SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெர்ஃபியூம் & பாடி ஸ்பிரே

2022-05-05@ 17:39:33

நன்றி குங்குமம் தோழி

கோடைகாலம் கோலாகலமாக ஆரம்பித்திருக்கிறது. எனில் ஒவ்வொருவர் மேக்கப் பாக்ஸ்களிலும் இருக்கவேண்டிய முக்கிய வஸ்து பெர்ஃபியூம் அல்லது பாடி ஸ்பிரே. அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்ப பெர்ஃபியூம் பயன்பாடு இருக்கத்தான் செய்கிறது என்றாலும் இன்னமும் எப்படி சிறப்பாக தேர்வு செய்யலாம், எப்படி பயன்படுத்தலாம் என்று சொல்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அஷோக். நாம் இருக்கும் சுற்றத்தை அருமையாக மாற்றுவதுதான் வாசனை திரவியங்களின் முதற்கட்ட வேலை.

எப்படி சாயங்கால நேரத்தில் சற்று முகம் கழுவி தலையில்  பூ வைக்கிறோமோ அப்படித்தான் நாம் இருக்கும் இடம் சிறப்பான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டவை பெர்ஃபியூம்களும், பாடிஸ்பிரேகளும். இதைத் தாண்டி அதிகப்படியான வியர்வை நாற்றம், உடலிலிருந்து இயற்கையாகவே சுரக்கும் சில சுரப்பிகளின் துர்நாற்றம் என இவற்றையும் கட்டுப்படுத்துவதில் வாசனை திரவியங்கள் மிக முக்கியமானவை.

இரண்டு விதமான வாசனை திரவியங்கள் உள்ளன. ஒன்று இயற்கையான முறையில் தயாரிக்கப்படுபவை. மற்றொன்று ஆல்கஹால் அடிப்படையிலான வாசனை திரவியங்கள், இயற்கையான வகையில் தாவரங்கள், மலர்கள், வேர்கள், பிசின், வாசனை மரக்கட்டைகள், இவைகளில் இருந்து எடுக்கப்படும் வாசனை மூலப்பொருட்களை கொண்டு உருவாக்கப்படும். சில வகைகளில் ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை, வெள்ளரி போன்ற பழங்களை அடிப்படையாக கொண்டும் வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் சில வகை விலங்கு அடிப்படையிலும் வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன குறிப்பாக புனுகுப்பூனை கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் அக்தர் போன்ற வாசனைத் திரவியங்கள் அரபு நாடுகளில் அதிக மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. மற்றொன்று கெமிக்கல் வகையில் ஆல்கஹால் அடிப்படையில் தயாரிக்கப்படுபவை.

வாசனை திரவியங்களை தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

சிலருக்கு லேசான வாசனை கூட சட்டென ஒவ்வாமையை உருவாக்கிவிடும். தலைவலியில் துவங்கி குமட்டல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைகளை உருவாக்கிவிடும். அருகில் இருப்போர் பயன்படுத்தி இருந்தால் கூட இவர்களுக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் உண்டாக வாய்ப்புகள் அதிகம். அவர்கள் பெரும்பாலும் வாசனை திரவியங்களைத் தவிர்த்து டால்கம் பவுடர் அல்லது இயற்கையான வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம். பொதுவாக டாப் நோட்ஸ், மிடில் நோட்ஸ், பேஸ் நோட்ஸ் என இதன் அடிப்படையில் தான் வாசனை திரவியத்தில் உள்ள நறுமணத்தின் நீட்டிப்பு தன்மை கணக்கிடப்படுகிறது.

இதில் டாப் நோட்ஸ் பெரும்பாலும் பயன்படுத்திய ஓரிரு மணி நேரங்களிலேயே உடலை விட்டு சென்றுவிடும். மிடில் நோட்ஸ் என்பது அதிகம் வியர்வை சுரப்பவர்களுக்கு ஏற்றது. இவர்களுக்கு வியர்வையின் உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும். இதில் பேஸ் நோட்ஸ் என்பவைதான் இன்று பயன்படுத்தினால் கூட நாளை வரை அதன் வாசனை உடலைவிட்டு நீங்காது. இந்த நோட்ஸ் குறித்த விபரங்கள் எல்லாம் வாசனை திரவியங்களின் பாட்டில்களில் காணலாம்.

உங்கள் தேவையை பொருத்து எதற்காக வாசனை திரவியங்கள் வாங்குகிறார்களோ அதை இந்த நோட்ஸ் அடிப்படையில் கவனித்து வாங்கிக் கொள்ளலாம். இன்னும் சில வாசனை திரவியங்கள் நீரில் கரையும் தன்மை உடையவையாக இருக்கும். இவற்றை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.

நமக்கான வாசனையை சோதிப்பது எப்படி?

ஒரே சமயத்தில் மூன்று நான்கிற்கும் மேலான வாசனையை நுகர்ந்து சோதித்து வாங்க வேண்டுமெனில் முதலில் ஒரு வாசனை திரவியத்தை சோதித்துப் பார்த்துவிட்டு அடுத்த வாசனை திரவியத்தை பயன்படுத்தும் முன் காபி பவுடர் அல்லது வேறு ஏதேனும் வாசனையை முகர்ந்து விட்டு அடுத்த வாசனையை சோதிப்பது நல்லது. பெரும்பாலும் வாசனை திரவியங்கள் விற்கும் கடைகளிலேயே இந்த சோதிப்பு முறையை வைத்திருப்பர்.

பெர்ஃபியூம் மற்றும் பாடி ஸ்பிரே எப்படி உடலில் போட்டுக் கொள்ள வேண்டும்?

முக்கியமாக அவசரம் கூடாது. குளித்து முடித்துவிட்டு சற்று காத்திருப்புக்குப் பின் கிளம்புவதற்கு அரைமணி நேரத்துக்கு முன் பயன்படுத்த வேண்டும். அந்த சமயத்தில் உடலில் வியர்வை சற்றும் இல்லாமல் இருக்க வேண்டும். பெர்ஃபியூம் எனில் மணிக்கட்டு, கழுத்தின் பின்புறம், இரண்டு காது மடல்களுக்கு பின்புறம் மற்றும் மார்பகத்தின் நடுப்பகுதி போன்ற பகுதிகளில் பெர்ஃபியூம்களை பயன்படுத்தலாம்.

அதேபோல் பாடி ஸ்பிரே என்பது வெறுமனே உடலில் கைகளின் அக்குள் பகுதியில் பயன்படுத்த வேண்டும். இதனை உடைகளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. பெரும்பாலும் பாடிஸ்பிரேக்களை தவிர்ப்பது நல்லது. இவை நேரடியாக உடலில் பயன்படுத்தப்படுவதால் சரும அலர்ஜி துவங்கி பல பிரச்னைகளை உருவாக்கும். நாம் இருக்கும் இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் பெரும்பாலும் தாவரங்கள் அடிப்படையிலான பெர்ஃபியூம்களை பயன்படுத்துவது சிறந்தது.

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்