ஸ்கின் ஹேக்ஸ்: முல்தானி மெட்டி
2022-04-18@ 17:44:48

நன்றி குங்குமம் தோழி
முல்தானி மெட்டிகளிமண் போன்று இருக்கும் முல்தானி மெட்டி சருமம் இயற்கையாக மிளிரச் செய்யக்கூடியது. பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளுக்கு சிறந்த நிவாரணம். இதனை க்ளென்சர், டோனர் மற்றும் பேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.
முல்தானி மெட்டியின் பலன்கள்
*எரிமலை சாம்பல் மற்றும் மினரல்கள் அடங்கியதால் மாசுமருவற்ற சருமத்திற்கு இயற்கை அளித்த வரம்.
* அதிக அளவு எண்ணை சுரப்பதை கட்டுப்படுத்தும்.
* வெயிலினால் ஏற்படும் எரிச்சல், சரும தடிப்பு மற்றும் அழற்சி தோலுக்கு உகந்தது.
* சரும துவாரங்களில் உள்ள அழுக்கை நீக்கி ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
* சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும்.
பருக்கள்
முல்தானி மெட்டி 1 டீஸ்பூன்+1/2 டீஸ்பூன் வேப்பம் பவுடர்+ 2 டீஸ்பூன் தண்ணீர் கலந்து முகத்தில் தேய்த்து காய்ந்த பிறகு கழுவினால் பரு மற்றும் அதனால் ஏற்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.
பளிச் சருமம்
முல்தானி மெட்டி 1 டீஸ்பூன்+சந்தனம் 1 டீஸ்பூன்+மஞ்சள் ஒரு சிட்டிகை+பன்னீர் 3 டீஸ்பூன் கலந்து முகத்தில் பூசி வர சருமம் பளிச்சிடும்.
கருமை நீங்க
முல்தானி மெட்டி 1 டீஸ்பூன்+ஆரஞ்ச் பழச்சாறு+பப்பாளி பழ கூழ் 1 டீஸ்பூன் கலந்து பூசி வர வெயிலினால் ஏற்படும் கருமை நீங்கும்.
பேஸ் பேக்
முல்தானி மெட்டி 1 டீஸ்பூன்+பாதாம் எண்ணை சில துளிகள்+2 டீஸ்பூன் பாலில் நசுக்கிய ரோஜா இதழ்கள் கலந்து பூச சருமத்திற்கு இன்ஸ்டென்ட் க்ளோ கிடைக்கும். இதனை வாரத்தில் இரண்டு முறை செய்து வரலாம்.
தொகுப்பு: ரிதி
மேலும் செய்திகள்
புள்ளி இல்லா பொலிவு
எனக்கு சொல்லித் தர யாரும் இல்லை... இப்ப நான் இருக்கேன் அவர்களுக்கு!
சம்மர் மேக்கப்!
கருப்பு நிறத்தழகிகள்!
மேக்கப் பாக்ஸ்-பிரைமர்
பொட்டு வைத்த முகமோ!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!