SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழைக்கால நோய்கள்... கவனம்!

2022-11-15@ 17:59:56

நன்றி குங்குமம் தோழி

கொசு வரும் முன்னே நோய் வரும் பின்னே என்ற வார்த்தைக்கு  ஏற்ப கோடை வெயில் முடிந்து தற்போது பல இடங்களில்  மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனிடையே மழைக்கால நோய்களும் மக்களை பாதிக்கச் செய்துள்ளது. கொசுக்களால்தான் அதிகளவு நோய் பரவுகிறது. நாம் வசிக்கும் இடத்தை மிகச் சுகாதாரமாக வைத்திருந்தால் மழைக்கால நோய்களை தவிர்க்கலாம்.

மலேரியா

காய்ச்சல், உடல் நடுக்கம், தசை வலி மற்றும் சோர்வு ஆகியவைகள் மலேரியாவின் அறிகுறிகளாகும். மலேரியா காய்ச்சல் பெண் அனாஃபிலிஸ் என்ற கொசுக்களால் ஏற்படுகிறது. இவ்வகை கொசுக்கள் தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்தில் இனப்பெருக்கமாகும்.

டெங்கு

டெங்கு காய்ச்சலும் கொசுக்களால் ஏற்படுவதுதான். இக்காய்ச்சல் வந்தால் உடல் வலி, மூட்டு வலி மற்றும் தடிப்புகள் போன்றவை உண்டாகும். நோய் வருவதற்கான முக்கிய காரணம்
டைகர் கொசுக்கள்தான். இந்த கொசுக்கள் வராமல் தடுப்பதற்கு பூச்சி மருந்துகளைப் பயன்படுத்த  வேண்டும்.

சிக்கன்குனியா

ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் வருவது சிக்கன்குனியா. திடீரென வரும் காய்ச்சலோடு சேர்ந்து கடுமையான மூட்டு வலி இருக்கும். ஏடிஸ் கொசுக்கள் வீட்டில் வைத்திருக்கும் தண்ணீரில்தான் அதிகம் இனப்பெருக்கமாகும். இந்த கொசுக்கள் பகல் நேரத்தில் கடிக்கும். இதனை தடுக்க தண்ணீர் தொட்டிகளை சுத்தப்படுத்தி, கொசுக்களை அழிக்கும் பூச்சி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

டைபாய்டு

டைபாய்டு என்ற நோய், தண்ணீரினால் வருவதாகும். டைபாய்டு வர காரணமாக இருப்பது எஸ்.டைஃபி என்ற பாக்டீரியா. அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உபயோகிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற சீர்கேட்டினாலும் உருவாகும். காய்ச்சல், தலைவலி, சோர்வு, வலி மற்றும் தொண்டைப்புண் ஆகியவை டைபாய்டின் அறிகுறி.

வயிற்றுப்போக்கு

மழைக்காலத்தில் எளிதில் தாக்கும் நோய்களில் வயிற்றுப்போக்கும் ஒன்றாகும். இதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து அதிகளவு வெளியேறுவதால், உடல் சோர்வடையும். உடனே சிகிச்சை பெறுவது அவசியம். வயிற்றுப்போக்கு பெரும்பாலும் சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீரால் ஏற்படுகிறது. கடுமையான வயிற்றுப்போக்கு (அக்யூட் டையரியா), தீவிரமான வயிற்றுப்போக்கு(குரோனிக் டையரியா), இவை இரண்டையுமே வரும் முன் தடுக்க முதலில் சுத்தத்தை  நாம் கடைபிடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் கையை நன்றாக கழுவ வேண்டும். எக்காலத்திலும் வெந்நீரை குடிப்பது நல்லது.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் கிருமிகள், சுத்தமில்லாத உணவுகள் மற்றும் தண்ணீரின் மூலம் வருகிறது. உடல் சோர்வு, மஞ்சள் நிற சிறுநீர், வாந்தி மற்றும் ஈரலில் அழற்சி அறிகுறிகள் தென்படும். கொதிக்க வைத்த தண்ணீர் மற்றும் சத்தான பானங்களை குடிக்க வேண்டும்.

வைரஸ் காய்ச்சல்

மிதமான முதல் அதிகமான காய்ச்சல் தான் இதற்கான அறிகுறி. இக்காய்ச்சல் தொடர்ந்து 37 நாட்கள் வரை நீடிக்கும். சளியும் இருமலும் சேர்ந்து இருக்கும். நிலவேம்பு கஷாயம் குடித்தால் இந்நோயிலிருந்து விடுபடலாம்.

மழைக்கால உணவின் முறைகள்

மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து  சாப்பிடுவது நல்லது. மழைக்காலங்களில் எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். நீர்ச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழைக்காலங்களில்  உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். பொரியல் செய்யும்போது அவற்றில் மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்து சாப்பிடுவது நல்லது.

கீரைகளை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய்  போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்கூடாது. ஆனால் மோர் சாப்பிடலாம். உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அசைவ உணவான மீன், முட்டை, கறி, சிக்கன்  போன்றவற்றை ஃப்ரெஷ்ஷாக சாப்பிட வேண்டும். மேலும் தினமும் சாப்பிடும் உணவை சூடாகச் சாப்பிட வேண்டும்.

தொகுப்பு: பிரியா மோகன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்