SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுவையான கேக் ரெசிபீஸ்

2022-12-27@ 17:55:33

நன்றி குங்குமம் தோழி

கிறிஸ்துமஸ் துவங்கி புத்தாண்டு வரை கொண்டாட்டங்களில் கேக், சாக்லெட் மற்றும் குக்கீஸ் கண்டிப்பாக இடம் பெறும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் கேக் உணவினை விரும்பி சாப்பிடுவார்கள். அவற்றை கடையில்தான் வாங்க வேண்டும் என்றில்லை... வீட்டிலேயே அதை சுலபமாக செய்வது குறித்து விளக்கம் அளித்துள்ளார் சமையல் கலைஞர் வசந்தா. இனி வீட்டிலேயே சுவையான கேக்குகளை செய்து அசத்தலாமே..!

ஃப்ரூட் மஃபின்ஸ்

தேவையானவை:

மைதா,
சர்க்கரை,
வெண்ணெய் - தலா 1 கப்,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்,
முட்டை - 2,
டூட்டி ஃப்ரூட்டி - 2 ஸ்பூன்,
அலங்கரிக்க - பட்டர் கிரீம்.

செய்முறை:

வெண்ணெய், சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும். முட்டை உடைந்து ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக அடிக்கவும். மைதா, பேக்கிங் பவுடரை கலந்து சலிக்கவும். அடித்த கலவையில் மைதா, பேக்கிங் பவுடர் எசன்ஸ் சேர்த்து பிசையவும். மைதா சேர்ப்பதற்கு முன் வரை நன்றாக அடிக்கவும். பின் அடிக்கக்கூடாது. கடைசியாக டூட்டி ஃப்ரூட்டியைச் சேர்த்து மஃபின் கப்களில் பாதியளவு ஊற்றவும். மைக்ரோவேவ் அவனில் 150 டிகிரி சென்டிகிரேடில் 15 நிமிடம் ப்ரீ ஹீட் செய்து, பின் 165 டிகிரி வெப்ப நிலையில் 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். வெளியே எடுத்ததும் மேலே ஐசிங் கலவையால் டிசைன் செய்து பரிமாறுங்கள்.

வாழைப்பழ வால்நட் கேக்

தேவையானவை:

மைதாமாவு - 1½ கப்,
உப்பு - ஒரு சிட்டிகை,
வெண்ணெய்,
சர்க்கரை - தலா ½ கப்,
முட்டை - 2,
வெனிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன்,
பால் - 4 டேபிள் ஸ்பூன்,
வாழைப்பழம் - 2,
வால்நட் - 3 ஸ்பூன்.

செய்முறை:  

மைதா, உப்பு ஒன்றாகக் கலந்து சலித்து தனியாக வைக்கவும். வெண்ணெயையும், முட்டையையும் எலக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடித்து கலக்கவும். இத்துடன் வெனிலா எசன்ஸை கலக்கவும். பின் மசித்த வாழைப்பழம், வால்நட் இவைகளையும் கலக்கவும். இதனுடன் மைதாவையும், பாலையும் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கேக் கலவையை வெண்ணெய் தடவிய தட்டில் வைத்து அவனில் 170c கிரேடில் 30-40 நிமிடம் வேக விட்டு கேக் வெந்ததும் அதை ஆற வைத்து, 10 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைத்து துண்டு போடவும்.

குயின் கப் கேக்  

தேவையானவை:

மைதா மாவு - 1 கப்,
உப்பு - ஒரு சிட்டிகை,
வெண்ணெய் - ¼ கப்,
சர்க்கரை - ¾ கப்,
முட்டை - 1,
வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்,
பால் - 2 டேபிள் ஸ்பூன்,
உலர்ந்த திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்,
நறுக்கிய செர்ரி பழம் - 1 ஸ்பூன்.

செய்முறை:

மைதாமாவு, உப்பு சேர்த்து சலிக்கவும். வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் க்ரீம் பதம் வரும் வரை எலக்ட்ரிக் பீட்டரால் அடிக்கவும். இத்துடன் மைதா, பாலையும் சிறிது, சிறிதாக சேர்த்து கலக்கவும். இத்துடன் உலர்ந்த திராட்சை, செர்ரி கலந்து கலவை தயார் செய்யவும். இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய பேப்பர் கப்களில் பாதியளவு மட்டும் ஊற்றி அவனில் 170 சென்டிகிரேடில் 20 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். இதனை கப் கேக் மோல்டிலும் ஊற்றி வேகவைக்கலாம்.

க்ரீம் பிஸ்கெட்

தேவையானவை:

கோக்கோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்,
மைதா - 1½ கப்,
ஏலப்பொடி - ½ டீஸ்பூன்,
சமையல் சோடா - ½ டீஸ்பூன்,
தேன் - 2 டேபிள் ஸ்பூன்,
சர்க்கரை - 1½ கப்,
பால் - சிறிது,
வெண்ணெய் - 1½ கப்.

