SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நியூஸ் பைட்ஸ்: பாராசூட்டில் குதித்த 103 வயது மூதாட்டி

2022-07-07@ 15:26:06

நன்றி குங்குமம் தோழி

கேன்சரை முழுமையாக குணமாக்கலாம்!


அமெரிக்காவில் கேன்சருக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து ஒன்று சோதனையில் 100 சதவீதம் கேன்சரை குணப்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள Memorial Sloan Kettering Cancer Center மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 18 குடல் புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபிக்கு பதில், dostarlimab என்ற மருந்தை கொடுத்து புற்றுநோயை முழுமையாக குணமாக்கியுள்ளனர். இந்த 18 நோயாளிகளும் ஏற்கனவே கேன்சருக்கு பல சிகிச்சைகள் எடுத்து, குணமாக முடியாது என்ற நிலையில் இந்த பரிசோதனையில் கலந்துகொண்டவர்கள். ஆனால் dostarlimab என்ற மருந்து, எந்த சிகிச்சையும் குணப்படுத்த முடியாத புற்று நோயை குணமாக்கியுள்ளது. இதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாராசூட்டில் குதித்த 103 வயது மூதாட்டி

நமக்கு பிடித்ததை செய்ய வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து இருக்கிறார் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ரூட் லார்சன் எனும் பெண். 103 வயதான இவர், விமானத்தில் இருந்து பாராசூட் மாட்டிக் கொண்டு குதித்து சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே 103 வயது 181 நாட்கள் வயதான அமெரிக்க மூதாட்டி ஒருவர் பாராசூட்டில் குதித்து சாதனை படைத்திருந்தார். அவரின் சாதனையை தன்னுடைய 103 வயது 259 நாட்களில் முறியடித்துள்ளார் ரூட்.

ப்ளாஸ்டிக்கை சாப்பிடும் சூப்பர் புழு

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள சூப்பர் புழுக்கள் ப்ளாஸ்டிக்கை சாப்பிட்டு உயிர்வாழ்கின்றன. இந்த சூப்பர் வார்ம்கள் மூலம், பல நூறு வருடங்களாக மட்காமல் இருக்கும் ப்ளாஸ்டிக் கழிவுகள் இப்போது உடனே மறைந்துவிடும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

71% இந்தியர்களால் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்துடன் (சி.எஸ்.இ) இணைந்து டவுன் டூ எர்த் பத்திரிகை வெளியிட்ட சமீபத்திய அறிக்கை படி, 71% இந்தியர்களால் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை என்றும் 17 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆரோக்கியமான உணவு இல்லாமல் நோய்வாய்ப்பட்டு உயிரிழப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஒரு சராசரி இந்தியனின் உணவில் போதுமான பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் தானியங்கள் இருப்பதில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

அனைத்து போன்களுக்கும் ஒரே சார்ஜர்


ஐரோப்பாவில் இனி அனைத்து போன்களுக்கும் ஒரே மாதிரியான சார்ஜரை 2024க்குள் மாற்ற வேண்டும் என மொபைல் கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒவ்வொரு முறை நாம் புதிய போன்களை வாங்கும் போதும், அதனுடன் சேர்ந்து புதிய சார்ஜர்களையும் வாங்க வேண்டி இருக்கிறது. இதனால் அதிக பணம் செலவாவதுடன், ஒவ்வொரு ஆண்டும் எலக்ட்ரானிக் கழிவுகளும் அதிகரிக்கின்றன. இதை தடுக்கவே இனி ஒரே மாதிரியான சார்ஜரை அனைத்து செல்போன் நிறுவனங்களும் தயாரிக்க வேண்டும் என ஐரோப்ப அரசு தெரிவித்துள்ளது.

சிலம்பத்தில் தமிழக வீரர்களுக்கு 69 தங்கம்


ஹரியானாவில் யூத் பெடரேஷன் ஆஃப் இந்தியா நடத்திய சிலம்பம் போட்டியில் பல மாநிலங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 161 வீரர்கள் பலதரப்பட்ட பிரிவில் கலந்து கொண்டு போட்டியை எதிர்கொண்டனர். இதில் சென்னை அணி 15 தங்கம் உட்பட 27 பதக்கங்களுடன் திரும்பியது. ஒட்டுமொத்தமாக தமிழக வீரர்கள் 69 தங்கம், 39 வெள்ளி, 44 வெண்கலம் வென்று, போட்டியின் சாம்பியன்ஷிப்பை தட்டிச் சென்றனர்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • america_fire

  கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

 • mexico-mine-17

  மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

 • oil-tanker-17

  பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்