SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

ஃபேஷன் A - Z

2022-04-12@ 17:52:31

நன்றி குங்குமம் தோழி

மாறிவரும்  ஃபேஷன்  குறித்து  அலசுகிறார் ஃபேஷன்  டிசைனர்  ஷண்முகப்பிரியா

பெண்களுக்கு எப்போதும் தான் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதனால் தான் துணி எடுக்க கடைக்கு சென்றால் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தேர்வு செய்வார்கள். இந்த நிறம் அவர்களுக்கு சூட்டாகுமா? எடுப்பாக தோற்றமளிக்குமா?ன்னு நிறைய ஆய்வு செய்த பிறகு தான் அவர்களுக்கான உடையினை தேர்வு செய்வார்கள்.

வெளித்தோற்றத்தில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் இவர்கள் தங்களின் உள் அங்கமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சிந்திப்பதில்லை. மேலே அணியக்கூடிய உடைக்கு எவ்வளவு சிரத்தையோடு கவனம் செலுத்துகிறோமோ அதே போல் உள்ளாடைகளுக்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள். காரணம் இவர்களுக்கு தாங்கள் அணியும் உள்ளாடைதான் இவர்கள் மேல் அணியும் உடை எடுப்பாக தோன்ற வைக்கும் என்பது தெரிவதில்லை. அதனால் தான் உள்ளாடைகளுக்கு எவ்வாறு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பேன்டீஸ் அல்லது அண்டர்வேர் என்று பெண்கள் அணியும் உள்ளாடையின் முக்கிய அம்சமே அது எந்த துணியால் அமைக்கப்பட்டு இருக்கிறது என்பது தான். காரணம் அதை பயன்படுத்தும் முறை மற்றும் அணியும் போது வசதியாகவும் உணர வேண்டும். பெரும்பாலான பேன்டீஸ் ஸ்பான்டெக்ஸ் என்ற துணியுடன் இணைந்து அமைக்கப்படுகிறது. காரணம் அப்போது தான் அணியும் போது சரியான ஃபிட் மற்றும் நீட்டக்கூடியதாக இருக்கும். மேலும் பெரும்பாலான அண்டர்வேர்களில் பருத்தி கொண்டிருக்கும். அதாவது இதன் உள் பகுதி பருத்தியால் நெய்யப்பட்டு இருக்கும். காரணம் இதை அன்றாடம் பெண்கள் பயன்படுத்துவதால், அதில் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் தொற்று ஏற்படாமல் இருக்கும்.  

நாம் அன்றாடம் அணியக்கூடிய அண்டர்வேர் பருத்தி துணியாக இருக்க வேண்டும். இது இயற்கையானது. சுவாசிக்கக்கூடியது மற்றும் மிருதுவானது என்பதால் சருமத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். இதில் பெரிய அசவுகரியம் என்னவென்றால் இந்த துணி சீக்கிரம் காயாது. அதனால் தான் வியர்வை மூலம் அண்டர்வேர் நனைந்தால், இந்த துணி எளிதில் காயாது, ஒரு வித அசவுகரியத்தை ஏற்படுத்தும். இந்த சமயத்தில் ஈகோ ஃபிரண்ட்லி பேன்டி லைனர்களை பயன்படுத்தலாம். இது அந்தரங்க பகுதியில் வியர்வையினால் ஏற்படும் ஈரத்தை உறிந்துகொள்ளும். இவை பெண்கள் அந்த நேரத்தில் பயன்படுத்தக்கூடிய நேப்கின்கள் போல் இருந்தாலும். இவை மெல்லியதாகவும், சிறியதாகவும் இருக்கும்.

ரேயான் மற்றும் மோடால் போன்றவை செடிகளின் நார்களில் இருந்து அமைக்கப்பட்டாலும், அவை இயற்கையான முறையில் தயாரிக்கப்படாமல், ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்டது. இவை பருத்தியை விட மிருதுவாகவும் அதே சமயம் வழவழப்பாகவும் இருக்கும். மேலும் இவை ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொண்டு எளிதில் காய்ந்துவிடும். இவை மெல்லியதாகவும் வழ
வழப்பு தன்மை கொண்டதால், உடலை இறுக்கிப்பிடித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. ஆனால் வெயில் காலத்தில் இதை அணிந்தால், வியர்வையினால் அசவுகரியம் ஏற்படும் என்பதால் ஒரு நாள் முழுக்க அணிந்திருக்க கூடாது.

