SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுகதை- மெலிண்டாவின் காதல்

2022-10-12@ 17:49:21

நன்றி குங்குமம் தோழி

சிறுகதை

பிரவீன் முதன்முதலாக மெலிண்டாவை பார்த்தது கிண்டி ரயில்நிலையத்தில். மெல்ல நகர்ந்த ட்ரெயினில் விரைந்து ஓடிச்சென்று ஏற முயன்ற போது பிளாட்பாரத்தில் ஃப்ரெண்ட்ஸுடன் நடந்துபோய் கொண்டிருந்த மெலிண்டாவின் காலை மிதித்து விட்டான்.

“ஐயம் ஸாரி, ஐயம் ஸாரி...''
“இட்ஸ் ஓகே ...,இட்ஸ் ஓகே’’ மெலிண்டா சிரித்த படி சொன்னாள்.

ட்ரெயினில் தாவி ஏறிய பிரவீன் மெலிண்டாவை திரும்பி பார்த்தான், அவளும் பார்க்க, இருவருக்கும் பிடித்துப்போனது. தினமும் லுக் விட தொடங்கினார்கள்.இது பார்வையால் ஏற்பட்ட காதல், ஈர்ப்பால் உண்டான காதல்.பிரவீன் மெலிண்டாவை காதலாய் பார்க்கும் போது மெலிண்டாவின் இதயம் சந்தோஷத்தில் “திக் திக் ''என்று அடித்துக்கொண்டது.மெலிண்டாவின் தேகம் முழுவதும் அனல் பாய்ந்தது. அன்று ஸ்டேஷனில் மெலிண்டா கிரானைட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள்.பிரவீன் கூலாக அவள் அருகே போய் உட்கார்ந்தான்.

“ஹலோ ஐயம்  பிரவீன்,இன்போசிஸில் ஒர்க் பண்றேன்.உன் பெயர் என்ன?''
“மெலிண்டா...''
“நைஸ் நேம்! யூ ஆர் வெரி பிரிட்டி மெலிண்டா.''
“கொஞ்சம் பார்க்க ஆரம்பிச்சா உடனே என் பக்கத்துல வந்து உட்கார்ந்துடு
வியாடா?''

“உன்னை பார்த்தாலே என் மனசெல்லாம் சிறகடிச்சு பறக்குது ,வாழ்நாள் முழுவதும் நீஎன் கூட இருந்தால் என் லைஃப் எவ்வளவு ஹேப்பியா இருக்கும்.'' மெலிண்டா பிரவீனை பார்த்து அழகாக புன்னகைத்தாள்.இருவரும் தினமும் ஜாலியாக சாட்டிங் பண்ணினார்கள்.மெலிண்டாவிற்கு பிடித்தமான கோல்டு காஃபி அடிக்கடி வாங்கி கொடுத்தான் பிரவீன்.

“உன் வீடு எங்க இருக்கு?''
“சொல்ல மாட்டேன், போடா... ''
“ஏன்?''
“என்னை பார்க்க தினமும் என் வீட்டை சுத்தி சுத்தி வருவே ....அப்புறம் என்
மம்மி ,டாடிக்கு எல்லாம் தெரிஞ்சுடும்!''
“நீ எங்க ஒர்க் பண்ற அதையாவது சொல்லு செல்லம்!''
“ம் ..ம் ...செயிண்ட்மார்க் ஸ்கூலில்
இங்கிலீஷ் டீச்சரா ஒர்க் பண்றேன்.''

“அது எங்க இருக்கு?''
“தி நகர்!''
“இன்ஸ்டாவில் என்ன பெயரில் இருக்க?''
“இந்த இன்ஸ்டாகிராம், ட்விட்டர், எப்பி எதிலும் நான் இல்லடா!''
“ஒய் ?''

“எங்க வீட்டில் இதுக்கெல்லாம்  அலோவ் பண்ண மாட்டாங்க.என்னை வாட்ஸ்ஆப் யூஸ் பண்ண விட்டதே பெரிய விஷயம்!''
“நல்ல ஃபேமிலி!''இருவரும் மணிக்கணக்கா சிரிச்சு சிரிச்சு பேசினார்கள். ஒரு இனிய மாலை பொழுதில் பிரவீன் தன் லவ் மேட்டரை விஸ்வநாதனிடம் சொன்னான்.
விஸ்வநாதன் பிஸினஸ் மேன். நரைத்து போன தலைமுடியோடு பார்க்க கம்பீரமாக இருந்தார்.

“நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன் டாடி!''
“அவள் பெயர் என்ன?''
“மெலிண்டா!''

