குளிர் கால நார்ச்சத்து உணவுகள்!
2022-12-02@ 17:33:03

நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
*பாதாம் முதல் அக்ரூட் பருப்புகள் மற்றும் முந்திரி பருப்புகள் வரை அனைத்து வகையான நட்ஸ்களிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்துள்ள உணவுகள் மிக அவசியம்.
*நார்ச்சத்து நிறைந்த உணவு மலச்சிக்கல் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகள் சாப்பிடுவதால் பக்கவாதம் வராது.
*பருப்பு வகைகளில் கார்ப்போஹைட்ரேட்டுகளுடன் காணப்படும் நார்ச்சத்து உங்கள் ஆற்றல் அளவை மேம்படுத்தி மனதையும், உடலையும் நாள் முழுவதும் சுறு சுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
*ஆளி விதைகள் நார்ச்சத்து, புரத சத்து நிறைந்தது. அரைத்த ஆளி விதையை கொஞ்சம் தயிரில் கலந்து அதில் புதினா, உப்பு சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.
*ஆப்பிள் மற்றும் பேரிக்காய் இரண்டையும் தோலுடன் அப்படியே சாப்பிடும் போது தோலில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு கிடைக்கிறது. ஏனெனில் பழத்தைவிட தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது.
*புரோக்கோலியில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இந்த சுவை நிரம்பிய காய்கறியை சிறிது எண்ணெய், உப்பு மற்றும் பூண்டுடன் வெறுமனே வறுத்து சாப்பிடலாம்.
*பாதாம், அக்ரூட் பருப்புகளை காலையில் சிறிதளவு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
*ட்ரைஃப்ரூட்ஸ் குளிர் காலத்தில் சாப்பிடுவதால், உங்கள் உடலை வெது வெதுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் அனைத்தையும் செய்கிறது.
*ஒவ்வொரு வேளைக்கும் ஒரு வகை உலர்ந்த பழங்கள் சாப்பிடுவதால், நம் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். முந்திரி பருப்பு சரும விரிசல் மற்றும் உலர்ந்த குதிகால் ஆகியவற்றை மென்மையாக்க உதவுகிறது.
*குளிர்காலத்தில் ஒவ்வொரு நாளும் அக்ரூட் பருப்புகள் அல்லது வால்நட் சாப்பிடுவது உங்களை சூடாக வைத்திருக்கும். அவற்றில் ஒமேகா - 3, கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை அதிக கொழுப்பின் அளவைக் குறைக்கின்றன மற்றும் தோல் மற்றும் கூந்தலுக்கு நல்லது. வால்நட்டில் இருக்கும் ஒமேகா ஃபேட்டி ஆசிட் இதயத்துக்கு மிகவும் நல்லது.
*அத்திப்பழம் அல்லது ஆஞ்சீர் என்பது அனைத்து முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்களுடன் வருகின்றன. அவற்றில் வைட்டமின் ஏ, பி1, பி12, இரும்பு, மாங்கனீசு, கால்சியம், சோடியம், பாஸ்பரஸ், குளோரின், பொட்டாசியம் போன்றவை உள்ளது. அத்திப் பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின் C, வைட்டமின் D, அயர்ன் உள்ளன.
*பிஸ்தா பருப்பில் உள்ள புற ஊதாக் கதிர்கள் அதிக சக்தி வாய்ந்தவையாகும். எனவே குளிர் காலத்தில் பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் பாஸ்பரஸ் சத்து அதிகமாகி உடலை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும். உடல் மினுமினுப்பாகவும் கூந்தல் வலிமையாகவும் இருக்கும். குளிர் காலத்தில் இவைகளை சாப்பிட்டு வாழ்க்கையைநமதாக்குவோம்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
மேலும் செய்திகள்
வரதட்சணை கொடுப்பது கவுரவமா?
தினசரி வாழ்வாதாரத்தால் ஏற்படும் பாதிப்பு!
இல்லறம் சிறக்க எண்ணத்தடையினை உடையுங்கள்!
தொடர் கருக்கலைப்பு கவனம் அவசியம்!
இளம் பெண் குழந்தைகளின் மன அழுத்தம் ஆபத்தானதா?
உடல் மனம் காக்கும் கினர்ஜி ஹீலிங்!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!