SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2022-11-22@ 17:41:52

நன்றி குங்குமம் தோழி

*குளிர் காலத்தில் உறைமோர் விடும் போது சிறிது புளி உருண்டையைப் போட்டால் கெட்டியான தயிர் கிடைக்கும்.

*தயிர் பச்சடியில் வெங்காயத்துக்கு பதில் கோவைக்காயை சேர்த்தால் புதுச்சுவையாக இருக்கும்.

- ஹேமலதா, தஞ்சை - 2.

*காலிஃப்ளவர், முட்டை கோஸ், டர்னிப் போன்ற காய்கள் வேகும் பொழுது வாடை வராமல் இருக்க, சிறிது இஞ்சி தட்டி போட்டு சமைத்தால் வாடை வராது. ருசியும் அதிகமாகும்.

*கறிவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை எண்ணெயில் வதக்காமல் பச்சையாக சேர்த்தால், அதன் வைட்டமின்கள் பாதுகாக்கப்படும்.

*சின்ன வெங்காயம் சுலபமாக உரிக்க 10 நிமிட நேரம் எண்ணெயில் புரட்டி பின் உரித்தால் நன்கு உரிபடும்.

- மாலதி நாராயணன், சென்னை.

*அரிசி உப்புமா மட்டும் தேங்காய் எண்ணெயில் தாளித்து செய்தால் தான் சுவையும், மணமும் பிரமாதமாயிருக்கும்.

*எந்த வகை ரசம் செய்தாலும் சிறு துண்டு இஞ்சி போட்டு கொதிக்க வைத்தால் சுவை, மணம், ருசி அமோகமாக இருக்கும்.

- கே.சாயிநாதன், சென்னை.

*மணத்தக்காளி கீரை பொரியல் செய்யும் போது அதில் வேகவைத்த பாசி பருப்பை சிறிது சேர்த்தால் கீரையில் கசப்பு இருக்காது.

*சப்பாத்திக்கு மாவு பிசையும் போது பால் அல்லது வெது வெதுப்பான சுடுநீரில் பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

*தக்காளி தொக்கு செய்யும் போது அதில் பூண்டை சிறு சிறு துண்டுகளாக கட் செய்து சேர்த்தால் நன்றாக இருக்கும்.

- சசிகலா, தருமபுரி.

*இட்லி பொடி அரைக்கும்போது சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

*சாம்பார் அதிக நேரம் கெட்டுப் போகாமல் இருக்க பருப்பு வேகும் போது 2 கிராம்புசேர்க்கலாம்.

*சேமியா பாயசம் செய்யும் போது சேமியா வெந்ததும் ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் விட்டு பின் சீனி, பால் சேர்த்து செய்தால் சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாது.

- கே.ராகவி, திருவண்ணாமலை.

*தேங்காய் அடர்த்தியாக இருக்கிறதா என்று அறிய உடைக்காமல் நல்ல தேங்காய் என்று அறிய தலையில் வகிடுமாதிரி கோடுகள் தெரியும். இந்த கோடு எடுப்பாக இருந்தால் தேங்காயின் வெண்பகுதி அடர்த்தியாக இருக்கும்.

*கேஸ் அடுப்பிலுள்ள பித்தளைப் பர்னரை நெயில் பாலீஷ் ரிமூவர் கொண்டு கழுவினால் பளிச்சென்று இருக்கும்.

*எண்ணெய் வாங்கும் கவரை சேகரித்து வைத்து சப்பாத்தி, பூரி தேய்த்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாகப் போட வசதியாக இருக்கும்.

- எம்.கணேஷ், நாகர்கோவில்.

*பாயசத்தில் முந்திரியை வறுக்கும்போது தீய்ந்து விடும். இதை தவிர்க்க முந்திரி பருப்பை அரைத்து சேர்த்தால், பாயசம் ரிச்சாக, திக்காக சுவையில் அசத்தும்.

*வெண்ணெயை வாங்கி வந்ததும் அப்படியே வைக்காமல் சிறு சிறு துண்டுகளாக்கி வைக்க, அவ்வப்போது பிரெட், சப்பாத்தி என தேவையான துண்டுகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். மீதி வெண்ணெய் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

*சாம்பார் செய்யும்போது அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து கலந்தால் சாம்பாரின் மணம் கூடுதலாகும்.

*தோசைக்கு மாவு அரைக்கும்போது சிறிது ஜவ்வரிசியை சேர்த்து அரைத்தால் சுவையாகவும் மெல்லியதாகவும் இருக்கும்.

*மைசூர் பாகிற்காக கடலைப்பருப்பை மாவாக அரைக்கும்போது சிறிதளவு முந்திரி பருப்பையும் கூட சேர்த்து அரைத்தால் மணமும், சுவையும் கூடுதலாக இருக்கும்.

- ஆர்.பிரகாசம், திருவண்ணாமலை.

தர்பூசணி சாம்பார்

தேவையானவை:

துவரம் பருப்பு - 1 கப்,
மாங்காய் துண்டுகள் - 6,
தர்பூசணி தோல் பகுதி - 1 பழம்,
வெங்காயம் - 2,
தக்காளி - 1,
வெந்தயம் - ¼ டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்,
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்,
சாம்பார் பொடி - 2 டேபிள் ஸ்பூன்,
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்,
சீரகம் - ½ டீஸ்பூன்,
கடுகு - ¼ டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எலுமிச்சை சாறு - ½ மூடி,
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு,
எண்ணெய்,
தண்ணீர் - தேவைக்கேற்ப.

செய்முறை:

துவரம் பருப்புடன் மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து குழைய வேகவிடவும். தர்பூசணியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, சீரகம் இவற்றைப் போட்டு வதக்கவும். கடுகு பொரிந்ததும் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின்பு மாங்காய், தர்பூசணித் துண்டுகள், தக்காளி முதலியவைகளை போட்டு வதக்கி மூடி போட்டு மிதமான தீயில் வேகவிடவும், பின்னர் சாம்பார்பொடி, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக வதக்கி அத்துடன் வெந்த பருப்பைச் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி, அனைத்தும் ஒன்றாக கலந்து சாம்பார் பதத்திற்கு கொதித்த பின் அடுப்பை அனைத்து எலுமிச்சை சாறை கலக்கவும். பின் துருவிய தேங்காய், கொத்தமல்லி தழையை தூவவும். சூடான சாதத்துக்கு புதிய சுவையுடன் கூடிய தர்பூசணி சாம்பார் ரெடி.

- சாந்தா, சென்னை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்