செய்முறை:

மைதா, பேக்கிங் சோடா, ஏலப்பொடி, கோக்கோ பவுடர் சேர்த்து சலித்து, ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து குழைய அடித்து தேன் சேர்த்து கலக்கவும். இதில் சலித்த மாவை கட்டி தட்டாமல் சேர்த்து பால் சிறிது தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசையவும். இதை வட்டமாக இட்டு பிஸ்கெட் கட்டர் அல்லது மூடியை வைத்து அழுத்தி வெட்டி எடுக்கவும். பிஸ்கெட்டின் மேல் முள்கரண்டியால் லேசாக குத்தி சர்க்கரை தூவி ப்ரீஹீட் செய்த ஓவனில் 180 சென்டிகிரேடில் 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.

பிஸ்கெட் க்ரீம் செய்ய:

வெண்ணெய் - 1 குழிக்கரண்டி,
பொடித்த சர்க்கரை - ¼ கப்,
கோக்கோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்,

க்ரீம் செய்ய வேண்டிய பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு குழைய அடித்து பேக் செய்த 2 பிஸ்கெட் நடுவே தடவி மூடவும். இப்படியே எல்லா பிஸ்கெட்களையும் தயார் செய்யவும்.

சாக்கோ நட்ஸ் கேக்

தேவையானவை:

பொட்டுக்கடலை மாவு - 1 கப்,
நட்ஸ்கள் - தலா 1 கப்,
கண்டன்ஸ்ட் மில்க் - ½ கப்,
தேன் - 2 டேபிள் ஸ்பூன்,
கோக்கோ பவுடர்,
சாக்கோ சிப்ஸ் - தலா ¼ கப்,
உருக்கிய வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
ஏலப்பொடி - 1 சிட்டிகை.

செய்முறை:

பொட்டுக்கடலை மாவு மற்ற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து வெண்ணெய் தடவிய டிரேயில் மாற்றி ஃபாயில் பேப்பர் போட்டு மூடி ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்து வெட்டி துண்டுகள் போட்டு சாப்பிடலாம். இதை எளிதாக செய்யலாம்.

வெனிலா கப் கேக்

தேவையானவை:

மைதா மாவு - 1 கப்,
உப்பு - ஒரு சிட்டிகை,
வெண்ணெய் - ¼ கப்,
சர்க்கரை - ¾ கப்,
ஈஸ்ட் - ¼ டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன்,
பால் - 2 டேபிள் ஸ்பூன்,
உலர்ந்த திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்,
நறுக்கிய செர்ரி பழம் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

மைதா மாவு, உப்பு, இரண்டையும் சலித்து கலந்து கொள்ளவும். வெண்ணெய், சர்க்கரையை க்ரீம் பதம் வரும் வரை எலக்ட்ரிக் பீட்டரால் அடிக்கவும். இத்துடன் ஈஸ்ட், எசன்ஸ் சேர்த்து அடிக்கவும். பின் மைதா, பாலையும் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். உலர் திராட்சை, செர்ரி கலந்து கேக் கலவையை வெண்ணெய் தடவிய பேப்பர் கப்களில் பாதி ஊற்றி அவனில் 170 சென்டிகிரேடில் 20 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். வெனிலா கப் கேக் ரெடி.

தீன் பழ கேக்

தேவையானவை:

பெரிய வாழைப்பழம் - 3,
மைதா மாவு,
பால்,
சர்க்கரை - தலா 1 கப்,
சமையல் சோடா - 2 சிட்டிகை,
ஏலப்பொடி,
குங்குமப் பூ,
நெய் - தலா 2 சிட்டிகை.

செய்முறை:

பால், வாழைப்பழம், சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு பிசைந்து வைக்கவும். மைதா மாவுடன் சோடா உப்பு சேர்த்து சலித்து, குங்குமப்பூ, ஏலப்பொடி ேசர்த்து பழ கலவையில் சேர்த்துப் பிசையவும். கேக் செய்யும் பாத்திரத்தில் நெய் தடவி சிறிது மைதா தூவி பிசைந்துள்ள கலவையை போடவும். பிரஷர் குக்கரில் மணல் போட்டு அதன் மீது கேக் டிரேயை வைத்து குக்கரின் கேஸ்கட் போடாமல் மூடியை வைத்து மூடி 40 நிமிடம் அடுப்பில் சிம்மில் வைத்து எடுக்கவும். சிறிது ஆறியதும், வேறு ஒரு தட்டில் திருப்பிப் போட்டு துண்டுகள் போடவும். இது சுலபமாக செய்யலாம்.

