SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழகு முகத்துக்கு 10 அழகு குறிப்புகள்

2022-07-27@ 17:42:11

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

*சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உறைத்து பூசி வந்தால், முகம் வசீகரத் தோற்றத்தைப் பெறும்.

*முருங்கைப் பிசினை பொடி செய்து அரை ஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வனப்பு பெறும்.

*வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து அதில் குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறையும்.

*அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகிவர முக அழகும் கூடும்.

*மரிக்கொழுந்து இலையையும் சில ஆவாரை இலைகளையும் சம அளவு எடுத்து அரைத்து தலையில் தடவி வந்தால், செம்பட்டை முடி கருமையாக மாறும்.

*கணினி, வெல்டிங், வெயில் இவற்றில் வேலை செய்பவர்கள் பலருக்கு கண்கள் தக்காளிப் பழம் போல் சிவந்து காணப்பட்டால், வைத்தியம் வேறு ஒன்றுமில்லை. தக்காளிதான். தினம் இரண்டு தக்காளி வீதம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், பத்து நாட்களில் கண் சிவப்பு பறந்துவிடும்.

*சிறிதளவு பப்பாளி பழத்தை நன்றாக மசித்து வெடிப்பு வந்த பகுதிகளில் தடவி விடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் கால்களிலுள்ள வெடிப்பு மறைந்துவிடும்.

*வெள்ளை மிளகை பசும்பாலில் அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

*ஒரு நாளைக்கு 10 அல்லது 12 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால் உதட்டில் வெடிப்பு வராது. காலையில் எழுந்தவுடனும், மாலையிலும் கொஞ்சம் வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தின்று வந்தாலும் உதட்டில் வெடிப்பைப் பார்க்க முடியாது.

*சோம்பு இலை அல்லது சோம்பை கொதிக்கும் நீரில் போட்டு ஜலதோஷத்திற்கு விக்ஸ் போட்டு ஆவி பிடிப்பது போல் முகத்தை காட்டி ஆவி பிடிக்க வேண்டும். முகத்தை பாத்திரத்துக்கு வெகு அருகில் கொண்டு போக வேண்டாம். சருமம் பளிச்சென மாறும்.

தொகுப்பு  - கவிதா பாலாஜி கணேஷ், சிதம்பரம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்