SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்களை மிரட்டும் தைராய்டு

2022-09-23@ 14:58:14

நன்றி குங்குமம் தோழி

இன்றைக்கு பெண்கள் பலவிதமான பிரச்சனைகளுக்கு ஆளாகுகிறார்கள். குறிப்பாக தைராய்டு பிரச்னை. தைராய்டு நோய் பெண்களை மட்டும் தாக்குவதில்லை. இருபாலரையும் அந்த நோய் பாதிக்கிறது. ஆனால் பெண்களை இது அதிகமாக தாக்குகிறது. தைராய்டு தாக்குவதால் மனப்பிரச்சனை, குடும்பத்தில் குழப்பம், குழந்தையின்மை என பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. கழுத்தில் மூச்சுக்குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.

தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடவும். அல்லது குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சில பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கும் தைராய்டு பிரச்சனை மிக முக்கிய  காரணமாகிறது. அவர்களை மகப்பேறு நிபுணர்கள் அணுகி தைராய்டு பிரச்சனை இருக்கிறதா என்று சோதித்துக் கொள்வது அவசியம். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 5 சதவீதம் இந்தக் கோளாறினால் அவதியுறுகின்றனர். இந்த சுரப்பிகள் ஹார்மோனைக் குறைவாக சுரந்தால் உடலில் கொழுப்பு அதிகமாக சேர வாய்ப்புள்ளது. இதனால் இதய நானளில் கொழுப்பு தங்கி மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகலாம்.

ைதராய்டு நோயினை இரண்டுவிதமாக பிரிக்கலாம். ஹைப்போ தைராய்டிசன், ஹைப்பர் தைராய்டிசன். சில சமயம் அவை தைராய்டு கட்டிகளாகவும் மாற வாய்ப்புள்ளது.  இந்த பிரச்னைகள் அனைத்து தைராய்டு ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் மாற்றம் காரணமாக வருகிறது. சுரப்பியின் செயல்பாடு அதிகமாகி அதனால் ஹார்மோன் உற்பத்தி அதிகம் அடைவது முதல் வகையின் குணங்கள் (ஹைப்போ தைராய்டிசன்). வயது வித்தியாசம் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறுபடும்.

சிறுவயதில் அளவுக்கு அதிக உயரம், பருமன் இவைகள் இந்த நோயின் அறிகுறிகள். அடுத்தது ஹைப்பர் தைராய்டிசன். திடீர் எடை குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். தைராய்டு மருந்துகளும், ரேடியோ ஆக்டிவ் அயோடினும் இதற்குரிய மருந்துகளில் முக்கியமானவைகள் என்கிறார்கள் மருத்துவர்கள். முடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

50 வயதை கடந்தவர்களுக்கு நினைவாற்றல் குறைவது ஹைப்போ தைராய்டு பிரச்சனையால் தான். இவர்களுக்கு உடல் சோர்வு அதிகமாக இருக்கும். இதனால் ஏற்படும் கவலை காரணமாக மனதளவில் பாதிப்படைவார்கள். மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த நோய்க்கான மருந்து. கழுத்தில் கட்டிகள் வந்து வீக்கம் ஏற்படுவது சுற்றுச்சூழல், பரம்பரை என இரு காரணங்களினால் வருகிறது. இதுவும் அயோடின் குறைபாடு தான். இவர்கள் முட்டைகோஸ், கேரட் அதிகமாக சேர்க்கக்கூடாது. இது தைராய்டு பிரச்சனையை அதிகப்படுத்தும். மலையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தைராய்டு கட்டிகள் அதிகம் வரும். இவர்களின் உணவிலும் தண்ணீரிலும் அயோடின் குறைவாக இருப்பது தான் காரணம். இவர்கள் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.

தைராய்டு கட்டிகளை அறுவை சிகிச்சை மூலமாய் குணப்படுத்தலாம். மேலும் லேசர் சிகிச்சை இருக்கிறது. தைராய்டு கட்டிகளில் சில புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும். ஆனால் அது மிகவும் அபூர்வமாகவே வரும். இதனை FNAC (Fine Needle Aspiration Citation) மூலம் கண்டுபிடிக்கலாம். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு. ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதும், உடற்பயிற்சி செய்வதும், இந்த நோயினின்றும் பாதுகாக்கும் முறைகளாகும்.

தொகுப்பு : பிரியா மோகன்

படங்கள் : ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்