SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

ரோல்& ரோல்&ரோல்!

2022-04-19@ 17:43:32

நன்றி குங்குமம் தோழி

வசுந்தரா அழகுக்கலை நிபுணர்

கொரோனா லாக்டவுனில் பல அழகு நிலையங்கள் மூடியே இருந்ததால், மக்கள் ஆன்லைனிலேயே பல அழகு சாதனப் பொருட்களை வாங்க ஆரம்பித்தனர். வீட்டிலேயே முடி வெட்டுவது, வேக்ஸிங் செய்வது எனத் தொடங்கி, இன்ஸ்டாகிராமில் வெளிநாட்டு ப்யூட்டி ட்ரெண்ட்ஸை தொடர்வது என பல புதிய முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.  அதன் தொடர்ச்சியாக சரும பாதுகாப்பு கருவிகளை வாங்கும் போக்கும் இப்போது அதிகரித்துள்ளது. அப்படி சமீபத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் சரும பாதுகாப்பு கருவிகள் பற்றியும் அதன் பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்தும் பிரபல அழகுக்கலை நிபுணர் வசுந்தராவிடம் பேசினோம்.

க்ரிஸ்டல் ஃபேஸ் மசாஜ் ரோலர் இப்போது பல ஃபேசியல் மசாஜ் ரோலர்கள் வந்துவிட்டன. சில ரோலர்கள் மின்சாரம்/பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றன. ஆனால் சில மசாஜ் ரோலர்கள் இயற்கையாகவே பல நன்மைகளைக் கொண்ட க்ரிஸ்டல் படிகங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. அது போன்ற படிகங்கள் கொண்டு உருவாக்கப்பட்டு க்ரிஸ்டல் தெரபி என அழைக்கப்படும் ஃபேசியல் மசாஜ் ரோலர்களை பற்றி முதலில் பார்ப்போம்.

ஜேட் ஃபேஸ் ரோலர் (Jade Face Roller)

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டு அங்கு மிகவும் பிரபலமான இந்த ஜேட் ஃபேஸ் ரோலர் இயற்கையான ஜேட் கல்லால் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த ஃபேசியல் மசாஜ் ரோலரை பண்டைய காலத்தில், பணக்கார சீன பெண்கள் பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கின்றனர். பச்சை நிறத்தில் இருக்கும் இந்த ஜேட் ரோலர்கள், சருமத்திற்கு குளிர்ச்சி அளிக்கின்றன. ஜேட் க்ரிஸ்டல் நேற்மறையான எனர்ஜிகளைக் கொடுக்கும். ஜேட் கற்களுக்கு உறிஞ்சும் தன்மை உண்டு. சருமத்தில் நாம் என்ன தடவுகிறோமோ அதை அப்படியே தோலின் ஆழமான லேயர்களுக்குள் தள்ளும் சக்தி ஜேட் க்ரிஸ்டலுக்கு இருக்கிறது. பொதுவாக இந்த மாதிரி ஆழமான தோலின் அடுக்குகளுக்குள் சென்று வேலை செய்ய மின்சார கருவிகளால் மட்டுமே முடியும். ஆனால் ஜேட் ரோலர் இயற்கையாக அந்த தன்மையை கொண்டுள்ளது.  

இதை பயன்படுத்த ஆரம்பித்த உடனே முகத்தின் தோல் மென்மையாகி முகத்தின் வீக்கத்தை குறைக்கிறது. தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்திலிருக்கும் திட்டுகளும் சுருக்கங்களும் மறையும். ஜேட் ரோலரில் ஒரு பக்கம் பெரிய ரோலரும், மறுபக்கம் சிறிய ரோலரும் இருக்கும். பெரிய ரோலரைக் கொண்டு முகத்தில் மேல்நோக்கி மசாஜ் செய்யலாம். சிறிய ரோலரை கண்களுக்கு அடியிலும் முகத்தில் மற்ற மென்மையான பகுதிகளிலும் பயன்படுத்தலாம். இது சருமத்தை டோனிங் செய்து முகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. முகத்தில் ஏதாவது சீரம் தடவிக்கொண்டு, அதற்குப் பின் இந்த ரோலரை பயன்படுத்தினால் அதன் பயன்கள் இன்னும் அதிகமாக கிடைக்கும்.

ரோஸ் குவார்ட்ஸ் (Rose Quartz)

ரோஸ் சால்செடோனி (rose chalcedony) எனும் படிகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது முகத்தில் இருக்கும் சுருக்கங்களையும் கோடுகளையும் குறைக்கிறது. தோலில் இருக்கும் அழுத்தத்தை குறைத்து சோர்வான தோலை மெருகேற்றுகிறது.

அகேட் ரோலர் (Agate Roller)

அகேட் க்ரிஸ்டல் எனும் க்ரிஸ்டல் கல், முகத்தில் இருக்கும் மாசுக்களையும் நச்சுக்களையும் வெளியில் தள்ளும் சக்தி உடையது. எண்ணை சருமம், அதிகமான பிம்பிள்ஸ் இருக்கும் சருமத்தில் கொஞ்சம் ஆலோவேரா ஜெல் தடவி, அகேட் ஸ்டோன் ரோலரை பயன்படுத்தினால் முகத்தில் தேவையில்லாத மாசுக்களும் நச்சுகளும் வெளியேறிவிடும்.

