SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பண்டிகை கால தொற்று... அலட்சியம் வேண்டாம்!

2022-11-08@ 17:45:59

நன்றி குங்குமம் தோழி

டாக்டர் சுப்பிரமணியன் ஸ்வாமிநாதன்

ஐப்பசி மாசம் அடை மழை என்ற கூற்று கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. காரணம் சுற்றப்புறச் சூழலில் ஏற்படும் மாற்றம் காரணமாக நம்முடைய சீதோஷ்ணநிலையும் முற்றிலும் மாறி வருகிறது. விடியற்காலை மேகம் சூழ மழை கொட்டும். ஆனால் அதுவே பகல் 11 மணி அப்படி ஒரு மழை பெய்ததற்கான அடையாளம் இல்லாமல் வெயில் மண்டையை பிளக்கும். இப்படி மாறி வரும் சீதோஷ்ணநிலைக் காரணமாக நமக்கு தொற்று நோயின் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கிறார் டாக்டர் சுப்பிரமணியன் ஸ்வாமிநாதன். இவர் பிரபல மருத்துவமனையில் தொற்று நோய் பிரிவின் இயக்குனராக உள்ளார்.

‘‘ஜுரம், தலைவலி, சளி, இருமல் போன்ற பிரச்னையோடு தான் பலர் சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்த பிரச்னை நம்மூரில் மட்டுமில்லை உலகம் முழுக்கவும் பரவி வருகிறது. ரெஸ்பிரேட்டரி நோயான இன்ஃப்ளூவென்சா என்னும் தொற்று காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பொதுவாக இந்த தொற்று வெளிநாட்டில் ஏற்படும் கடும் குளிர் காலத்தில் தான் அதிகம் பரவும். இப்போது இந்தியாவிலும் மழைக்காலம் என்பதால், இந்த தொற்று நோய் இங்கும் பரவ ஆரம்பித்து வருகிறது. குறிப்பாக தீபாவளி போன்ற விழாநாட்களில் இந்த தொற்று அதிகமாக பரவும் வாய்ப்புள்ளது. மேலும் கடந்த இரண்டு மூன்று வருடமாக நாம் இது போன்ற ஃப்ளூ தொற்றுக்கு பாதிக்கப்படாத காரணத்தால் இந்த வருடம் இந்த நோயின் தாக்கம் மேலும் அதிகமாக இருக்கும்.

கடந்த வருடங்கள் கொரோனாவினால் பலர் பாதிக்கப்பட்டதால், அதன் தாக்கம்தான் அதிகமாக இருந்தது. குறிப்பாக 2019ம் ஆண்டு முதல் இரண்டு வருடம் யாருக்கும் ஃப்ளூவோட பாதிப்பு ஏற்படவில்லை. அதனாலேயே பலருக்கு அதற்கான எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருக்கிறார்கள். கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான தனிப்பட்ட எதிர்ப்பு சக்தி ஏற்படும். ஆனால் இதற்கு உருவாகும் எதிர்ப்பு சக்திக்கும் ஃப்ளூவிற்கான எதிர்ப்பு சக்திக்கும் சம்பந்தம் இல்லை. காரணம் ப்ளூ தொற்று என்பது வருடா வருடம் மழைக்காலத்தில் ஏற்படும். இந்த நோயின் தாக்கம் ஏற்பட்ட பிறகு அது நம்முடைய உடலில் அந்த தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும். கடந்த மூன்று வருடத்தில் இந்த தொற்றின் உருமாற்றம் பன்மடங்கு மாறியுள்ளது. அதன் காரணத்தால் இந்த வருடம் இன்ஃப்ளூவென்சாவின் பாதிப்பு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இது நுரையீரல் குறித்த தொற்று என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும்.

கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்த பிறகு நம்மில் பலர் மாஸ்க் பயன்பாட்டினை தவிர்த்து விட்டோம். அதுவும் இந்த தொற்று வேகமாக ஒருவரில் இருந்து மற்றொருவருக்கு பரவ காரணமாக அமையும். மேலும் கொரோனாவும் இப்போது வேகமாக பரவி வருகிறது. அடுத்த ரவுண்ட் கொரோனாவின் பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் அதன் வீரியம் அதிகமாக இருக்காது. மாறாக நுரையீரலை தாக்கக்கூடியது என்பதால் வீசிங்கோட இருமல் போன்ற பிரச்னை வர வாய்ப்புள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையின் காரணத்தாலும் இதன் வீரியம் அதிகமாகும். தீபாவளி என்றால் பட்டாசு தான். பட்டாசில் இருந்து ெவளியாகும் புகை, இந்த நோயின் பாதிப்பினை மேலும் அதிகமாக்கும்.

இப்போது ெகாரோனா மற்றும் இன்ஃப்ளூவென்சா இரண்டும் இருப்பதால், இதற்கான தடுப்பூசியினை ேபாட்டுக் கொள்வது அவசியம். சிலர் கொரோனா நோய்க்கான இரண்டு டோஸ் தடுப்பூசி மட்டுமே போட்டுள்ளனர். அவர்கள் பூஸ்டரும் போட்டுக் கொள்ள வேண்டும். அதேபோல் இன்ஃப்ளூவென்சாவிற்கும் தடுப்பூசி உள்ளது. அதை மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளலாம். வெளியே செல்லும் போது மாஸ்க்கினை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இவை இரண்டுமே ஒருவருக்கு நோயின் தொற்று ஏற்படாமல் காக்கும்.

ஜுரம், சளி, இருமல், உடம்பு வலி போன்ற அறிகுறியாக இருந்தாலும் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்து அதற்கான சிகிச்சையினை மேற்கொள்ளலாம். மேலும் பாதிப்பு ஏற்பட்ட 48 மணி நேரத்தில் மருத்துவரை சந்தித்து சிகிச்சைக்கான மாத்திரையை எடுத்துக் கொள்வது அவசியம். வீசிங் பிரச்னை உள்ளவர்களுக்கு குறைந்த பட்சம் இந்த நோயின் பாதிப்பு ஆறு வாரம் வரை நீடிக்கும். அவர்கள் அதற்கான மாத்திரையையும் தொடர்ந்து எடுத்துக் கொள்வது அவசியம். சரியான சிகிச்சை முறையினை பின்பற்றாமல் இருந்தால், அது நாளடைவில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். குறிப்பாக வயதானவர்கள்.

இவர்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால், அவர்கள் தங்களின் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது அவசியம். உணவுப் பொறுத்தவரை அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் தங்களின் உணவினை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம். அதே சமயம் இருதய பிரச்னை உள்ளவர்களும் அதற்கான மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்று ஆலோசனை அளித்தார் டாக்டர் சுப்பிரமணியன் ஸ்வாமிநாதன்.

தொகுப்பு: நிஷா

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-senthilbalaji-8

    சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

  • athisayangal

    நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

  • perunad

    பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

  • turkeydeath11

    துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

  • lantern-festival-china

    உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்