அழகுடன் திகழ...
2022-07-11@ 17:13:02

நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
பெண்கள் தங்களின் சருமம் அழகாகவும் பளிச்சென்று இருக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள்... அதற்கு சில யோசனைகள்.
*பஞ்சில் சிறிதளவு மில்க் கிரீமினை எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதியை நன்றாக துடைக்கவும்.
*அடுத்து லைட் மேக்கப். அதற்கு ஃபவுண்டேஷன் தான் அடிப்படை. விரல்களால் ஃபவுண்டேஷனை எடுத்து முகம் மற்றும் கழுத்தில் ஆங்காங்கே வைத்து சமமாக பூசவும். கரும்புள்ளி மற்றும் கண்களுக்கு கீழ் கருவளையம் இருந்தால், அங்கு சற்று அதிகம் பூசவேண்டும்.
*ஐப்ரோ பென்சிலால் புருவங்களை சீராக்கவும். ‘ஐ’லைனரால் கண்களுக்கு கீழே லேசாக கோடு இழுக்கவும். கண் இமைகளிலும் வரையலாம்.
*இரவு நேர பார்ட்டிகளுக்கு செல்லும் போது... உடைக்கு ஏற்ற ‘ஐ’ ஷேடோக்களை பயன்படுத்தலாம். இல்லை என்றால் வெள்ளை அல்லது தங்க நிற ஐ-ஷேடோவை உபயோகித்தால் முகம் மேலும் பளிச்சென்று இருக்கும்.
*கடைசியாக கண்களின் இமை முடிகளில் மஸ்காராவை பூசிக் கொள்ளலாம். இதைப் பூசும் போது, கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு தான் பூச வேண்டும். அப்போது தான் புருவத்தில் உள்ள முடி முழுவதும் சீராகப் படியும்.
தொகுப்பு - அ.திவ்யா, காஞ்சிபுரம்.
Tags:
அழகுடன் திகழ...மேலும் செய்திகள்
முக அழகு பொலிவு பெற!
இந்திய பெண்களுக்காகவே இந்திய மேக்கப்
தலை பின்னிவிடுறது ஒரு வேலையா?
வாசகர் பகுதி-ஸ்கின் ஹேக்ஸ்
ஸ்கின் ஹேக்ஸ்: புளி ஃபேஷியல்
சருமத்தை பளபளப்பாக்கும் ஃபேஷியல்!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!