SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்: ஒரே ஒரு எலுமிச்சை பழம் போதும்!

2022-08-11@ 17:53:35

நன்றி குங்குமம் தோழி

வெள்ளிக்கிழமை... வீட்டிலுள்ள பெண்கள் மிகவும் பயபக்தியுடன் வழிபடும் நாள். அன்று பூஜை அறையில் உள்ள பூஜைப் பாத்திரங்களை நன்றாக கழுவி சுத்தம் செய்து மாலை விளக்கேற்றி பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். வாராவாரம் சுத்தம் செய்யும் பூஜைப் பாத்திரங்களை பளிச்சென்று வைக்க சில டிப்ஸ்...

* ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீரை ஊற்றி கொதிக்க விடவும். அதில் ஒரே ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி கொதிக்க விடவும். எலுமிச்சை பழம் சற்று இளகி வந்ததும் அதை மட்டும் தனியாக எடுத்து ஒரு கிண்ணத்தில் பிழிய அதிக அளவு சாறு கிடைக்கும். அதில் ஒரு டீஸ்பூன் அளவு சோடாமாவை சேர்த்து சாமான் துலக்கும் லிக்விட் ஒரு ஸ்பூன் சேர்த்து பித்தளை பாத்திரங்களை லேசாக விளக்கினாலே போதும். மிக எளிய முறையில் பித்தளை பாத்திரங்கள் பளபளப்புடன் மின்னும்.

* இதே எலுமிச்சை பழச்சாற்றில் திருநீறு சேர்த்து வெள்ளிப் பாத்திரங்களை துலக்கி வைக்கலாம்.

* எலுமிச்சை வேகவைத்த பாத்திரத்தில் இருக்கும் மீதமாகும் தண்ணீரில் இரு ஸ்பூன் சோடாமாவை கலந்தால் நுரைத்து வரும். அதை ஒரு பாட்டிலில் சேமித்து வைக்கலாம். அதனை பயன்படுத்தி கேஸ் ஸ்டவ், மைக்ரோ அவன், கிச்சன் மேடைகள்,  மிக்ஸி, கிரைண்டர் என வீட்டு உபயோக பொருட்களை துடைத்தால் அனைத்துமே பளீச்சென மாறிவிடும்.

* இதே போன்று ஆரஞ்சு பழத்தோலை வேகவைத்து அந்த தண்ணீரில் சோடாமாவை கலந்து உபயோகப்படுத்தலாம். இதில் சிறிதளவு வினிகரை சேர்த்து துடைத்தால் பொருட்கள் மின்னும்.

- தனுஜா ஜெயராமன், சென்னை.


தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

  • turist_world

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

  • noru-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயல்!: வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்.. 52 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்