SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோல்டன் ஹவரை சேவ் செய்யும் ஆப்!

2022-10-17@ 17:49:48

நன்றி குங்குமம் தோழி

விபத்தோ அல்லது உடல் நிலை பிரச்னை ஏற்பட்டாலோ டாக்டர்கள் அனைவரும் குறிப்பிடுவது அந்த ‘கோல்டன் ஹவர்’களைதான். அதாவது ஒருவர் எந்த நிலையில் இருந்தாலும் நேரம் தாமதிக்காமல் அளிக்கப்படும் சிகிச்சையின் நேரம் தான் கோல்டன் ஹவர். இந்த நேர தாமதத்தினால், பலர் உயிரை இழக்கவோ அல்லது அவர்கள் உடல் ரீதியாக வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இவர்களை உரிய நேரத்தில் கொண்டு செல்லும் ஒரே வாகனம் ஆம்புலன்ஸ் மட்டும் தான்.

ஆனால் ஒரு விபத்து நேரும் அந்த நொடியில் நமக்கு யாரை அணுகுவது, ஆம்புலன்ஸை எவ்வாறு தொடர்பு கொள்வது என்ற பதட்டம் ஏற்படும். இனி அந்தக் கவலை இல்லை. ஆம்புலன்ஸை தொடர்பு கொள்வதற்காகவே mSirenPilot என்ற ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி விபத்து மற்றும் அவசர துறை தலைவரான டாக்டர் ஸ்ரீராம் விளக்கம் அளித்தார்.

‘‘இது மற்ற ஆப்கள் போல தான். பிளேஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த ஆப் மூலம் மக்கள் நேரடியாக மருத்துவமனைக்கு தொடர்பு கொள்ள முடியும். அவ்வாறு தொடர்பு கொள்ளும் போது உடனடியாக உங்களுக்கான ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும். இதன் மூலம் நீங்க இருக்கும் இடத்திற்கு விரைந்து  மருத்துவ சேவையினை அளிக்க முடியும். மேலும் ஆம்புலன்ஸ் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை டிராக்கும் செய்யலாம். அதுமட்டுமில்லாமல் எமர்ஜென்சி நேரத்தில் டிராப்பிக்கில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க டிராபிக் கண்ட்ரோல் மூலமாக அவர்கள் செல்லும் வழியில் உள்ள டிராப்பிக்கும் சீர் செய்வதற்கான ஏற்பாடு செய்து தரப்படும்.

பொதுவாக ஒவ்வொரு ஆம்புலன்சிலும் பாரா மெடிக்கல் டாக்டர்கள் பயணிப்பார்கள். அவர்கள் விபத்து நடைபெற்ற ஸ்பாட்டுக்கு சென்றவுடனே பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை முறைகளை ஆரம்பித்து விடுவார்கள். மேலும் மருத்துவமனைக்கும் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பதையும் தெரிவித்துவிடுவதால், அவர்கள் மருத்துவமனைக்கு வந்தவுடனே சிகிச்சைகள் துவங்கப்படும். இவை அனைத்தும் கோல்டன் ஹவரில் அடங்கும். இதன் மூலம் உயிரிழப்பு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். ஒரு பாதிப்பு ஏற்படும் போது, நமக்குள் ஏற்படும் பதட்டத்தை இந்த ஆப் முற்றிலும் குறைக்க உதவும்.

இந்த ஆப் கிட்டத்தட்ட உணவு டெலிவரி செய்யப்படும் ஆப் போல் செயல்படும். அதில் நீங்க உங்களுக்கு பிடித்த உணவினை லிஸ்ட் செய்து வைத்திருப்பீர்கள். அதேபோல் உங்க வீட்டிற்கு
அருகில் இருக்கும் மருத்துவமனை என்ன என்பதை இந்த ஆப் சுட்டிக்காட்டும். அதனை நீங்க உங்களின் லிஸ்டில் சேர்த்துக் கொண்டால் போதும். ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் போது உடனடியாக நீங்க இந்த ஆப் மூலமாக குறிப்பிட்ட மருத்துவமனையை அணுகலாம்.

அவர்களும் நிலைமை அறிந்து உடனடியாக செயல்படுவார்கள். சிகிச்சைக்கான நேரமும் வீணாகாது. இந்த ஆப்பினை பொது மக்கள் மட்டுமில்லாமல் மருத்துவமனைகளும் பதிவு செய்திருக்க வேண்டும். அதன் மூலம் மருத்துவமனையால் ஆம்புலன்ஸ் எங்குள்ளது என்பதை டிராக் ெசய்ய முடியும். சிகிச்சை முறைகளும் அதற்கு ஏற்ப துரிதமாக செயல்பட உதவும். தற்போது இந்த ஆப்பினை குறிப்பிட்ட சில மருத்துவமனைகள் மட்டுமே பதிவு செய்திருக்கிறார்கள்.

நாங்க எங்க மருத்துவமனையில் இந்த ஆப்பினை பதிவு செய்திருக்கிறோம். இதனை டிரையல் முறையிலும் நாங்க செயல்படுத்தி பார்த்ேதாம். ஆப் இல்லாமல் சிகிச்சைக்கு வருபவர்கள் குறைந்த பட்சம் பத்து நிமிடம் தாமதமாகத்தான் மருத்துவமனையை அடைகிறார்கள். அந்த பத்து நிமிடத்தில் சீக்கிரமாக கொண்டு வரும் போது ஒருவரின் உயிரினை கண்டிப்பாக காப்பாற்ற முடியும். ஆப்கள் பல உள்ளன. ஆனால் இது போன்ற அவசர சிகிச்சைக்கு உதவும் ஆப்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மருத்துவரின் கடமை’’ என்றார் டாக்டர் ஸ்ரீராம்.

தொகுப்பு: நிஷா

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-dmk-votes-2

    அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

  • scotland-bonfire-festival

    ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்