SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேசம் பளபளக்க சூப்பர் டிப்ஸ்

2022-09-23@ 14:54:34

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி:

*தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி பளபளப்பாகும்.

*வெந்தயத்தை விழுதாக அரைத்து தலையில் தடவி ஊறவிட்டு பின்னர் எலுமிச்சை சாறு கலந்த நீரில் குளிக்கவும். இது குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

*முடி நன்றாக வளர தலையில் தேங்காய் எண்ணெய் கொண்டு தினமும் நன்றாக மசாஜ் செய்யவும். இதன் மூலம் முடி மென்மையாக பளபளவென்று வளரும்.

*சின்ன வெங்காயத்துடன் தேங்காய் எண்ணெயை கொதிக்க வைத்து அதனை தலையில் தேய்த்து பிறகு ஷாம்பு போட்டு அலசி வரவும்.

*சாதம் வடித்த நீருடன் சீயக்காய் கலந்து அதைக் கொண்டு முடியை தேய்த்து விட்டால் கேசம் பளபளக்கும்.

*எலுமிச்சைச் சாறும், தேங்காய் எண்ணெயும் சம அளவு எடுத்துக் கலந்து தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும். கூந்தலும் பளிச்சென்று இருக்கும்.

*சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் செம்பருத்திப் பூ, இஞ்சி, பூண்டு, அரை எலுமிச்சம்பழம் இவற்றை நன்றாகக் காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து வந்தால் முடி கறுகறுவென வளரும்.

*பெரிய நெல்லிக்காயை இடித்து விதை நீக்கிக் கொள்ளுங்கள். பிறகு சுத்தமான நல்லெண்ணெய் அரைலிட்டரும், தேங்காய் எண்ணெய் கால் லிட்டரும் கலந்து இடித்த நெல்லிக்காயை நல்லெண்ணெயில் போட்டு மிதமான தீயில் காய்ச்சி வடிகட்டித் தலைக்குத் தேய்த்தால் முடி கறுகறுவென்று இருக்கும்.

*தலை முடியை நன்றாக வளர்க்க வேண்டு மென்றால் தலையை வியர்க்க விடாமல் வாரத்துக்கு இரண்டு முறை தலையைத் தேய்த்துக் குளித்து விட வேண்டும். ஒரு முறை எண்ணெய் சீயக்காய் தேய்த்துக் குளிக்க வேண்டும். மறு முறை வெந்தயம் இரண்டு ஸ்பூன் ஊறவைத்தது, ஒரு கீற்று தேங்காய், சீரகம் ஒன்றரை ஸ்பூன் வைத்து அரைத்து அதிகம் புளிக்காத தயிர் மூன்று ஸ்பூன் கலந்து தேய்த்து கால் மணி நேரம் வைத்திருந்து சீயக்காய் கொண்டு தலை தேய்த்துக் குளிக்க வேண்டும். இவ்வாறு தலை முடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தால் தலை முடி நன்கு கறுத்து அடர்ந்து நீண்டு வளரும். முடி பட்டுப் போல் மென்மையாக பளபளக்கும்.

*எலுமிச்சம் பழ விதைகளையும், மிளகையும் சம அளவு எடுத்து பால் விட்டு மையாக   அரைத்து தலையில் தடவி, நார்த்தங்காய் சாறு பிழிந்து தேய்த்து பத்து நிமிடம் கழித்து சீயக்காய் தேய்த்துக் குளித்து விட்டால் பொடுகு நீங்கி விடும். தலை முடி பளபளவென்று துளி அழுக்கின்றி பஞ்சு போல மின்னும். முடி நன்றாக வளரும்.

*வேப்பங்கொழுந்தைக் கிள்ளி அதில் குப்பை மேனி என்கிற பச்சிலை கைப்பிடி அளவு, மஞ்சள் ஒரு பெரிய துண்டு இவற்றுடன் தண்ணீர் தெளித்து மை போல் அரைத்து பெண்கள் தலை முடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். முடி உதிராது. பளபளக்கும்.

*இளநரையைத் தடுக்க வாரத்தில் ஒரு நாள் அரைத்த மருதாணி இலை விழுது ஒரு கப், எலுமிச்சம் பழச்சாறு, தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஒன்றாகக் கலந்து கால் கப் தயிருடன் கலந்து தலையில் தேய்த்துக் கொண்டு அரைமணி நேரம் வைத்திருந்து சீயக்காய் தேய்த்து குளித்தால் இளநரை நீங்கி விடும்.

* தலைக்கு குளித்த பிறகு ஈரம் நன்றாக உலர்ந்த பிறகே எண்ணெய்தடவ வேண்டும்.

- ராமலெட்சுமி, திருநெல்வேலி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

 • new-parliament-pic-20

  பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

 • cong-ravi-19

  தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்