SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃபேஷன் A - Z

2022-06-06@ 17:43:49

நன்றி குங்குமம் தோழி

மாறிவரும்  ஃபேஷன்  குறித்து  அலசுகிறார்  ஃபேஷன்  டிசைனர்  ஷண்முகப்பிரியா

பெண்களுக்குதான் இந்த ஃபேஷன் உலகில் என்னற்ற உடைகள் உள்ளன. புடவை, பாவாடை தாவணி, ஜீன்ஸ், டீஷர்ட், ஸ்கர்ட், ராப் அவுண்ட், குர்தா, லெஹங்கான்னு அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை ஷர்ட், பேன்ட், டீ-ஷர்ட் என்று ஒரு குறிப்பிட்ட உடைகள் தான் உள்ளன. இதில் பல  டிசைன்கள் வந்தாலும் எல்லாமே பேன்ட், டீ-ஷர்ட், ஷர்ட் வகைகள் தான். ஆனால் இந்த உடைகளிலும் அவர்களை எடுப்பான தோற்றமுடன் காணலாம். கடந்த இதழில் ஷர்ட்டினை ஆண்கள் எவ்வாறு அணிய வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டோம். இந்த இதழில் ஆண்களுக்கான டீ-ஷர்ட்கள் மற்றும் அதனை எவ்வாறு அணிய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஃபேஷன் என்றால் அதன் மேல் பெண்களுக்கு மட்டும் தான் மோகம் என்று சொல்ல முடியாது. ஆண்களும் அதில் விதிவிலக்கல்ல. அவ்வாறு ஃபேஷன் மேல் முழு ஈடுபாட்டோடு இருக்கும் ஆண்கள் ஃபேஷன் துறையில் நிலவும் சில முக்கியமான கட்டளைகளை எப்போதும் மறக்கக்கூடாது. சொல்லப்போனால் அந்த கட்டளைகளை மீறவும் கூடாது.

பெரும்பாலான ஆண்கள் அணிய விரும்பும் உடை என்றால் அது டீ - ஷர்ட் தான். சிம்பிளான உடை என்றாலும், இதனை அணியும் ஆண்களுக்கு அழகான தோற்றத்தினை ஏற்படுத்தும். டீ-ஷர்ட்டினை எவ்வாறு அணியலாம் மற்றும் அதை கச்சிதமாக அணியும் போது நீங்கள் எவ்வாறு அழகான தோற்றத்தை பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். எந்த ஒரு உடையாக இருந்தாலும் அதற்கென ஸ்டைல் பிரமிட் உண்டு, அது அவசியமாவதும் கூட. அதேபோல் கச்சிதமாக பொருந்தக்கூடிய டீ-ஷர்ட்களுக்கு  இரண்டு முக்கியான விஷயங்கள் அவசியம்.

*உங்களின் உடல் தோற்றத்தினை எடுத்துக் காட்ட வேண்டும்.

*அணியும் போது அசவுகரியம் ஏற்படக்கூடாது. மேலும் அதை அணிந்தால் இறுக்கமாக இருப்பது போல் உணரக்கூடாது. காரணம் அது ஒருவரின் அன்றாட வேலையில் தடையினை ஏற்படுத்தக்கூடாது.

*ஒரு உடை கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? காரணம் கச்சிதமாக இருக்கும் உடைதான் ஒருவரின் ஸ்டைலின் எடுத்துக்காட்டாகும். மேலும் ஃபிட்டான உடைகள் தான் ஆண்களுக்கு கம்பீரமான தோற்றத்தையினை ஏற்படுத்தும். அந்த உடையினை நீங்கள் லூசாக அணியும் போது உங்களின் கம்பீரமான தோற்றம் உங்களின் ஆடைக்குள்மறைந்துவிடும்.

பிட்டாக உடைகள் அணிய கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து விதிகள்

1. காலர் டீஷர்ட் - ஆழமான ‘வி’ வடிவம் காலர் கொண்ட டீஷர்ட்கள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
2. தோள்பட்டை - டீ-ஷர்ட்டின் தோள்பட்டை பகுதி சரியாக தோள்பட்டையின் எலும்பின் மேல் கச்சிதமாக பொருந்த வேண்டும்.
3. ஸ்லீவ் - கைகளின் பைசெஃப் பகுதியில் பாதி அளவு தான் நீளமாக இருக்க வேண்டும. அங்கு லூசாக இருக்கக் கூடாது.
4. நீளம் - பொதுவாக டிஷர்ட்கள் பிட்டத்தின் பாதியளவு மட்டும் தான் இருக்க வேண்டும்.
5. அகலம் - மார்பக பகுதி இரண்டுபுறமும், இரண்டு முதல் ஐந்து சென்டிமீட்டர் வரை லூசாக இருக்கவேண்டும். அது தான் ஐடியல் ஃபிட்.

