SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹைஹீல்ஸ் பாதிப்புகள்!

2022-09-15@ 17:43:36

நன்றி குங்குமம் தோழி

நம் உடலின் மொத்த எடையையும் கணுக்கால் பகுதியில் உள்ள எலும்புகளும் தசைநார்களும்தான் தாங்குகின்றன. நாம் ஒவ்வொருமுறை எழுந்து நடக்கும் போதும் குதிகால் எலும்புதான் நம் எடையைத் தாங்கிப் பிடிக்கிறது. ஹீல்ஸ் காலணிகள் பயன்படுத்தும் போது குதிகாலை உயர்த்தி நடக்க வேண்டியிருக்கும். ஹைஹீல்ஸை எப்போதாவது அணியலாம். தொடர்ந்து அணிவதால் ஏற்படும் பிரச்னைகள் இதோ:

*குமரிகள் முதல் குழந்தைகள் வரை ஹைஹீல்ஸை விரும்பி அணிந்தாலும், இதை தொடர்ந்து அணிவதால் பெண்களின் பின்பகுதியும், இடுப்பும் பெரிதாகும். அதோடு கால்களுக்கும் சில பாதிப்புகள் ஏற்படும்.

*பாதத்திற்கு ஏற்படும் அழுத்தம் ஹீலின் அளவைப் பொறுத்து மாறும். ஹைஹீல்ஸின் உயரம் 3 இஞ்ச் என்றால் 70 சதவீத அளவும், 2 இஞ்ச் என்றால் 57 சதவீத அளவும், 1 இஞ்ச் என்றால் 22 சதவீத அளவும் பாதத்திற்கு ஏற்படும் அழுத்தம் அதிகரிக்கும்.

*பின்பக்கம் உள்ள இறுக்கமான வார் அழுத்துவதால் பாதத்தில் உள்ள எலும்புகளில் வீக்கம் ஏற்படும். அதன் வளைவு தன்மை, உயரம், 3,4வது விரல் தசையில் உள்ள நரம்புகளை இறுகச் செய்து, வலியை ஏற்படுத்தும்.

*உடல் எடை முன்பக்கம் தள்ளப்படுவதால் பாத விரல் மூட்டுகளில் வலியும் தேய்மானமும் உண்டாகும்.

*நடக்கும்போதும் பாதம் கீழ்நோக்கி உந்தும் போதும் கொண்டைக்கால் தசை இறுக்கமாகும்.

*பாத குதிகால் மேல் நோக்கி எழும்புவதால் பாத வலி ஏற்படும்.

*ஹீல்ஸ் அணியும்போது பாதம் சமநிலை பெறாது. அதனால் கணுக்காலில் வலி, எலும்பு தேய்மானம் ஏற்படும்.

*ஹைஹீல்ஸ் போட்டு நடக்கும்போது பாதத்திற்கு கூடுதலான பிடிமானம் தேவைப்படுவதால் மூட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படும்.

ஆதலால் தோழிகளே! குதிகாலில் வலி உள்ளவர்களும் ஹைஹீல்ஸ் அணிபவர்களும் இதைக் கருத்தில் கொள்வது அவசியம்.

தொகுப்பு - இந்திராணி தங்கவேல், சென்னை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்