பாலியஸ்டர் மற்றும் நைலான் போன்ற செயற்கை பொருட்கள் கொண்ட அண்டர்வேர் விளையாட்டு துறையில் உள்ளவர்கள் பெரும்பாலும் அணிவது வழக்கம். இவை ஈரத்தை துடைத்து சீக்கிரம் காயக்கூடிய தன்மை கொண்டது. அதனால் தான் இந்த வகை அண்டர்வேர்களை விளையாடும் போது மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது பயன்படுத்தலாம். லேஸ் வேலைப்பாடுகள் கொண்டவை மற்றும் மைக்ரோபைபர் ஸ்டைல் கொண்டவை பெரும்பாலும் சின்தடிக் பொருட்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டவை. ஆனால் இதனை விளையாடிவிட்டோ அல்லது உடற்பயிற்சி செய்த பிறகு கழட்டிவிடுவோம். இல்லை என்றால் அந்தரங்கப் பகுதியில் தொற்று,  எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்னை ஏற்படும்.

அதனால் பொதுவாக பருத்தி உள்ளாடைகள் தான் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றது. மற்ற ரக உள்ளாடைகளை சிறப்பு உடைகள் அணியும் போது அணிந்து கொள்ளலாம். உள்ளடைகளில் பல ரகம் உள்ளது. அதை எப்படி அணியலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.ஹிப்ஸ்டர் : இந்த ரகம் எல்லா பெண்களும் பொதுவாக அணியக்கூடியது. இதனை அணியும் போது மிகவும் சவுகரியமாக உணர முடியும். காரணம் இது பின் பகுதி மற்றும் இரு பக்க வாட்டுப் பகுதியினையும் முற்றிலும் மறைக்கும் படி அமைந்திருக்கும்.

இவை உங்கள் இடுப்பு பகுதியில் கச்சிதமாக பொருந்தும் படி வடிவமைக்கப்பட்டு இருக்கும். மேலும் இடுப்பு பகுதியில் பட்டையாக அமைக்கப்பட்டு இருப்பதால், அவை அழகாகவும் பிட்டாகவும் பொருந்தும். சிலருக்கு தொப்பை இருக்கும். அவர்கள் ஹை&வெயிஸ்ட் ஹிப்ஸ்டரை அணியலாம். இது தொப்பையினை மறைத்து அழகான தோற்றத்தினை அளிக்கும். இந்த பேன்டியின் விளிம்புகள் லேஸ், சிம்லெஸ் மற்றும் துணி கொண்டு மடிக்கப்பட்டு பல வித டிசைன்களில் வரும். பார்மல் பேன்ட் மற்றும் மெல்லிய உடைகள் அணியும் போது லேஸ் மற்றும் சீம்லெஸ் விளிம்புகள் கொண்ட ஹிப்ஸ்டரை தேர்வு செய்யலாம்.

ப்ரீப்ஸ்: உங்களுக்கு முழுமையாக மறைக்க வேண்டும் என்றால் ப்ரீப்ஃபினை தேர்வு செய்யலாம். முன் பின் என அனைத்து பகுதியினையும் முழுமையாக மறைக்கும். இவை ஹை&வெயிஸ்ட் அல்லது ஹை&கட் என வித்தியாச ஸ்டைல்களில் கிடைக்கிறது. இதை அணிந்து மேல் உடை அணியும் போது, அதன் பட்டை உடையின் மேல்புறம் வெளிப்படையாக தெரியும். அதனால் தான் பெரும்பாலான பெண்கள் வெயிஸ்ட்லைனுக்கு கீழ் அணிய விரும்புவார்கள். ஆனால் ஒரு சிலர் அவ்வாறு வெளிப்பட்டாலும் அவர்களுக்கு சவுகரியமாக இருப்பதால், இதையே அணிய விரும்புகிறார்கள்.

