பனிக்கால குளியல் பவுடர்
2022-12-15@ 17:09:07

நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
குளியல் பவுடருக்கு தேவையானவை
கடலைப்பருப்பு - 100 கிராம், பச்சைப்பயறு - 500 கிராம், செந்தாமரை இதழ்கள் - சிறிது, காய்ந்த ரோஜா இதழ்கள் - கைப்பிடியளவு, துளசி - கைப்பிடியளவு, வெட்டி வேர் - 10 கிராம், பூலாங் கிழங்கு - 50 கிராம், சீயக்காய் - 50 கிராம்.
இவையனைத்தையும் நிழலில் உலர்த்தி பவுடராக்கி தேய்த்துக் குளித்தால் வறண்ட கேசம் அல்லது சருமத்திற்கு பளபளப்பும், ஈரப்பதமும் கூடும். குளிர்காலத்துக்கேற்ற சிம்பிள் ஃபேஸ் பேக்: கோதுமை மாவு, பயத்தம் மாவு, அரிசி மாவு இவைகளை தலா 1 ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன் காய்ச்சாத பாலைக் கலந்து சந்தனம் போல் குழைத்துக் கொண்டு, இந்த பேக்கை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும். இதை வாரம் ஒரு முறை செய்து வரலாம்.
குளிர்காலத்துக்கேற்ற சிம்பிள் ஹேர் கேர்: புளிக்காத தயிர் - 5 ஸ்பூன், வேப்பிலைப் பொடி - ¼ ஸ்பூன், துளசி பொடி, வெந்தயப் பொடி தலா - ¼ ஸ்பூன், இவைகளை கலந்து தலையில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் அலச வேண்டும். வாரம் 3 முறை செய்து வந்தால், தலை முடி வறண்டு போவது தடுக்கப்பட்டு பொடுகும் போய் விடும்.
குளிர் காலத்தில் உடலில் ரத்த ஓட்டம் குறையும். அதனால் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி, உடலில் தேய்த்து ½ மணி நேரம் அப்படியே ‘மசாஜ்’ செய்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். பின்பு சிறு பயறு பொடி, கடலைமாவு தூள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை உடலில் தேய்த்துக் கழுவவும். உடலில் தேய்க்கும் எண்ணெயில் சிறிதளவு பன்னீர் கலந்து கொண்டால் சருமம் வாசனையாக இருக்கும்.
- அபர்ணா சுப்ரமணியம், சென்னை.
Tags:
பனிக்கால குளியல் பவுடர்மேலும் செய்திகள்
‘மஞ்சள்’ மகிமை!
மணப்பெண்ணா நீங்கள்... இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!
முக அழகு கூட்டும் புருவங்கள்
செக்கச் செவேரென்று ஆக…
முக அழகு பொலிவு பெற!
ஆடைகளுக்கு அழகூட்டும் இயற்கை சாயங்கள்!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்