ஆப்பிள் பான் கேக்    

தேவையானவை:

மைதா மாவு - 2 கப்,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
உப்பு - கால் டீஸ்பூன்,
ஆப்பிள் - 1,
மாதுளை முத்துக்கள் - 1 கப்,
ஃப்ரூட் ஜாம் -1 கப்,
துருவிய சீஸ் - 1 கப்.

செய்முறை:

ஆப்பிளைத் தோல் சீவி சன்னமாக அரைபட்ட ஸ்லைசாக வெட்டவும். மைதாவில் உப்பையும், சர்க்கரையையும் சேர்த்து தேவையான நீர் ஊற்றி தோசைமாவு பதத்தில் கரைக்கவும். நான்ஸ்டிக் பானில் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி உடனே மெல்லிய தோசைகளாக சுடவும். சிறிது சீஸை தூவி அதில் மெல்லிய ஸ்லைசான 6 ஆப்பிளை அடுக்கி ஜாமை தடவி அதன் மேல் மாதுளை தூவவும். ஆப்பிளும், மாதுளையும் தெரிவது போல அரை வட்டமாக மடக்கி எடுத்து சாப்பிடவும்.

ரோஜா குல்கந்து கேக்

தேவையானவை:

குல்கந்து - ½ கப்,
பன்னீர் ரோஜா இதழ்கள் - 5,
ரோஸ் எசன்ஸ் - 2 துளிகள்,
கெட்டி தயிர் - 1½ கப்,
ஜாம் - 2 டேபிள் ஸ்பூன்,
வெண்ணெய் - ½ கப்,
பேக்கிங் பவுடர் - ½ டீஸ்பூன்,
உதிரி பால் கோவா - ¼ கப் (சர்க்கரை இல்லாதது),
பொடித்த சர்க்கரை - 1 கப்,
மைதா,
கோதுமை மாவு - தலா 1 கப்,
சோளமாவு - ¼ கப்.

செய்முறை:

ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் பொடித்த சர்க்கரையைப் போட்டு அதனுடன் வெண்ணெய் சேர்த்து மிருதுவாகும் வரை அடித்துக் கொள்ளவும். பின் பால் கோவா சேர்த்து அடித்து, குலகந்து மற்றும் தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து ரோஸ் எசன்ஸை விடவும். மைதா, கோதுமை மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து தயிர் கலவையில் ஊற்றி கட்டித் தட்டாமல் கரைக்கவும். பின் பேக்கிங் பவுலில் சிறிது வெண்ணெய் தடவி பட்டர் பேப்பர் மேலே வைக்கவும். மைதா சிறிது பரவலாக தூவி, தயார் செய்து வைத்துள்ள ரோஜாக் கலவையை ஊற்றவும். 20 நிமிடங்கள் ப்ரீஹீட் செய்த அவனில் 180 சென்டிகிரேடில் 1 மணி நேரத்திற்குச் சிறிது கூடுதலாக பேக் செய்யவும். கேக் வெந்ததும் எடுத்து ஆறவிட்டு மேலே சிறிது ஜாம் தடவி, ரோஜா இதழ்கள் பரப்பி அலங்கரித்து வெட்டி பரிமாறவும்.

வெனிலா ஸ்பாஞ்ச் கேக்

தேவையானவை:

மைதா - 2 கப்,
கண்டன்ஸ்டு மில்க் - 1 டின்,
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்,
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ்,
பட்டர் எசன்ஸ் - 1 டீஸ்பூன்,
பால் - தேவைக்கு,
வெண்ணெய் - 1 கப் (100 கிராம்).

செய்முறை:

மைதா, பேக்கிங் சோடா இருமுறை சலிக்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக பீட் செய்து, பால், எசன்ஸ் சேர்த்து கலக்கவும். இக்கலவையில் சலித்த மாவைச் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து பீட்டரால் அடிக்கவும். கலவையை வெண்ணெய் தடவிய டிரேக்கு மாற்றி ப்ரீஹீட் செய்த ஓவனில்180 சென்டிகிரேடில் 30 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். மேற்புறம் விருப்பமான ஃப்ரெஷ் க்ரீம் ஐசிஸ் செய்து அலங்கரிக்கவும். ஓவன் இல்லாதவர்கள் குக்கரில் மணல் அல்லது கல் உப்பு போட்டு 20 நிமிடங்கள் ப்ரீ-ஹீட் செய்து குக்கர் மூடியில் கேஸ்கட், வெயிட் இல்லாமல் குக்கரின் உள் சில்வர் ஸ்டாண்டு அல்லது அலுமினியத்தட்டு வைத்து அதன் மீது கேக் கலவையை ஊற்றி 40 நிமிடங்கள் வேகவிட்டு டூத் பிக்கால் குத்தி வெந்த பின் அடுப்பை நிறுத்தவும்.

தொகுப்பு: ப்ரியா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்