பிக்கினி : பிக்கினி என்றால் பீச் உடை என்று நினைக்கிறார்கள். இது அந்த வகை கிடையாது. இந்த ரக பேன்டிக்களை இளைய தலைமுறையினர் அதிகம் அணிய விரும்புகிறார்கள். இது ப்ரீஃப் போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், அதை போல் முழுமையாக மறைக்காது. இடுப்பு பகுதியில் இல்லாமல் இடுப்புக்கு கீழ் தான் அணிய முடியும். அதே சமயம் பின் புறத்தினை ஓரளவுக்கு மறைக்கும் மற்றும் இரு பக்கவாட்டிலும் கால் பகுதி வெளிப்படையாக தெரியும். இந்த உள்ளாடைகளை பெரும்பாலான பெண்கள் ஜிம்மில் பயிற்சி எடுக்கும் போது கூட அணிய விரும்புகிறார்கள். காரணம் இது அவர்களின் பின் பகுதியில் ஏற்படும் கிரானி பேன்டி அடையாளத்தினை ஏற்படுத்தாது. இந்த வகை பேன்டிக்கள் மிகவும் சவுகரியமானது மற்றும் உங்களின் அங்கங்களை கணிசமாக மறைத்து அழகான தோற்றத்தை அளிக்கும்.

தாங்ஸ் : தாங்ஸ் என்பது ஆண்கள் அணியும் கோமனத்தின் மறு பரிமாணம். இதன் முன் பகுதி ஓரளவுக்கு மறைக்கப்பட்டு இருந்தாலும்,  பின் பகுதியில் ஒரு மெல்லிய நூல் போன்ற இழை மட்டுமே இருக்கும். இவை மிகவும் பாதுகாப்பான உள்ளாடை என்றாலும் அதே சமயம் உடலை இறுக்கமாக பிடிக்காமல் இருக்க வேண்டும். இதன் முன்புறம் பருத்தியால் ஆனதாக இருந்தாலும் அதன் பின்புறத்தில் இருக்கும் நூல் போன்ற அமைப்பு தளந்து சலசலப்பாக இல்லாமல் இருக்க வேண்டும். தாங்ஸ் அணியும் போது அது உள்ளாடையின் பட்டை வெளியே தெரியாமல் இருப்பது மட்டுமில்லாமல் இருக்கமாக அணியும் உடைக்கு மிகவும் வசதியானதும் கூட. அதே சமயம் உங்களுக்கு ஏற்ற அளவினை தேர்வு செய்ய வேண்டும். இல்லை என்றால் அணியும் போது அசவுகரியத்தை உணர்வார்கள்.

பாய்ஷார்ட்ஸ்: இது ஆண்கள் அணியும் பாக்சர்ஸ் உள்ளாடைப் போன்றது. பார்ப்பதற்கு ஷார்ட்ஸ் போன்ற அமைப்பு கொண்டு இருந்தாலும், இது பெண்கள் அணியும் பேன்டீஸ் போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கும். பாய்ஷார்ட்ஸ் இடுப்பில் இருந்து தொடையின் மேல் பாகம் வரை முழுமையாக மறைத்திருக்கும். அதாவது கால்களின் இரு பக்கம் மற்றும் பின்புறம். மேலும் இது உங்களின் உடலமைப்பிற்கு ஒரு அழகான தோற்றத்தினை கொடுக்கும். இதனை அன்றாடம் பயன்படுத்துவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இதனை ஸ்கர்ட் போன்ற உடைகளுக்கு அணியலாம். உங்களுக்கு பாதுகாப்பான உணர்வினை கொடுக்கும். பெரும்பாலும் பாய்ஷார்ட்ஸ் அண்டர்வேரினை ஷார்ட்ஸ் மற்றும் ஸ்கர்ட் போது தான் அணியலாம்.

சீம்லெஸ் பேன்டீஸ் : இவை பெரும்பாலும் மிருதுவான மற்றும் உயர் ரக துணிகளில் லேசர் முறையில் கத்தரிக்கப்பட்டு வரும். இதன் நுனிகள் சருமத்ேதாடு ஒன்றி இருப்பதால், அணியும் போது பட்டுப்போன்ற உணர்வினை கொடுக்கும். இவை சருமத்திற்கு எந்த வித எரிச்சல் போன்ற உணர்வினை கொடுக்காது மற்றும் உள்ளடைகளின் பட்டை வெளியே தெரியாமல் இருக்கும்.
பெண்களின் உள்ளாடைகளில் பல ரகம் இருக்கிறது. அவரவர் சவுகரியத்திற்கு ஏற்ப அணிந்து கொள்ளலாம்.

