முக அழகு பொலிவு பெற!
2022-10-19@ 15:48:26

நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
பெண்களுக்கு முக அழகு பொலிவுடன் விளங்கினால்தான் பளிச்சென்று வசீகரமாய் இருக்கும். அதற்கு சில எளிய முறைகளைக் கையாண்டால் போதும்.
* தயிர், கடலைமாவு இரண்டையும் கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் பூசி, பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்து கழுவி வந்தால் முக அழகு மெருகேறும்.
* தக்காளி, உருளைக்கிழங்கு இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் ஊறவைத்து, பின்பு முகத்தை கழுவி வந்தால் முகம் மிருதுவாய், மென்மையாய், கலராய் மாறிவிடும்.
* சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறில் தயிரை சம அளவு கலந்து முகத்தில் பூசி, பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்து, பின்பு வென்னீரில் கழுவிவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
* உள்ளங்கையில் நல்லெண்ணெய் விட்டு, சிறிதளவு தண்ணீர் கலந்து சூடு பறக்க தேய்த்து, பின்பு முகத்தில் அழுத்த தேய்த்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து பொலிவாகும்.
* கடலை மாவில் சிறிதளவு கடுகு எண்ணெய் கலந்து, குழைத்து முகத்தில் பூசி மசாஜ் செய்து விட்டு, சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் மாசு மருவற்று இளமையாக இருக்கும்.
* முட்டையின் வெள்ளைக்கரு, பூண்டு சில பல்கள், முல்தானி மெட்டி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கூழாக்கி முகத்தில் பூசி, ஊறவிட்டு பின்பு முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
* ஆப்பிளை தோல் நீக்கி, கூழாக்கி அதை முகத்தில் தடவி, ஊறவைத்து, பின்பு கழுவி வந்தால் முகம் நிறம் மாறிவிடும்.
* தயிருடன் புதினாவை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி, ஊறவைத்து, பின்பு கழுவிவந்தால் முகம் பளிச்சென மின்னும்.
* கொண்டைக் கடலை மாவுடன் சிறிளவு பால், எலுமிச்சை பழச் சாறு கலந்து முகத்தில் பூசி, ஊறவைத்து பின்பு முகம் கழுவி வந்தால் முகம் சிகப்பழகு பெறும்.
* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி, அதை முகத்தில் தேய்த்து, பத்து நிமிடங்கள் ஊறவைத்து, பின்பு சோப்பு போட்டு கழுவி வந்தால் முகம் பளப்பாகவும், அழகாகவும் மாறிவிடும்.
தொகுப்பு - எஸ்.ஜெயப்பிரியா, மதுரை.
Tags:
முக அழகு பொலிவு பெற!மேலும் செய்திகள்
அழகுடன் திகழ...
இந்திய பெண்களுக்காகவே இந்திய மேக்கப்
தலை பின்னிவிடுறது ஒரு வேலையா?
வாசகர் பகுதி-ஸ்கின் ஹேக்ஸ்
ஸ்கின் ஹேக்ஸ்: புளி ஃபேஷியல்
சருமத்தை பளபளப்பாக்கும் ஃபேஷியல்!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!