க்ளியர் க்ரிஸ்டல் ரோலர்  (Clear Crystal Roller)

இந்த வெள்ளைப் படிகத்திற்கு தலைசிறந்த குணப்படுத்தும் அம்சங்கள் இருப்பதாக சிலர் கருதுகின்றனர். இது ஆற்றலை பெருக்கி, நினைவுத் திறனை அதிகரித்து, கவனிக்கும் ஆற்றலுக்கு உதவியாய் இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த படிகத்தை, ரோஸ் குவார்ட்ஸ் போன்ற  மற்ற படிகங்களுடன் இணைக்கும் போது, அந்த படிகத்தின் ஆற்றலை அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர்.

வொயிட் மார்பிள்(White Marble)

உடல் சூட்டை தணிக்கும். இந்த வொயிட் மார்பிள் ஸ்டோன்கள், சருமத்தில் இருக்கும் வெப்பத்தை உறிஞ்சி முகத்தில் வெப்பத்தால் உருவாகும் முகப்பருக்களை குறைக்கும். மேலும் எப்போதுமே புத்துணர்ச்சியுடன் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளவும் இது உதவுகிறது.

அமெதிஸ்ட் ரோலர் (Amethyst Roller)

இயற்கையான செவ்வந்தி படிகங்களால் ஆனது. சீனாவில் இந்த படிகத்தை ஏழாம் நூற்றாண்டிலிருந்தே சரும பராமரிப்பிற்காக பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தி வந்தனர். முகப்பருக்கள் இருப்பவர்கள் குறிப்பாக அமெதிஸ்ட் ரோலரை வைத்து முகத்தில் மசாஜ் செய்தால் பருக்கள் தோன்றுவது குறைந்து சருமத்தை நன்றாக இறுக்கி முகத்திற்கு புத்துணர்ச்சி அளித்து பிரகாசமாக்குகிறது.

கருப்பு அப்சிடியன் (Black Obsidian)

நெருப்பு, நீர் மற்றும் பூமியின் ஆற்றல்களை கொண்டுள்ளதாக இந்த ப்ளாக்  அப்சிடியன் படிகம் அறியப்படுகிறது. இது சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து நச்சுக்களை நீக்குகிறது. ஐஸ் ரோலர்இந்த  ஐஸ் ரோலர்கள், கிரிஸ்டல் ஃபேஸ் ரோலர்களைப் போலில்லாமல்,  இவை தண்ணீர் அல்லது ஜெல் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். முகத்தில் ஐஸ்  ரோலரைப் பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக அழகுக் கலை  நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.  இரவு முழுக்க வேலை செய்து தூங்காமல் கண்ணுக்கு அடியில் கருவளையத்துடன்  சோர்வாக இருப்பவர்கள், இந்த ஐஸ் ரோலரை பயன்படுத்துவதன் மூலம்  புத்துணர்ச்சியுடன் காட்சியளிப்பார்கள். இது தலைவலியையும் குறைக்க  உதவுகிறது. தினமும் 5-10 நிமிடங்கள் பயன்படுத்தலாம்.

இந்த ஃபேஸ் ரோலர்கள் இயற்கை படிகங்களால் ஆனதால், சருமத்திற்கு எந்த பக்க விளைவுகளையும் கொடுக்காது. இந்த மசாஜ் ரோலர்களை வாரம் 3-4 முறை பயன்படுத்தலாம்.

எப்படி பயன்படுத்துவது?

*சாதாரண க்ரிஸ்டல் ஃபேஸ் மசாஜ் ரோலர்களை வாங்கியதும், முதல் வேளையாக அதை ஃப்ரிட்ஜ் ஃப்ரீசருக்குள் 2-3 மணி நேரம் வைத்து பயன்படுத்த தயார்படுத்த வேண்டும்.

*இந்த ரோலர் ஃப்ரீசரில் இருக்கும் போது, உங்கள் முகத்தை சுத்தமாக கழுவி முகத்தை மென்மையான ஒரு துணியால் துடைத்துக்கொள்ளவும். பின் ஏதாவது சீரம் அல்லது மாய்ஸ்சரைசரை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும்.

*பின் ரோலரை ஃப்ரீசரில் இருந்து எடுத்து கழுத்தின் முன் பகுதியிலும் பின் பகுதியிலும் மேலிருந்து கீழாக மசாஜ் செய்யவும்.
 
*அடுத்து முகத்தில் கன்னத்தில் ஆரம்பித்து ரோலரை வெளிப்பக்கமாக  மசாஜ் செய்யவும்.  

*ரோலரை நெற்றியில் வைத்து புருவத்திற்கு கீழாக தேய்க்கவும்.

*சிறிய ரோலரை பயன்படுத்தி கண்களுக்கு அடியில் மெதுவாக மசாஜ் செய்யவும்.

*கடைசியாக, முகத்தை டவலால் துடைத்து, உங்களுக்கு பிடித்த மாய்ஸ் சரைசரை தடவவும்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்