விஸ்வநாதனின் புருவம் சுருங்கிற்று.
“அவ அழகா இருப்பா....ரொம்ப
நல்லவள் டாடி!''
“சரி...நான் பாக்குறேன்!''
ஒரு வாரம் முழுவதும் பிரவீனும் மெலிண்டாவும் சந்தித்துக்கொள்ளவில்லை.பிரவீன் மெலிண்டாவிற்கு போன் பண்ணினான்.
“ஹாய் பிரவீன்,எனக்கு பீவர்டா...''
“ஹேய்  எனக்கும் பீவர் மெலிண்டா...நம்ம வேவ்லென்த் ஒரே மாதிரி இருக்குல்ல...''
மெலிண்டா சிரித்தாள்.

“இந்த பீவர் கடுமையாகி நான் செத்துபோய்ட்டா என்னடா பண்ணுவ...?''
“நானும் உன் கூடவே வந்துருவேன் மெலிண்டா ....காதலிக்கும்போது ஒண்ணா காதலிச்சோம் ...சாகும்போது ஒண்ணா செத்துருவோம்!''
“நாம இரண்டு பேரும் சேர்ந்து வாழ தானே லவ் பண்றோம் ...அப்புறம் ஏன்டா என்னென்னமோ சொல்லற ...''“ஸாரி மெலிண்டா, நீ இல்லாம என்னால் இருக்க முடியாது.அதான் அப்படி சொன்னேன்...எங்க வீட்டில் உன்னை பற்றி சொல்லிட்டேன் ...பீவர் சரியானதுக்கப்புறம் நம்ம கல்யாணம் தான்!''
“ஐயம் ஸோ ஹேப்பி பிரவீன்!''

அடுத்த பத்து நாட்கள் பிரவீனிடமிருந்து போன்கால் வரவில்லை.மெலிண்டா பயந்து பயந்து அவனுக்கு போன் பண்ணினாள்.மறுமுனையில் விஸ்வநாதன் பேசினார்.

“அங்கிள், நான் மெ... மெலிண்டா பேசுறேன்.....பிரவீன் எப்படி இருக்கான்?''விஸ்வநாதன் மவுனம் காத்தார். பின் சோகமாக சொன்னார்.

“உனக்கு விஷயம் தெரியாதாம்மா....பிரவீனுக்கு கடுமையான தொண்டைவலி, காய்ச்சல் ஏற்பட்டதால் அவனை ஹாஸ்ப்பிட்டலில் அட்மிட் பண்ணோம்....அதன் பின் அவனோட லங்ஸ் ரொம்ப பாதிக்கப்பட்டு ...டாக்டர்ஸால் அவனை காப்பாற்ற முடியாமல் போய் அவன் இறந்துட்டான்ம்மா...பிரவீன் இறந்துப்போய்  அஞ்சு நாளாச்சும்மா!'' மெலிண்டா மின்சாரம் தாக்கியவள் போல் அதிர்ந்தாள். மெலிண்டாவின் கையிலிருந்த செல்போன் சரேலென்று நழுவி தரையில் விழுந்து சில்லுகளாய் சிதறியது.

கிவின் பிரைவேட் ஹாஸ்பிட்டலில் அறை என் அம்பதில் பிரவீன் பெட்டில் படுத்திருந்தான்.மெல்ல கண்களை திறந்தான்.

“பிரவீன், இந்த சாத்துக்குடி ஜூஸை குடிப்பா”என்றாள் பிரபாவதி.“அம்மா டாக்டர் என்ன சொன்னார்?''“உன் உடம்புவலி,தொண்டைவலி, பீவர் எல்லாம் சரியாயிடுச்சு....நாளைக்கு
வீட்டுக்கு போய்டலாமுன்னு சொல்லிட்டார்!''

“என் செல்போன் எங்கே? எனக்கு  
ஏதாவது கால் வந்ததா?''
“உனக்கு ஏதாவது ஆயிடுமோனு பதட்டத்துலே இருந்ததால் உன் செல்போன் எங்கே விட்டோம்னு தெரியல பிரவீன்.''
“என்ன என் செல்போனை காணோமா?’

“பதட்டப்படாதே, உன் டாடி உனக்கு புது ஐபோன் வாங்கிட்டார்.....இந்தா புது போன் புது நம்பர் ...''
“டாடி எங்க?’“இதோ இங்க தான் இருக்கார்!''
பிரவீன் மெல்ல எழுந்து உட்கார்ந்தான்.தயக்கமாய் விஸ்வநாதனை பார்த்தான்.
“சொல்லு பிரவீன்..''

“டாடி, மெலிண்டாவின் அம்மா கிட்ட பேசினீங்களா?''
“மெலிண்டா அம்மா கூட என்னால் பேசமுடியலை பிரவீன்... அவளோட அப்பா கிட்டதான் பேசினேன்...''
“என்ன டாடி சொன்னாங்க? ஓகே சொல்லிட்டாங்களா?''

