SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்களுக்கான மகத்தான விருதுகள்!

2022-06-22@ 17:45:03

நன்றி குங்குமம் தோழி

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்


என்று பெண்களை பற்றி போற்றி பாடிய சுப்ரமணிய பாரதி, ஆண்களுக்கு சரி சமமாக பெண்களுக்கும் எல்லா துறைகளிலும் பங்கு உண்டு என்ற வரிகளுக்கு ஏற்ப ப்ராண்ட் அவதார் நிறுவனம் சுயதொழில் செய்து வரும் ெபண்களை தேர்வு செய்து வருடா வருடம் விருது வழங்கி பெண்களை கௌரவித்து வருகிறது.

பெண்கள் படிக்கிறார்கள். வேலைக்கு செல்கிறார்கள். அதே சமயம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதை தவிர்த்து தங்களின் சொந்த முயற்சியால் சிறிய அளவில் சுயதொழில் செய்து வரும் தொழில்முனைவோர்களை குறிப்பாக பெண்களை கௌரவிக்கும் வகையில் தனித்துவமாக உருவாக்கப்பட்டவை தான் ‘சுயசக்தி விருதுகள்’. வீட்டில் இருந்தே பெண்கள் மேற்
ெகாள்ளும் தொழில்முனைவு முயற்சிகளை அங்கீகரிப்பதற்காகவே இந்த விருது 2017-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை நான்கு ஆண்டுகளாக சுயசக்திகளை தேர்வு செய்து விருதுகளை வழங்கியுள்ளனர். முதல் மூன்று ஆண்டுகள் கோலாகலமாக நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழா, கடந்த ஆண்டு கொரோனா என்பதால் டிஜிட்டல் முறையில் நடைபெற்றது. இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்திருப்பதால், இந்த ஆண்டினை தேசிய அளவிலான நிகழ்வாக நிகழ்த்த உள்ளனர்.

இம்மாதம் முதல் வாரத் துவக்கத்தில் அமைச்சர் அன்பரசன் அவர்கள் சென்னையில் சுயசக்தி விருதுகளுக்கான விண்ணப்பிக்கும் விழாவினை துவங்கி வைத்தார். பல பெண்களுக்கு வழிகாட்டியாக திகழும் ராடன் மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் நடிகையுமான ராதிகா சரத்குமார், தமிழ்நாடு ஸ்டார்ட்அப் அண்ட் இன்னோவேஷன் மிஷன் அமைப்பின் திட்ட இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சிவராஜா ராமநாதன் ஆகியோர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் தொழில்துறை, கல்வித்துறை, அரசு, சமூக சேவை நிறுவனங்களைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விருது ஆர்வமாக தொழில்முனைவரை வீட்டிலிருந்தே மேற்கொண்டுவரும் பெண்களை அங்கீகரித்து கொண்டாடும் தளமாக உருவாக்கப்பட்டது. வேலைக்கு போய் சம்பாதிக்கும் பெண்கள் ஒரு ரகம். அதே சமயம் தனக்கான ஒரு சம்பாத்தியம் வேண்டும். ஆனால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்தே சம்பாதிக்கும் பெண்கள் மற்றொரு ரகம். இவர்கள் விவசாயம், மருத்துவம், கலை, விளையாட்டு, உடற்பயிற்சி கூடம், உணவு பானங்கள், டிஜிட்டல், அழகுகலை, ஆரோக்கியம், கல்வி, இலக்கியம், எழுத்து, ஊடகம், பொழுதுபோக்கு, சமூகநலன், மாற்றுத்திறனாளி, வீட்டுத் தொழில்முறை சேவையாளர்கள், தொழில்நுட்பம் என... 13 பிரிவுகளின் கீழ் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதினை இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால், தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள் அனைவரும் homepreneurawards.com அல்லது www.suyasakthiawards.com என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து அடுத்த மாதம் இரண்டாம் தேதிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சுயசக்தி விருதுகள் 2022 குறித்து பிராண்ட் அவதார் நிறுவனத்தின்  நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஹேமச்சந்திரன் இந்த விருது குறித்து மேலும் விளக்கினார். ‘‘பொதுவாக சுயதொழில் செய்யும் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த விருதுகள் இந்தாண்டு மாணவிகளுக்கும் விருதளிக்க முன்வந்துள்ளது. அதாவது சில பெண்களுக்கு படிக்கும் காலத்திலேயே சுய ெதாழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்கான யோசனைகளை அவர்கள் தங்களின் மனதில் ஸ்கெட்ச் ேபாட்டு வைத்திருப்பார்கள்.

சிறந்த யோசனைகளுக்கு யங்க் இந்தியன்ஸ் என்ற பெயரில் சுயசக்தி மாணவியர் பதிப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்களின் யோசனைகளை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு தளம் அமைத்து தருவது மட்டுமில்லாமல் தேர்வு செய்யப்படும் யோசனைகளுக்கு முயற்சிகளைத் தொடங்கவும், செயல்படுத்தவும், விரிவாக்கவும் உதவிகள் அமைத்து தரப்படும். இதன் மூலம் சிறந்த யோசனைகளுக்கு அங்கீகாரம் கிடைத்து, அவர்களை எதிர்காலத்தில் ஒரு தொழில் முனைவோராக  மாற்ற இந்த விருது ஒரு ஊக்கம் அளிக்கும்.

நான்கு ஆண்டு காலம் தனித்து செயல்பட்டு வந்த நாங்க இந்தாண்டு மாநிலத்தில் தொழில்முனைவோருக்கான சூழலை வளர்த்தெடுக்க தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள முன்முயற்சியான டான்சிம் (TANSIM) உடன் இந்த ஆண்டு கைகோர்த்திருக்கிறோம். வீட்டில் இருந்தபடியே தொழில் செய்பவர்களின் வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட நிறுவனம். இது தற்போது 20 முதல் 30 நபர்களை தேர்வு செய்து அவர்கள் தங்கள் தொழில் வளர்ச்சியடைவதற்காக பல இலவச திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதன் முன்னோடியாக நம்பிக்கைக்குரிய வகையில் செயல்படும் ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்குவது குறித்து திட்டம் வகுத்து வருகிறது.

என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான பெண்கள் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்பவர்களாக உள்ளனர். தங்கள் குடும்பக் கடமைகளை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், சிறிய அளவில் தங்களால் முடிந்த வகையில் வீட்டில் இருந்தபடியே சிறுதொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் மூலம் தங்கள் குடும்பங்களை பொருளாதார ரீதியாகவும் அவர்கள் ஆதரிக்கின்றனர். தரமான தயாரிப்புகள், சேவைகளை வழங்குவதன் மூலம் இந்தப் பெண்கள் உள்ளூர் சமூகத்தில்  பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். சமூகம், பொருளாதாரத்திற்கு பெண்கள் ஆற்றும் இந்த பங்களிப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காகவே சுயசக்தி விருதை துவங்கினோம். அதனை வருகிற மூன்று ஆண்டுகளில் சர்வதேச நிகழ்வாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது’’ என்றார் ஹேமச்சந்திரன்.

தொகுப்பு: பிரியா மோகன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SYDNEYY111

  தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

 • Mexico_Mayor

  மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

 • manipurlandaa1

  தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

 • wild-fire-california-30

  கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்