காலர்

பொதுவாக டீ-ஷர்ட் வட்டம் மற்றும் வி வடிவ நெக்லைன் கொண்டு இருக்கும். வட்ட வடிவத்தில் நெக்லைன் கொண்ட டீ-ஷர்ட்கள், கிளாசிக் டிசைன் டீ-ஷர்ட்கள். இந்த வட்ட வடிவ நொக்லைன் டீ-ஷர்ட்கள் எல்லா விதமான உடைகளுடன் சேர்ந்து அணியும் போது, பார்க்க அழகாக இருக்கும். மேலும் இதனை அணியும் போது, பார்க்க பகுதியில் உள்ள முடிகளை முற்றிலும் மறைக்கும் விதமாக இருக்க  வேண்டும். மேலும் இது கழுத்து பகுதியினை உறுத்தக்கூடாது. அதே சமயம் அணியும்  போது சவுகரியமாகவும், ஃபிட்டாகவும் இருக்க வேண்டும். வி நெக்லைன் கொண்ட டீ-ஷர்ட்கள், பொதுவாக ஆண்கள் ஷர்ட்டுக்குள் அணியக்கூடிய  பனியன்களுக்கு இந்த நெக்லைன்களை தேர்வு செய்யலாம். அவ்வாறு தேர்வு செய்யும் போது வி வடிவ நெக்லைனின் ஆழம் கையின் அக்குள் பகுதிக்கு கீழ் இருக்கக்கூடாது.

தோள்பட்டை

சரியான பிட்டிங் உள்ள டீ-ஷர்ட்களை அதன் தோள்பட்டை பகுதியினை கொண்டு கண்டுபிடித்து விடலாம். கச்சிதமான டீ-ஷர்ட்கள்  தோள் பட்டை பகுதியில் சரியாக பொருந்த வேண்டும். அதாவது தோள்பட்டை மற்றும் கைப்பகுதியை இணைக்க போடப்பட்டு இருக்கும் தையல் தோள்பட்டையின் எலும்பிற்கு மேல் பகுதியில் தூக்கிக் கொண்டோ அல்லது கீழே கைப் பகுதியில் இறங்கியும் இருக்கக்கூடாது. அந்த தையல் போட்ட இடத்தில் சின்ன சின்ன தவறுகள் இருந்தால், பரவாயில்லை. ஆனால் எப்போதும்,  தோள்பட்டையின் எலும்பு பகுதியில் டீ-ஷர்ட்டின் தையல் போடப்பட்ட பகுதி சரியாக ேதாள்பட்டையின் எலும்பின் மேல் இருக்க வேண்டும். அதாவது தோள்பட்டை வளையும் இடம்  இவ்வாறு கச்சிதமாக பொருந்தக்கூடிய டீ-ஷர்ட்களை அணியும் போது அது பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்காது. மேலும் உடல் பகுதியினை எங்கும் பிடித்து இருப்பது போன்ற தோற்றமும் கொடுக்காது.

ஸ்லீவ்

சரியான ஸ்லீவ் டீ-ஷர்ட் பொறுத்தவரை கைப் பகுதியை இறுக்கமாக பிடிக்கவோ அல்லது அதிக அளவு நீளமாகவோ இருக்கக்கூடாது. அதாவது சருமத்தில் இருந்து டி-ஷர்ட் கையின் நீளம் 2.5 முதல் 3.5 சென்டிமீட்டர் அளவு தான் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் கையின் மேல் பகுதியினை மிகவும் இறுக்கமாக பிடித்து இருப்பது போன்ற உணர்வு ஏற்படாது. மேலும் ஸ்லிவின் நீளம் அக்குள் பகுதியில் இருந்து கைமுட்டி பகுதி வரை உள்ள நீளத்தில் பாதியளவு தான் இருக்க வேண்டும். அதாவது மேல் கைப் பகுதி வரை தான் டீ-ஷர்ட் சட்டையின் கை நீளம் இருக்க வேண்டும்.

