SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாசகர் பகுதி-ஸ்கின் ஹேக்ஸ்

2022-04-20@ 17:32:47

நன்றி குங்குமம் தோழி

பெண்களுக்கு தங்களின் சருமம் எப்போதும் பொலிவோடும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் இதற்காக அதிகம் செலவிட வேண்டும். பொலிவான சருமத்தை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே பெற முடியும்.

காரணங்கள்

பொதுவாக சருமத்தின் இறந்த செல்கள் உதிரந்து புதிய செல்கள் உருவாகும். ஆனால் வயதாகும் போது அந்த மாற்றம் ஏற்படாது. இறந்த செல்கள் எல்லாம் சருமத்தில் தங்கி அது பொலிவற்ற தோற்றத்தினை ஏற்படுத்தும். மற்ெறாரு காரணம் டீஹைட்ரேஷன். போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும் அது சருமத்தில் பிரதிபலிக்கும். இவை தவிர தூக்கமின்மை, மன உளைச்சல், முறையற்ற உணவுப் பழக்கம் போன்றவையும் காரணிகளாக அமையும். இதில் இருந்து உங்களின் சருமத்தை பாதுகாக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். இறந்த செல்கள் சருமத்தில் தங்கிவிடுவதால், அதனை எக்ஃபாலியேட் மூலம் நீக்க வேண்டும். உங்களின் சருமத்தின் வகையைப் பொருத்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதை கடைப்பிடிக்கலாம்.

பிளீச்சிங் செய்வதால்...

*சருமத்தை பளிச்சிட செய்யும்
*சரும நிறத்தினை சீராக்கும்
*கருவளையம், சூரியக் கதிரால் ஏற்படும் கருமையை நீக்கும்.

என்ன செய்யலாம்

*பப்பாளி - 1/2 கப், தேன் 1 டீஸ்பூன்.
பப்பாளியில் உள்ள ஆல்ஃபா
ஹைடிராக்சி அமிலம், சருமத்தில் உள்ள மாசுவினை நீக்கி, இறந்த செல்களை நீக்கி, கரும்புள்ளிகளை மறைய செய்து சருமத்தை பிரகாசிக்க செய்யும். தேன் சருமத்தில் இன்பெக் ஷன் ஏற்படாமல் பாதுகாக்கும்.

*அரிசிமாவு - 2 டீஸ்பூன், பால் - 2 டீஸ்பூன்.
அரிசிமாவு சருமத்தில் ஏற்படும் சுறுக்கத்தை நீக்கும். பால் சருமத்தை மிருதுவாக்கும். இவை இரண்டையும் கலந்து பயன்
படுத்தும் போது சருமம் பளபளப்பாகவும் அதே சமயம் இளமையாகவும் மாறும்.

*மஞ்சள் பூசணி - 1/4 கப், தேன் - 1 டீஸ்பூன், சீரகத்தூள் - 1 டீஸ்பூன்.
மஞ்சள் பூசணி மற்றும் சீரகத்தில் உள்ள ஆல்ஃபா ஹைட்ராக்சி அமிலம் சருமத்தை பளபளப்பாகவும், சருமத்தை மிருதுவாகவும், சருமம் இளமையாக இருக்க உதவும்.

*சமைக்கப்பட்ட ஓட்ஸ் - 1/2 கப், தேன் - 1 டீஸ்பூன்.
ஓட்சில் உள்ள சபோனின் இயற்கை முறையில் சருமத்தை சுத்திகரிக்க உதவும்.

*கடலைமாவு 2 டீஸ்பூன், நெல்லிக்காய் சாறு - 1 டீஸ்பூன், தயிர் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை.
நெல்லிக்காய் இயற்கை பிளீச் மற்றும் இந்த கலவை சருமத்தை மாசு இல்லாமல் பாதுகாக்க உதவும். இந்த ஐந்து முறையினை வாரம் ஒரு முறை கடைப்பிடிக்கலாம். ஒவ்வொரு முறையில் கொடுக்கப்பட்டு இருக்கும் பொருட்களைகலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு கழுவினால் உங்கள் சருமம் பொலிவுடன் இருக்கும்.

தொகுப்பு: ரிதி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்