SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃபேஷன் A - Z

2022-07-26@ 17:46:48

நன்றி குங்குமம் தோழி

மாறிவரும்  ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா

பெண்கள், குழந்தைகளுக்கான ஃபேஷன் உடைகள், அதை அணியும் விதங்கள் குறித்து பல பாகங்களுக்கு முன் நாம் பார்த்துவிட்டோம். இப்போது சில அத்தியாயங்களாக ஆண்கள் அணியும் உடைகள் மற்றும் அவர்களின் ஃபேஷன் குறித்து அலசி வந்தோம். கடைசி அத்தியாயமான இந்த இதழில் நாற்பது வயதிற்குறிய ஆண்கள் உடை அலங்காரம் மற்றும் அவர்கள் தங்களை எவ்வாறு சிறப்பாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நாற்பது வயதைக் கடந்ததும் பெரும்பாலான ஆண்கள் வயதானவர்களின் உடைகளுக்கு மாறிவிடுவார்கள். அந்த வயதில் பொறுப்புகள் கூடுவது போல் அலமாரியில் உடைகளின் எண்ணிக்கைகளும் அதிகரிக்க வேண்டும். அதே சமயம் நாற்பது வயசிலும் டீன்ஸ் போல உடைகள் அணிய விரும்பினால் தவறில்லை. ஆனால் அதுவே பாரம்பரியமான உடைகள் அணியும் போது... உங்களின் வயதிற்கு ஏற்ற உடையினை தேர்வு செய்ய வேண்டும். என்னெல்லாம் அணியலாம் என்பதை தெரிந்துகொள்வதற்கு முன், எதெல்லாம் அணியக்கூடாது என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.

*கிழிந்து போன... நிறம் மங்கிய ஜீன்ஸ் ேபன்ட்களை அணியக்கூடாது

*பொம்பை படங்கள் போட்ட டிஷர்ட்

*சாண்டல் செப்பல்கள்

*பேஸ்பால் தொப்பி

*பெரிய பெரிய  படங்கள் அல்லது லோகோ கொண்ட உடைகள்

*ஹுட் கொண்ட ஸ்வெட்ஷர்ட்

*டெனிம் ஷார்ட்ஸ்

*பாஸ்கெட்பால் ஸ்னீக்கர்ஸ் அல்லது டென்னிஸ் ஷூக்கள்

*டிரண்டி ஸ்டைல் கொண்ட சிகை அலங்காரம்

*உடலை இறுக்கி பிடிக்கும் உடைகள்

*உங்கள் உடல் அளவினை விட மிகவும் ெபரியதான உடைகள்.

மேலே குறிப்பிட்டு இருப்பதை எல்லாம் அணியக்கூடாது என்றால் 40 வயதில் உள்ள ஆண்கள் என்ன உடைதான் அணிய வேண்டும்.

டி-ஷர்ட்

வட்ட வடிவ கழுத்துப் பகுதி கொண்ட டி-ஷர்ட் அல்லது போலோ டி-ஷர்ட்கள் இவர்களுக்கு சிறப்பாக இருக்கும். டி-ஷர்ட்கள் வெள்ளை நிறத்தினை தவிர எந்த நிறம் வேண்டுமானாலும் அணியலாம். அப்படியே அணிய விரும்பினால் அது நன்கு துவைக்கப்பட்டு, ஐயர்ன் செய்த பிறகு தான் அணியணும். கொஞ்சம் கசங்கிய நிலையில் இந்த நிற டி-ஷர்ட்களை இளம் வயதினர் அணிந்தால்... அது கூல் லுக்கினை தரும். ஆனால் நாற்பது வயது, கண்ணியமான ஆண் இதை அணிந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. டி-ஷர்ட்கள் மட்டுமில்லை கற்கள் பதியப்பட்ட டிசைன்கள், கண்களை பறிக்கும் கிராபிக்ஸ் டிசைன்கள் போன்ற பெரிய டிசைன்கள் கொண்ட எந்த உடையும் அணிவதை தவிர்க்க வேண்டும்.

