SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழகை மேம்படுத்தும் சிகை

2022-07-20@ 16:21:22

நன்றி குங்குமம் தோழி

தலைமுடி... ஆண்களின் மிகப் பெரிய கவுரவம். ஆனால் இன்று ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களுக்கும் தலைமுடி உதிர்வது என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. பெண்களுக்கு தலைமுடி கொட்டினால் அவர்களின் முடிக்கால்களில் தடிமன் குறையும். ஆனால் ஆண்களுக்கு அது ஒரு கட்டத்தில் வழுக்கையாக மாறிவிடும். வழுக்கை என்பது ஆண்களின் மிகப் பெரிய பிரச்னையாக இருந்தாலும் அதற்கான தீர்வுகளும் இப்போது வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பத்தில் இருப்பதாக தெரிவித்தார் ட்ரைகாலஜிஸ்ட் நிபுணர் டாக்டர் சசி.

‘‘ஆண்களுக்கு முடி கொட்ட ஆரம்பித்ததும் அதை சரியான முறையில் பராமரிக்க வில்லை என்றால், ஐந்து வருடங்களில் வழுக்கை ஏற்படும் வாய்ப்புள்ளது. முன்பு 50 வயதிற்கு மேல் ஏற்பட்ட வழுக்கை பிரச்சனை இப்போது 30 வயதுகளிலேயே துவங்கிவிட்டது. இந்த பிரச்சனை ஏற்பட பல்வேறு காரணங்களை குறிப்பிடலாம். கவலை, மன அழுத்தம், மரபுக் குறைபாடு... என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இதற்கான தீர்வு இயற்கை மருத்துவத்தில் இருந்தாலும், அவை முற்றிலும் பலன் தருவதில்லை. அதனால் வழுக்கை ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து முறையான சிகிச்சை முறைகளை மேற்கொள்வதே அதற்கான நிரந்தர தீர்வு.

உச்சந்தலையில் இருக்கும் முடியின் வேர்க்கால்கள் செயலற்று போகும் நிலை வரும்போது வழுக்கை தோன்றுகிறது. அந்த செயலற்ற நிலை ஏற்படுவதற்கு முன்பு வரை முடி கொட்டுவதும் வளர்வதும் இயல்பாக நடந்து கொண்டு இருக்கும். வேர்க்கால்களில் செயலற்ற நிலைக்கு நமது பாரம்பரியமும் ஒரு காரணம். வழுக்கைக்கு பல வித சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவற்றுள் ஒன்று ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் என்னும் முடி மாற்று அறுவை சிகிச்சை. இதனால் பக்கவிளைவுகள் ஏதுமில்லை. ஆனால் இந்த சிகிச்சைக்கான செலவு அதிகம் என்பதால், தரமான முறையில் சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகள் மற்றும் நிபுணர்களை ஆராய்ந்து பிறகு சிகிச்சைகளை தொடரலாம்.

முடி மாற்று அறுவை சிகிச்சையில் உடலில் மற்ற பகுதியில் இருக்கும் முடிகளை எடுத்து வழுக்கை ஏற்பட்ட பகுதிகளில் பொருத்துவர். இந்த வகை முடிகள் பாரம்பரிய முறையில் வழுக்கையை ஏற்படுத்தாது. மேலும் முடி மாற்று அறுவை சிகிச்சை முடி கொட்டுவதில் இருந்து தப்பிக்க கடைசி தீர்வாகும்.ஒரு சிலருக்கு தான் சிகிச்சைக்கு பின்னரும் முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்பட்டாலும், மிக குறைந்த அளவு முடி கொட்டும். மேலும் நம்முடைய முடிகளையே பொருத்துவதால், ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. கழுத்து, முதுகு அல்லது தலையின் இரு பக்கங்களில் இருக்கும் முடிகளை வேர்கால்களுடன் எடுத்து வழுக்கை இருக்கும் பகுதியில் பொருத்தப்படும்.

இது ஒரு நிரந்தர சிகிச்சை முறையாக இருந்தாலும் சில காலங்களுக்கு கொஞ்சம் கவனிப்பு அவசியம். அறுவை சிகிச்சை செய்யாத இடங்களில் முடி உதிர்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். ஆகையால் அந்த இடங்களுக்கு பராமரிப்பு அவசியம். இதன் மூலம் புதிதாக பொருத்தப்பட்ட முடிகள் பலம் பெற்று முடி கொட்டுதல் அறவே தடுக்கப்படுகிறது.

மரபணு தவிர பிற காரணங்களான மன அழுத்தம், வேலைப் பளு மற்றும் உபயோகிக்கும் ரசாயனம் மிகுந்த ஷாம்பு போன்றவற்றாலும் முடி உதிர்வு பிரச்னை ஏற்படலாம். இதற்கு நல்ல ஆரோக்கியமான உணவுகள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் மீண்டும் முடி வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளும் முன், நம்பகமான சிகிச்சை மையங்களை ஆராய்ந்து அதன் பின்னரே சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும்’’ என்று ஆலோசனை அளித்தார் டாக்டர் சசி.

தொகுப்பு: பிரியா மோகன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்