மல்லிகையே... மல்லிகையே!
2022-10-06@ 17:48:54

நன்றி குங்குமம் தோழி
மல்லிகைப் பூ தலையில் சூட மட்டும் அல்ல... அதனால் நமது உடலுக்கு எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்பதை சுருக்கமாக பார்ப்போம்...
*வயிற்றில் பூச்சி இருந்தால் உங்கள் உடல் மெலிவடைவது மட்டுமின்றி உபாதைகள் உண்டாக்குவதோடு, சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவை அழியும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி வெளியேற மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.
*மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி, அவற்றை பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரகக் கற்கள் தானாகவே கரைந்து போகும்.
*வயிற்றில் புண் இருந்தால் வாய்ப்புண் ஏற்படும். இதனை சரி செய்ய மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பிறகு வடிகட்டி அதனை காலை, மாலை என இரு வேளை அருந்தி வர வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.
*நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும். சில உடல் நலப் பிரச்னைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது.
*மல்லிகைப் பூவிலிருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
அடிபட்டாலோ அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும். உடலில் இந்த எண்ணெயை மசாஜ் செய்யலாம். உடல் வலி நீங்குவதோடு, குளிர்ச்சி அடையும்.
*மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், மல்லிகைப் பூவை வாங்கி தலையில் வைத்தால் மன அழுத்தம் குறையும்.
- கவிதா பாலாஜி கணேஷ், சிதம்பரம்.
செய்தி: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: மணிகண்டன்
Tags:
மல்லிகையே... மல்லிகையே!மேலும் செய்திகள்
‘மஞ்சள்’ மகிமை!
மணப்பெண்ணா நீங்கள்... இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!
பனிக்கால குளியல் பவுடர்
முக அழகு கூட்டும் புருவங்கள்
செக்கச் செவேரென்று ஆக…
ஆடைகளுக்கு அழகூட்டும் இயற்கை சாயங்கள்!
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!