ஷர்ட்

கிராசிக் நிற ஷர்ட்கள் உங்களை எந்த விதத்திலும் ஏமாற்றம் அடைய செய்யாது. மெல்லிய நிறமுடைய பட்டன்கள் பொருத்தப்பட்ட ஷர்ட் மற்றும் போலோ ஷர்ட்கள் இவை எந்த காலத்திலும் எந்த வயது ஆண்களையும் கவர்ச்சியாக காட்டும். மெல்லிய கட்டங்கள் மற்றும் கோடுகள் டிசைன் கொண்ட ஷர்ட்கள் அவர்களின் அன்றாட வேலை செய்யும் போது அணியும் ஷர்ட்கள்.

பேன்ட்

நாற்பது வயதுள்ள எல்லா ஆண்களுக்கும் எழக்கூடிய மிகப் பெரிய சந்தேகம் அவர்கள் ெடனிம் பேன்ட்களை அணியலாமா வேண்டாமா என்பது தான். நீங்கள் ஜீன்ஸ் அணிய விரும்பினால், சாதாரண நீல நிறம், கருப்பு அல்லது எந்த நிற ஜீன் பேன்ட்களையும் அணியலாம். இதற்கு ஒரு டி-ஷர்ட் அல்லது ஷர்ட் அணிந்தால் போதும், உங்களை பளிச்சென்று எடுத்துக்காட்டும். டெனிம் மற்றும் சாம்பிரே ஷர்ட்கள் அணிந்தால் அதற்கு பிரவுன் நிற சினோஸ் நன்றாக இருக்கும். அதே சமயம் டெனிம் ஜாக்கெட்களை நீல நிற ஜீன் பேன்ட்களுக்கு அணிவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக டெனிம் ஷர்ட் மற்றும் டெனிம் பேன்ட் கண்டிப்பாக அணியவேக்கூடாது.

நான் ஜீன்ஸ் பேன்ட் மட்டுமே அணிவேன் என்று பிடிவாதம் பிடிக்காமல், பேன்ட்களையும் டிரை செய்யலாம். பருத்தி அல்லது லெனின் பிளீட் செய்யப்பட்ட பேன்ட்கள் உங்களுக்கு ஒரு கவுரவமான தோற்றத்தை அளிக்கும். இதில் பேஜ், காக்கி அல்லது அடர்த்தியான நிறங்கள் எதுவாக இருந்தாலும் அழகாக ெபாருந்தும். அதே சமயம் பேன்ட்களில் பெரிய வடிவங்கள் மற்றும் பல நிறங்கள் கொண்ட ஸ்டைல் பேன்ட்களை தவிர்ப்பது அவசியம்.

ஆண்களின் பேன்ட்களில் இடுப்பு பகுதியில் சின்னச் சின்ன மடிப்புகள் இருக்கும். அது ஒரு சில பேன்ட்களில் அதிகமாக இருக்கும். அதை தவிர்த்து ஒன்று இரண்டு மடிப்புகள் கொண்ட பேன்ட்களை தேர்வு செய்யலாம். அதில் ஒரு கால் பகுதியில் ஒரு மடிப்பு மட்டுமே இருந்தால் பார்க்க இன்னும் நேரத்தியாக இருக்கும். இந்த பேன்ட்களை அணியும் போது உங்கள் நிழல் கூட மிகவும் கச்சிதமாக இருப்பது போன்று தோற்றமளிக்கும்.

