SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

7 நாளில் அழகான உடல் பெற!

2022-09-13@ 17:51:10

நன்றி குங்குமம் தோழி

கல்யாணத்தின் போது எவ்வளவு ஸ்லிம்மாக, ஸ்மார்ட்டாக இருக்கும் பெண்கள், ஒரு குழந்தை பிறந்தவுடன் அவர்களின் உடலமைப்பு முற்றிலும் மாறிவிடுகிறது. தங்களின் உடலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர...

*முதல் நாள்: பழங்கள் மட்டும். சீத்தா பழம், ஆப்பிள், சப்போட்டா, வாழைப்பழம் தவிர மற்ற எல்லாப் பழங்களையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான பலம் கிடைக்கும்.

*இரண்டாம் நாள்: காய்கறிகள், பச்சையாகவோ, வேக வைத்தோ சாப்பிடலாம். எண்ணெய், தேங்காய் சேர்க்க வேண்டாம். காலையில் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சாப்பிடலாம். இதனால் தேவையான கார்ப்போஹைட்ரேட் கிடைக்கிறது. காய்கறிகளினால் தேவையான சத்துகளும் கலோரியும் கிடைக்கிறது.

*மூன்றாம் நாள்: பழங்கள் மற்றும் காய்கறிகள்.

*நான்காம் நாள்: வாழைப்பழம், பால், வெஜிடபிள் சூப் சாப்பிடலாம். இதனால் ேசாடியம், பொட்டாசியம் கிடைக்கும்.

*ஐந்தாம் நாள்: ஒரு கப் சாதம், ஆறு தக்காளிப் பழம் மற்றும் பன்னிரண்டு டம்ளர் தண்ணீர்... இதன் மூலம் உடம்புக்குத் தேவையான வைட்டமின் கிடைக்கிறது.

*ஆறாம் நாள்: ஒரு கப் சாதம் மற்றும் வேகவைத்த காய்கறிகள்.

*ஏழாம் நாள்: ஒரு கப் சாதம், பழச்சாறு மற்றும் காய்கறிகள்.

*எட்டாவது நாளில் எடையை செக் செய்து பாருங்கள். இந்த ஏழு நாட்கள் காபி, டீ குடிக்கக் கூடாது. கண்டிப்பாகத் தினமும் இருபது நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

தொகுப்பு - ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்