசப்புத்தன்மை அகன்று சுவையாக இருக்கும்.

*பெசரட்டு செய்யும் போது சிறிது வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள பெசரட்டு அருமையாக இருக்கும்.

*மைசூர்பாகு, பர்பி, பூந்தி, லட்டு செய்யும் போது உதிர்ந்து விழுவதை மொத்தமாக எடுத்து வைத்து, பாயசம் செய்யும் போது கலந்தால் பாயசம் சுவையாக இருக்கும்.

* கரைத்த பஜ்ஜி மாவை மிக்ஸியில் கொட்டி இரண்டு சுற்று சுற்றி இறக்கி பிறகு பஜ்ஜி போட பஜ்ஜி மிருதுவாக உப்பலாக வரும்.

- ஆர்.பூஜா, சென்னை.

*ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையைத் தூவி, அதனுள் பிஸ்கட்டை வைத்தால் நீண்டநாட்கள் கெடாமல் இருக்கும்.

*அரிசி களைந்த நீரில் கீரைகளை ஊறவைத்து பிறகு சமையல் செய்து சாப்பிட்டால் நிறம் மாறாமல் பச்சைப் பசேலென இருக்கும். சுவையும் சூப்பராக இருக்கும்.

- எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.

*சாம்பாரில் உப்பு அதிகமானால், கரண்டியை அடுப்பில் நன்றாக சூடு பண்ணி சாம்பாரில் போட்டு விட சூடான கரண்டி உப்பை எடுத்துவிடும்.

*இட்லி பொடி செய்யும் போது சிறிது கறிவேப்பிலை போட்டு வறுத்து பொடித்து சேர்த்தால் ருசியாக இருக்கும்.

- கே.ராகவி, தி.மலை.

*சிறிதளவே மிஞ்சும் கூட்டு, அவியல் போன்றவற்றை பாத்திரத்துடன் பிரஷர் பேனில் வைத்து ஒரு விசில் வந்ததும் நிறுத்திடலாம். அப்பொழுது தயாரித்தது போல் இருக்கும்.

*ஜாம் பதமாகி விட்டதா என்று பார்ப்பதற்கு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதில் ஜாமை போட்டால் கரையாமல் இருக்க வேண்டும்.

*தண்டுக் கீரையில் ஒரு கைப்பிடி துவரம் பருப்பு, ஒரு தக்காளி, சிறு புளி சேர்த்து புளிக்குழம்பாக செய்து பாருங்கள், வெகு சுவையாக இருக்கும்.

- க.லெட்சுமி, தென்காசி.

மைதா கேக்

தேவையானவை:  

சர்க்கரை - 3/4 கப்,
முட்டை - 3,
மைதா மாவு - 3/4 கப்,
பேக்கிங் பவுடர் - 1/2 ஸ்பூன்,
உப்பு - சிறிதளவு.

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அவற்றில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி பீட்டர் கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும். பின் அடித்த முட்டையுடன் 3/4 கப் சலித்த மைதா மாவு மற்றும் 3/4 கப் மிக்சியில் பவுடர் செய்த சர்க்கரை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பிறகு 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு நன்றாக கலந்து கொள்ளவும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு தோசைக் கல்லை வைத்து சூடேற்ற வேண்டும். பின் ஒரு நான்ஸ்டிக் கடாயை எடுத்துக் கொள்ளுங்கள் அவற்றில் நெய் அல்லது பட்டர் ஏதேனும் ஒன்றை நன்றாக தடவிவிடுங்கள். அதில் கலந்து வைத்துள்ள கேக் மாவை இந்த நான்ஸ்டிக் கடாயில் ஊற்றி, அடுப்பில் வைத்துள்ள தோசை கல் மீது வைத்து மூடிவிடுங்கள். பிறகு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 45 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி கேக்கை தனியாக எடுத்தால் சுவையான கேக் தயார். விருப்பமிருந்தால் இதனுடன் கிரீம் தடவியும் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

- அமுதா அசோக் ராஜா, திருச்சி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்