எந்த உடைகள் அணிவதாக இருந்தாலும், நன்றாக துவைத்து, ஐயர்ன் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அதே சமயம் சட்டையோ அல்லது பேன்ட்டோ கிழிந்திருக்கக் கூடாது. ஷர்ட்கள் ஃபிட்டாகவும், பட்டன்கள் எல்லாம் சரியாக இருக்க வேண்டும். அழுக்கான மற்றும் கசங்கிய சட்டை பேன்ட்கள் அணிந்திருந்தால், பார்க்கும் போது சோம்பேறி என்று எண்ணத் தோன்றும். பொதுவாக சோம்பேறியாக இருப்பவர்களை யாருக்கும் பிடிக்காது. அதேபோல் கால் முட்டிகளில் கிழிந்து இருக்கும் ஸ்டைல் கொண்ட ஜீன்ஸ் பேன்ட்கள் அணிந்திருந்தால் நீங்கள் ஒரு சிறார் என்ற எண்ணத்தை தூண்டும். அதேபோல், ஷர்ட்களில் பட்டன்கள் இல்லாமல் சிலர் சேஃப்டி பின்களை குத்தி இருப்பார்கள். அவர்களைப் பார்க்கும் போது முகம் சுழிக்க தோன்றும். உடலை இறுக்கி பிடிக்கும் உடைகளோ அல்லது உடல் அளவை விட பெரிய சைஸ் உடைகளை அணிந்தாலும் அது உங்கள் தோற்றத்தை பெரியதாக எடுத்துக்காட்டும்.

காலணிகள்

நண்பர்களுடன் வார இறுதி நாளான ஞாயிறுகளில் ஒரு சின்ன அவுட்டிங் செல்ல வேண்டும் என்று விரும்பினால் சாண்டல்ஸ் செருப்புகள் மற்றும் ஜீன்ஸ் பேன்ட்கள் அணியலாம். வேலைக்கு செல்லும் போது காஷ்வல் உடைகளை தேர்வு செய்தால், அதற்கு ஸ்னீக்கர்ஸ் பெஸ்ட் சாய்ஸ். அது அலுவலகமே இருந்தாலும் வார கடைசி நாள் என்ற எண்ணத்தையும் ஒரு கூலான மனநிலையையும் ஏற்படுத்தும். இவை இல்லை என்றால் ஒரு வெள்ளை நிற ஷூக்கள் கூட அணிந்து உங்களின் காஷ்வல் உடைகளுக்கு ஒரு ஆரம்ப புள்ளியினை துவங்கலாம். ஆனால் அதே சமயம் நியான் நிற காலணிகள், நீல நிற டெனிம் உடைகளுக்கு கறுப்பு ஷூக்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நாற்பது வயதுள்ள ஆண்கள் அவர்கள் கவனத்தில் முக்கியமாக வைத்திருக்க வேண்டிய ஒரு விஷயம் எக்காரணம் கொண்டும் ஜீன்ஸ் பேன்ட்களுக்கு பளபளக்கும் ஷூக்களை அணியக்கூடாது.

அணிகலன்கள்

வாட்ச்

ஜிம்மில் உங்களின் ஆரோக்கியத்தை காக்க பயிற்சி செய்யும் போது அல்லது நடைப்பயிற்சி செய்யும் போது ஸ்மார்ட் வாட்சினை அணிந்து கொள்ளலாம். இது நீங்கள் எவ்வளவு கலோரிகளை கரைத்துள்ளீர்கள் என்ற விவரங்களை உங்களுக்கு தெரியப்படுத்துவது மட்டுமில்லாமல், பயிற்சிக்கான சிறந்த அணிகலன் போன்ற தோற்றம் அளிக்கும். டிஜிட்டல் வாட்ச்களை அணிவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் கிளாசிக் அனலாக் வாட்ச்கள் உங்களின் காஷ்வல் தோற்றத்திற்கு மேலும் ஒரு மகுடம் சூட்டியது போன்ற தோற்றமளிக்கும்.

