பிரஷர் குக்கர்... இதை கவனியுங்கள்
2022-08-04@ 16:56:36

நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
*பிரஷர் குக்கரில் பயன்படுத்தும் கேஸ்கட் ரப்பர் வளையத்தை உபயோகிக்காத போது, ஃபிரிட்ஜின் ஃப்ரீசரில் போட்டு வைக்கலாம். இதனால் சீக்கிரம் சேதம் அடையாது. ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை கேஸ்கட்டை அவசியம் மாற்ற வேண்டும்.
*பிரஷர் குக்கரின் மூடியில் இருக்கும் துவாரங்களில் ஏற்படும் அடப்பை சிறிய ஊசியின் உதவியால் நீக்கி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
*சமையல் முடிந்த பின்பு குக்கரில் சமைத்த உணவை வேறு பாத்திரத்தில் மாற்றி விட்டு சுத்தமாக கழுவி உலர வைக்க வேண்டும். வெயிலில் 10 நிமிடம் வரை உலர வைப்பது சிறந்தது.
*பிரஷர் குக்கரில் பாதி அல்லது முக்கால் பாகம் தான் சமைக்க வேண்டும். முழு கொள்ளளவு வரை இருக்குமாறு சமைக்கக் கூடாது.
*குக்கரை மூடிவிட்டு உடனே விசில் போடாமல், ஆவி நன்றாக வெளிவர ஆரம்பித்த பிறகு பொருத்தலாம். இதன் மூலம் குக்கர் சீராக இயங்குவதோடு நீண்ட நாள் உழைக்கும்.
*பிரஷர் குக்கரில் நேரடியாக சமைக்காமல், உள்ளே எவர்சில்வர் பாத்திரத்தை வைத்து உணவு சமைப்பதே நல்லது.
- வசந்தா, சென்னை.
மேலும் செய்திகள்
கிச்சன் டிப்ஸ்
அன்றாட சமையல் பொருட்களின் அசத்தலான மருத்துவக் குறிப்புகள்
மயக்குதே மாம்பழ உணவுகள்!
கிச்சன் டிப்ஸ்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்கள்
நான்-ஸ்டிக் பராமரிப்பு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!