SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்கின் ஹேக்ஸ்: புளி ஃபேஷியல்

2022-04-19@ 17:37:11

நன்றி குங்குமம் தோழி

புளி ஃபேஷியல்

சாம்பார், வற்றல் குழம்பு, ரசம் எந்த உணவாக இருந்தாலும் அதில் புளி மிகவும் பிரதானமாக இருக்கும். புளி தான் உணவின் சுவையினை அதிகரிக்கும். புளி நம்முடைய சமையலில் மட்டுமே முக்கிய பங்கு வகிப்பதில்லை, அழகியலிலும் அதன் பயன்கள் மிகவும் அபாரம். இதில் உள்ள ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் சருமத்தில் சுறுக்கங்கள் ஏற்படும் இடத்தினை கண்டறிந்து சருமம் பளபளக்க செய்யும். மேலும் உங்கள் சருமம் மாசுமருவில்லாமல் பளிச்சென்று இருக்க உதவும். இதில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட்ஸ் உங்கள் சருமத்தை பாதிக்கக் கூடிய ரசாயன கூறுகளில் இருந்து பாதுகாக்க உதவும். புளியினை கொண்டு உங்க சருமத்திற்கு எவ்வாறு ஃபேஷியல் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கிளென்சர்

இரண்டு எலுமிச்சை அளவு புளியினை தண்ணீரில் ஊறவைத்து திக்கான பேஸ்ட் போல் கரைத்துக் கொள்ளவும். புளி கரைசல் - 1 டீஸ்பூன், தயிர் - 1 டீஸ்பூன், பன்னீர் - 1 டீஸ்பூன். இவை மூன்றையும் நன்றாக கலந்து பஞ்சில் நனைத்து முகத்தினை துடைத்து எடுக்கவும். இது சருமத்தில் உள்ள துவாரங்களில் படிந்திருக்கும் அழுக்கினை நீக்கும். பிறகு தண்ணீரால் நன்கு கழுவவும்.

ஸ்க்ரப்

புளி கரைசல் -1 டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணை - 1 டீஸ்பூன். மூன்றையும் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் வட்ட வடிவத்தில் தேய்க்கவும். சர்க்கரை கரையும் அளவுக்கு விடாமல் தேய்க்கவும். இதன் மூலம் சருமத்தில் உள்ள டெட் அணுக்களை நீக்கும். ஸ்க்ரப் செய்தவுடன் சுடு தண்ணீரால் ஸ்டீமிங் எடுக்க வேண்டும்.

ஃபேஸ் பேக்

புளி கரைசல் - 2 டீஸ்பூன், தேன் - 1 டீஸ்பூன். இதனை கலந்து கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரால் கழுவலாம். இது சருமத்தை பளிச்ெசன்று இருக்க செய்யும். இவற்றை செய்த பிறகு முகத்தில் மாய்ச்சரைசர் கிரீமினை தடவலாம். இதனை மாசம் ஒரு முறை செய்து வந்தால் சருமம் பளிச்சென்று இருக்கும்.

கவனிக்க வேண்டியவை

* வாக்சில் அல்லது ஷேவ் செய்த இடத்தில் புளிக்கரைசலை பயன்படுத்தக்கூடாது. இதில் உள்ள அமிலம் உங்க சருமத்தை பாதிக்கும்.
* புளியினை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக்கூடாது. இதில் உள்ள அமிலம் மிருதுவான மற்றும் சென்சிடிவ் சருமத்தினை பாதிக்கும். சிலருக்கு அரிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. முதலில் உங்க சருமத்திற்கு புளி கரைசல் செட்டாகுமா என்பதை பாட்ச் செஸ்ட் மூலம் ஆய்வு செய்து கொண்ட பிறகு அதனை பயன்படுத்தலாம். இனி பார்லருக்கு சென்றுதான் ஃபேஷியல் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டிலேயே செய்துகொள்ளலாம்.

தொகுப்பு: ரிதி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்