“பிரவீன்,உன் மனசை திடமாக்கி கொள்...மெலிண்டாவிற்கு மூச்சுத்திணறல் அதிகமாகி ஐ சி யூ வரைக்கும் கொண்டுபோயிருக்காங்க ...டாக்டர்ஸ் அவளை காப்பாற்ற முடியலையாம் ... மெலிண்டா இறந்து மூணுநாளாச்சாம்பா ...''
பிரவீன் சுக்கு நூறாய் உடைந்துப்போனான்
மெலிண்டாவிற்கு விடாமல் போன் பண்ணினான்.ஸ்விட்ச்சுடு ஆப் என்றே வந்தது.மெலிண்டாவை தேடிச்சென்றான்.டிராபிக் போலீஸ் கோபமாக
கத்தினான்.

“ஊர் பூரா ஊரடங்கு போட்டிருக்காங்க....திமிராடா உனக்கு ....ஹாய்யா பைக்கில் ஊர் சுத்திக்கிட்டு இருக்க....உன் பைக்கை
விட்டுட்டு போ...''“ஸார்...ஸார்...ப்ளீஸ் ஸார்....செயிண்ட் மார்க் ஸ்கூல் வரைக்கும் போயிட்டு
வந்துடறேன்....''“லூசாடா நீ?தினமும் நியூஸ் பாக்குறீயா இல்லையா....லாக்டவுன் முடிஞ்ச பிறகு தான் ஸ்கூல் திறப்பாங்க....கிளம்பு ....கிளம்பு....''
பிரவீன் ஒரு யூ டர்ன் அடித்து வீட்டிற்கு சென்றான். ஒரு  மூன்று மாதங்களுக்கு பிறகு பிரபாவதி பிரவீனிடம் பக்குவமாய் எடுத்துச்சொன்னாள்.
“இல்லாதவளை நினைச்சுகிட்டு இன்னும் எத்தனை நாட்கள் இப்படி கவலைப்பட்டுக்கிட்டு இருக்கப்போறே....இதுல இருந்து வெளியே வந்து ஒரு புது
வாழ்க்கையை தொடங்குப்பா...’

“ஓகேம்மா!''
விஸ்வநாதனும் பிரபாவதியும் தங்கள் ஜாதியிலே அழகான ஒரு பெண்ணை
தேர்ந்தெடுத்தார்கள்.
பிரவீனின் செல்லுக்கு ஒரு புதிய
நம்பரிலிருந்து போன் வந்தது.
“ஹலோ,ஹூஸ் திஸ்?''

“ஹாய் பிரவீன்,திஸ் ஸ் ஸ்வேதா...
மறுமுனையில் ஸ்வேதா குதூகலமாய் பேசினாள். பரஸ்பரம் இருவரும் சில நிமிடங்கள் பேசினார்கள்.பின் ஸ்வேதா கேட்டாள்.
“பிரவீன், நான் உங்ககிட்ட ஒண்ணு
கேட்கணும்....தப்பா நினைக்க
மாட்டீங்களே....''

“என்ன கேட்கணுமா தாராளமா கேளு...''
“எனக்கு முன்னாடி நீங்க யாரையாவது லவ் பண்ணிஇருக்கீங்களா?''
பிரவீன் பட்டென்று சொன்னான்.
“இல்லை ஸ்வேதா!''

நிமிட நொடியில் பிரவீன் தன் மனதை மாற்றிக் கொண்டு,மெலிண்டாவை மறந்துவிட்டு வேறொரு பெண்ணுடன் தன் மனதை இணைத்துக்கொள்ள முடிந்தது.
அங்கே மெலிண்டா பிரவீனை நினைத்து அழுதுகொண்டிருந்தாள்.சில்லென்ற விரல்களால் மரியம் அவள் தோள்பட்டையை தொட்டாள்.மெலிண்டா
மரியத்தை நிமிர்ந்துபார்த்தாள்.

“என்ன மம்மி...?''
“இந்த போட்டோவில் இருக்கும் பையனை பிடிச்சிருக்கானு பாத்துசொல்லு...''
“என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப்படுத்தாதீங்க

மம்மி ...என்னால் பிரவீனை மறக்க முடியாது...என் மனசு முழுக்க அவன் மட்டும் தான் இருக்கான்....பிரவீன் இடத்தில் என்னால் இன்னொருவனை நினைக்க முடியாது....''
பிரவீனின் புன்னகை முகம் மெலிண்டாவின் கண் முன் தோன்ற, ‘‘ஐ லவ் யூ பிரவீன், பார் எவர் அண்ட் எவர்...''மெலிண்டாவின் உதடுகள் அழுத்தமாய் உச்சரித்தன.

தொகுப்பு: அனிதா குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்