உடல் பகுதி மற்றும் அதன் நீளம்

நீங்கள் குண்டாக இருந்தாலும் சரி ஒல்லியாக இருந்தாலும் சரி… பெர்ஃபெக்ட் டீ-ஷர்ட் என்பது அதிக அளவு லூசாகவோ அல்லது மூச்சு முட்டும் வரை உடலை இறுக்கமாக பிடிக்கவோ கூடாது. அதிக நீளமாக மற்றும் லூசாக இருக்கும் டீ-ஷர்ட்கள் உங்க உடலின் எக்ஸ்ட்ரா கிலோ எடையினை மறைக்காது. மாறாக உங்களை மேலும் பெரியதாகவும் அதிக எடை உள்ளவராகவும் எடுத்துக் காட்டும்.  

மாறாக உடலை இறுக்கி பிடிக்கும் டீ-ஷர்ட்களை அணிந்தால், அது குட்டையான சட்டையினை அணிந்திருப்பது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்தும். டீ-ஷர்ட் அணியும் போது ஆண்கள் அனைவரும் மிகவும் கவனத்தில் கொண்டிருக்கிற விஷயம்… டீ-ஷர்ட்டின் வயிற்று பகுதியில் இரண்டு புறமும் ஒருவரின் உடல் பருமனைப் பொறுத்து  2.5 முதல் 5 சென்டிமீட்டர் வரை லூசாக இருக்க வேண்டும். அதே சமயம் மார்பகப் பகுதியினை இறுகப்பிடிக்குமாறு அணியும் போது, அந்த பகுதியில் மட்டும் வரிவரியாக கோடு தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விதிகளை கடைப்பிடித்தால், கண்டிப்பாக அழகான தோற்றம் கிடைக்கும் என்பதற்கு கியாரண்டி.

நீளம்

ஒரு டீ-ஷர்ட் கச்சிதமாக பொருந்துகிறது என்று சொல்லும் போது அதில் மிகவும் சவாலான விஷயம் என்னவென்றால், அதன் நீளம். ஆனால் எல்லா ஆண்களும் டீ-ஷர்ட் பொறுத்தவரை அதனை வாங்கும் போது மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள். காரணம் பிடிச்சிருக்கு என்று தேர்வு செய்யப்பட்ட டீ-ஷர்ட்கள் பெரும்பாலும் அதிக நீளமாகவோ அல்லது குட்டையாகவோ இருக்கும். சில சமயம் டீ-ஷர்ட்களை அணிந்திருப்பவர் கையை மேலே தூக்கினால் அவர்களின் தொப்பை பகுதி வெளியே தெரியக்கூடாது. அதனால் ஒரு டீ-ஷர்ட்டின் நீளத்தினை எளிதாக கண்டறியலாம். ஒரு டீஷர்ட்டின் நீளத்தினை அது முடியும் இடத்தைக் கொண்டு துல்லியமாக கண்டறியலாம். அதாவது பெல்ட்டின் கீழ்பகுதியில் இருந்து ஐந்து சென்டிமீட்டர் நீளம் இருத்தல் வேண்டும். இதன் மூலம் ஒருவரின் உடல் பாகங்களை அவசியமின்றி வெளியே மற்றவர்கள் பார்க்கும் படி தூண்ட செய்யாது.

டிப்ஸ்

டீ-ஷர்ட்டினை பேன்ட்டிற்குள் டக்கின் செய்யக்கூடாது. அப்படியே டக்கின் செய்ய விரும்பினால், டீ-ஷர்ட் மேல் வேறு ஏதாவது ஜாக்கெட் அல்லது பிளேசர் போன்ற உடைகளை அவற்றின் மேல் அணிந்தால் மட்டுமே டக்கின் செய்து கொள்ளலாம். எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமானது ஒரு டீ-ஷர்ட்டினை எப்படி அணிவேண்டும் என்பதை தெரிந்து கொண்டாலே போதும், நீங்கள் தான் ஸ்டைலிஷ் ஐகானாக இருப்பீர்கள். மேலும் கச்சிதமாக உங்களுக்கு பொருந்தக்கூடிய டி-ஷர்ட்களை ,அணியும் போது, அந்த இடத்திலேயே நேர்த்தியான உடைகள் அணிபவர் என்று பாராட்டப்படுவீர்கள். எப்போதுமே டையுடன் சேர்த்து அணியக்கூடிய சூட் உடைகள் தான் உங்களை் அழகாக எடுத்துக் காட்டும் என்ற அவசியம் இல்லை. சிம்பிளான டீ-ஷர்ட்களை நேர்த்தியாக அணியும் போது உங்களின் தோற்றத்திலேயே பல வித்தியாசங்களை உணர்வீர்கள்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • vice-ele-6

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

  • cong-protest-5

    விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

  • school-girls-isro-5

    இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

  • america_nancy

    சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

  • icelanddd111

    ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்