SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ப்யூட்டி பார்லர் ஸ்ட்ரோக்!

2022-12-02@ 17:46:07

நன்றி குங்குமம் தோழி

சமீபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 50 வயது பெண், ப்யூட்டி பார்லரில் முடியை கழுவும் போது, கிட்டத்தட்ட உயிரைக் கொள்ளும் அளவிற்கான பாதிப்பை சந்தித்துள்ளார். பொதுவாக ப்யூட்டி பார்லரில், நம்மை சேரில் உட்கார வைத்து, ஒரு பேசினில் தலையை பின்புறமாகவோ அல்லது முன்புறமாகவோ சாய்க்க வைத்து முடியை ஷாம்புவால் கழுவி விடுவார்கள்.

அப்படி சாதாரணமாக தலை முடியினை அலசும் போது, இந்த ஐம்பது வயது பெண்ணிற்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி மருத்துவர்களை மட்டும் இல்லாமல் ப்யூட்டி பார்லர் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதலில் கொஞ்சமாக மயக்கம், வாந்தி போன்ற அறிகுறிகளை சந்தித்த பெண், உடனே ஒரு மருத்துவரை அணுகியுள்ளார். டாக்டர் அவரின் மயக்கத்திற்கும் குமட்டலுக்கும் சிகிச்சை வழங்கி அனுப்பியுள்ளார்.

ஆனால் மறுநாளே அவர் சாதாரணமாக எழுந்து நடக்கும் போது தடுமாற்றம் ஏற்பட்டு அவரால் நேராக நடக்க முடியவில்லை. இந்த முறை மருத்துவர்கள் அவரை நரம்பியல் நிபுணரை சந்திக்க பரிந்துரைத்தனர். அப்போது தான் அவருக்கு ப்யூட்டி பார்லர் ஸ்ட்ரோக் சிண்ட்ரோம் என்ற அரிய வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளதை டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர். ஆரம்பக் கட்டத்திலேயே விரைவாக இந்த பிரச்சனை கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதால், அந்த பெண் இரண்டு வாரங்களில் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். இதனை கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் உயிருக்கு ஆபத்தாகி இருக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த ப்யூட்டி பார்லர் ஸ்ட்ரோக் குறித்து 37 ஆண்டுகள் நரம்பியல் நிபுணராக அனுபவம் கொண்ட டாக்டர் ஜெ.பாஸ்கரன் விரிவான விளக்கம் கொடுக்கிறார். ‘‘அழகு நிலையங்களில் பல சமயம் உயரத்துக்கு ஏற்ற வாஷ் பேசின் அல்லது சேர் இருக்காது. வாடிக்கையாளர்கள் தங்களுடைய தலையை அதிகப்படியாக பின்புறமாக சாய்த்து பல நிமிடங்கள் தலைமுடி கழுவ காத்திருக்கிறார்கள்.

இது போல அதிகப்படியாக தலையை சாய்த்து அழுத்தம் கொடுக்கும் போதும், அதிக நேரம் அதே நிலையில் இருக்கும் போதும் இது கழுத்துப் பகுதியில் இருக்கும் ஆர்டரியை சுருக்கி அல்லது எலும்புகள் கொஞ்சம் தங்கள் நிலையில் இருந்து மாறி ஒன்றின் மீது ஒன்று சரியலாம். இது கரோடிட் (carotid) அல்லது முதுகெலும்பு தமனி சிதையை (vertebral artery dissection) விளைவிக்கலாம். இது மூளைக்கு செல்லக்கூடிய ஆக்சிஜனை தடுக்கிறது. இதன் விளைவாக ப்ளட் க்ளாட் ஏற்பட்டு அது மூளைக்கு சென்று பக்கவாதத்தை ஏற்படுத்து
கிறது. இது குறிப்பாக வயதானவர்களை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம்’’ என்றார்.

இதை தடுக்க சில வழிகளை டாக்டர் பாஸ்கரன் நம்முடன் பகிர்கிறார். ‘‘ப்யூட்டி பார்லர் அல்லது மசாஜ் பார்லர்களில் அதிக அழுத்தத்துடன் உங்கள் கழுத்து பகுதியில் மசாஜ் செய்ய வேண்டாம் என்று சொல்ல வேண்டும். நீங்கள் அமர்ந்திருக்கும் நிலை அசெளகரியமாக இருந்தால் உடனே அதை அங்கிருப்பவர்களிடம் தெரிவியுங்கள். இது போன்ற நேரத்தில் திடீரென மயக்கமோ அல்லது குமட்டலோ ஏற்பட்டால், உடனே சமமான இடத்தில் படுத்து அறிகுறிகள் சரியாகிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி சரியாகாமல் அறிகுறிகள் நீடித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

பொதுவாகவே தலையையும் கழுத்தையும் அதிகம் நெளித்து அழுத்தம் கொடுக்கக் கூடாது. தலை துவட்டும் போது கூட, உங்கள் கைகளை தான் துவட்ட பயன்படுத்த வேண்டுமே தவிர, தலையை அதிகம் ஆட்டக் கூடாது. அசெளகரியமான நிலையில் அதிக நேரம் உங்கள் தலையை வைத்திருக்க வேண்டாம்” என்கிறார்.

இது தவிர, அழகு நிலையங்களும், மசாஜ் சென்டர்களும் கூட வாடிக்கையாளர்களுக்கு செளகரியமான கருவிகளையும் உபகரணங்களையும் வைத்திருக்க வேண்டும். குறைந்த காசு என்பதற்காக அசெளகரியமான உபகரணங்களை பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உயிர் போகும் அளவிற்கு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை தெரிந்து ப்யூட்டி பார்லர் நிறுவனங்கள் செயல்பட வேண்டும்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

 • cherry-blossom-tokyo

  டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்