SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தம்பிக்காக வலைத்தளத்தில் பாசப் போராட்டம் நடத்திய அக்கா

2022-09-20@ 17:32:59

நன்றி குங்குமம் தோழி

ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி (Spinal Muscular Atrophy (SMA)) எனும் மரபணு நோயால் பாதிக்கப்பட்ட தனது 2 வயது தம்பிக்கு ரூ.46.78 கோடி நிதி திரட்டிய அவரின் 16 வயது சகோதரி அதே நோயால் உயிரிழந்த சோகம் கேரள மக்களை அண்மையில் சோகத்தில் ஆழ்த்தியது.கேரள மாநிலம் கன்னூரில் மட்டூல் பகுதியை சேர்ந்த ரஃபீக்-மரியம் தம்பதிக்கு அஃப்ரா என்ற மகளும் அனியன் முகமது என்ற மகனும் உள்ளனர். இருவருமே முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இது ஒரு அரிய வகை நோய். மரபணுவில் குறிப்பிட்ட ஜீன்களில் ஏற்படக் கூடிய குறையால் குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படுகிறது எனும் மருத்துவர்கள், இதில் முதுகுத் தண்டுவடத்தின் தசைநார்களில் பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர்.

வீல்சேரில் தனது வாழ்க்கையை கடத்திய அஃப்ரா கடந்த ஆண்டு ஜூன் மாதம் இணைய தளத்தில் ஒரு காணொளியை பதிவேற்றியிருந்தார். அதில் அஃப்ரா தனக்கு மருத்துவராகும் கனவு இருந்தது எனக் குறிப்பிட்டு, ஆனால் தசை சிதைவு நோயால் தனது தினசரி வாழ்க்கை போராட்டமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். நோயால் என் கால்கள், முதுகு ஆகியவை ளைந்திருக்கிறது. என்னால் கீழே உட்காரவோ படுக்கவோ முடியாது. ஆனால் 2 வயது நிரம்பிய எனது தம்பியின் நிலை அவ்வளவு மோசமில்லை. அவன் தரையில் தவழ்கிறான். மருத்துவர்கள் குறிப்பிடும் மருந்து என் தம்பிக்குக் கிடைத்தால் அவன் காப்பாற்றப்படுவான் என தனது தம்பிக்குத் தேவைப்படும் சிகிச்சை குறித்தும் அதில் பேசியிருந்தார்.

முகமதுவுக்கு மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ள ஜோல்ஜென்ஸ்மா (ZOLGENSMA) மருந்தின் ஒரு டோஸ் விலை 18 கோடி ரூபாய். அஃப்ரா குடும்பத்தினருக்கு அவ்வளவு பெரிய தொகை மலைப்பைத் தரவே, மனவேதனை அடைந்த அஃப்ரா தனது தம்பியை காப்பாற்ற சமூக வலைத்தளத்தை நாடினார். சக்கர நாற்காலியில் இருந்தவாறே தமது தம்பிக்கு வந்திருக்கும் அரிய வகை நோய் குறித்து விளக்கி, தம்பியை காப்பாற்றத் தேவையான பணம் எங்களிடம் இல்லை. என் தம்பியை காப்பாற்ற நீங்கள் எங்களுக்கு உதவுவீர்கள் என நம்புகிறேன். அவனுக்கு என் நிலை வரக்கூடாது எனவும் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கான இதயங்களை இலகச் செய்தது.சிறுமி ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள அரியவகை நோயை நினைத்து முடங்கிவிடாமல், அதே போன்ற நோயால் பாதிக்கப்பட்ட தனது தம்பியின் உயிரை காப்பாற்ற போராடும் செயல்  இணையவாசிகளை கலங்கடித்தது. உலகம் முழுவதும் இருந்து முகமதுவின் சிகிச்சைக்கு 46.78 கோடி ரூபாய் நன்கொடையாக வசூலானது. 7.7 லட்சம் பேர் அஃப்ராவின் வேண்டு கோளை ஏற்று அவரின் தம்பி முகமதுவின் சிகிச்சைக்கு நிதி அனுப்பியிருந்தனர்.

இதற்காகவே இரு வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப் பட்டது. நன்கொடையில் வந்த பணத்தில் மருந்து வரவழைக்கப்பட்டு முகமதுவுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. முகமது இப்போது நலமுடன் இருக்கிறார். அவரின் சிகிச்சை செலவு போக மீதமிருந்த பணம் அவரைப்போல மரபணு நோயால் பாதிக்கப்பட்ட வேறு இரு குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தன் தம்பியை முழுமையாகக் குணமடைய வைத்து பார்க்க ஆசைப்பட்ட சிறுமி அஃப்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு நோயின் தீவிரத்தால் உடல்நிலை மோசமடைந்து கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி அஃப்ரா உயிரிழந்தார்.தம்பியின் உயிரைக்காக்க இணையவாசிகளிடம் பாசப்போராட்டம் நடத்திய அக்கா உயிரிழந்த செய்தி வலைத்தளத்திலும், கேரள ஊடகங்களிலும் இடம்பெற்று பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொகுப்பு : மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

 • london-vertical-farm-29

  நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்