நகைகள்

வாட்ச், கல்யாணத்திற்காக அணிந்த மோதிரம், கழுத்தில் ஒரு மெல்லிய செயின் தவிர வேறு நகைகள் அணிந்தால் பார்க்கவே வித்தியாச தோற்றத்தை கொடுக்கும். அதற்காக நீங்கள் நகை அணியக்கூடாது என்றில்லை. இந்த வயதில் அதனை குறைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு நகைகள் அணிய விருப்பமில்லை என்றால், கவலையே வேண்டாம். கையில் ஒரு வாட்ச், திருமண மோதிரமே போதுமானது.

வெயிலின் தாக்கத்தில் இருந்து உங்களின் கண்களை பாதுகாக்க சன்கிளாஸ் அணிவது அவசியம். அதே சமயம் பலூன்காரன் போல் கலர் கலர் கண்ணாடிகளை அணியாமல் டிசன்டாக ஒரு கருப்பு கண்ணாடியினை தேர்வு செய்ய வேண்டும். என்ன தான் கண்ணாடி வாட்ச், கையில் மோதிரம் அணிந்திருந்தாலும்... உங்களின் தோற்றம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்களுக்கு என்று குறிப்பிட்ட பார்லரை தேர்வு செய்து வைத்திருப்பார்கள்.

அங்கு தான் சிகை அலங்காரம் முதல் தங்களை அழகுப்படுத்த எல்லா விஷயங்களையும் ெசய்து கொள்வார்கள். அதேபோல் ஆண்களும் தங்களுக்கு என்று தனிப்பட்ட சிகை அலங்கார நிபுணரை தேர்வு செய்து கொள்வது மிகவும் அவசியம். அவர் உங்களுக்கு சரியாக பொருந்திவிட்டால், அவரிடம் மட்டுமே செல்ல வேண்டும். காரணம் உங்களின் தேவை மற்றும் உங்களுக்கு எந்த தோற்றம் நன்றாக இருக்கும் என்பதை இவர் நன்றாக புரிந்து வைத்திருப்பார். ஒவ்வொரு முறை நீங்கள் ஹேர் ஸ்டைலிஸ்டை மாற்றும் போது, அது உங்களின் தோற்றத்தையே மாற்றிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மாதம் ஒரு முறை உங்களின் தலைமுடியினை அழகாக டிரிம் செய்து கொள்வது அவசியம்.

தலைமுழுக்க முடி இருந்தால் பார்க்க நன்றாக இருக்காது. தலைமுடிக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேபோல் தாடிக்கும் அளிக்க வேண்டும். நன்றாக ஷேவ் செய்யப்பட்ட முகம் எப்போதும் வசீகர தோற்றமளிக்கும். சிலருக்கு காது மடல்கள் மற்றும் கழுத்து பகுதி... ஏன் மூக்கிலும் அதிகமாக முடிகள் இருக்கும். அதை ஒவ்வொரு முறை தலைமுடியினை டிரிம் செய்யும் போது அதையும் நீக்கிவிட வேண்டும்.

நீங்கள் டீன் ஏஜ் வயதில் இருக்கலாம் அல்லது நாற்பது வயதினை கடந்திருக்கலாம், இல்லத்தரசியாக இருக்கலாம் அல்லது வேலைக்கு செல்பவராக இருக்கலாம். ஃபேஷன் என்பது ஆண்- பெண்கள் இருவருக்குமானது. உங்களின் ஸ்டைல் மற்றும் உங்களுக்கான ஃபேஷன் என்ன என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதற்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். சாதாரண உடையிலும் ஒருவர் ராஜகுமாரனாக தோன்றலாம். இவை எல்லாமே நீங்கள் உங்களை எவ்வாறு எடுத்துக்காட்டிக் கொள்கிறீர்கள் என்பதை சுட்டிக்காட்டும். ஃபேஷன் வெளித்தோற்றமாக இருந்தாலும்... அது தனிப்பட்ட ஒருவரின் அடையாளம் என்பதை எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(முற்றும்!)

தொகுப்பு: ப்ரியா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

  • turist_world

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

  • noru-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயல்!: வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்.. 52 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்