ஆனால் அதே நேரத்தில் உள்ளாடைகள் என்பது நாம் அணியும் உடையை விட மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பயன்படுத்த வேண்டும். ஒரு சிலர் அந்த நிறம் மங்கி, துணி நெய்ந்து சின்ன சின்ன ஓட்டைகள் ஏற்படும் அளவிற்கு ஆன பிறகு கூட அதனை பயன்படுத்துவார்கள். உடலின் அந்தரங்கத்தோடு ஒட்டியிருக்கும் இந்த உள்ளாடைகள் பெண்களின் வெஜைனல் பகுதியினை சுத்தமாகவும், உலர்ந்து இருக்கவும் அதே சமயம் பாதுகாக்கவும் செய்கிறது. எவ்வாறு அதனை அணிவதால் பல நன்மைகள் இருக்கிறதோ அதேபோல், அதனை பயன்படுத்தும் முறையையும் ஒருவர் மிகவும் அவசியமாக கடைப்பிடிக்க வேண்டும். பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் தொற்று மிகவும் வேகமாக ஏற்படக்கூடும். அவ்வாறு ஏற்படாமல் பாதுகாக்க உதவுவது தான் பெண்கள் அணியும் உள்ளாடைகள். பிறப்புறுப்பு பகுதியினை சுற்றி ஏற்படும் மைக்ரோப் அல்லது பாக்டீரியா இன்பெக்‌ஷனை தடுக்க உதவுகிறது உள்ளாடைகள். மேலும் அந்த பகுதியில் தொற்று காரணமாக ஏற்படும் துர்நாற்றம் மற்றும் அரிப்பினை குறைக்கிறது.

பெண்கள் தாங்கள் அணியும் பேன்டீஸ்களை பல வண்ண டிசைன்களில் அணிந்தாலும் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே சொன்னது போல், இதில் பல டிசைன்கள் மற்றும் வண்ணங்கள் வந்தாலும், பருத்தி உள்ளாடைகள் தான் சிறந்த தேர்வாக இருக்க வேண்டும். உங்களுக்கு அழகான பிரின்ட் செய்யப்பட்ட, லேஸ் டிசைன் கொண்ட... டிசைன்களில் இருந்தாலும் அவை 100 சதவிகிதம் பருத்தி துணியால் அமைக்கப்படாமல் இருந்தால் அதை அணிவது என்பது உங்களின் பிறப்புறுப்பிற்கு பாதுகாப்பு அற்றது என்று தான் சொல்ல வேண்டும். நீங்கள் பார்ட்டி அல்லது இரவு நேர விழாக்களுக்கு செல்லும் போது பேன்சி உள்ளாடைகளை அணிந்து செல்லலாம். தவறில்லை. காரணம் அவை சிலமணி நேரம் என்பதால் உங்களின் பிறப்புறுப்பிற்கு பாதிப்பினை ஏற்படுத்தாது. அதே சமயம் பாலியஸ்டர், ைநலான் போன்ற அண்டர்வேர்களை தினசரி அணிந்தால், அது சருமத்தில் அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு அந்த பகுதி சிவப்பாக மாறக்கூடும்.

உடலை இறுக்கி பிடிக்கக்கூடிய பேன்டீஸ்களை அணியக்கூடாது. அதற்கு பதில் உங்களின் இடுப்பு அளவிற்கு ஏற்ற பிட்டானவற்றை அணியலாம். சிலர் இறுக்கிபிடிக்கும் அண்டர்வேர்கள் அணிந்தால் பிட் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இறுக்கி பிடிக்கும் லேஸ் வேலைப்பாடுகள் கொண்டவற்றை அணிந்தால் அது உங்களின் அந்தரங்க பகுதியில் உள்ள சரும மடிப்பில் எரிச்சல் ஏற்படுத்தி அங்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

தினமும் இரண்டு முறையாவது உள்ளாடைகளை மாற்றுவது நல்லது. மாதவிடாயின் போது, நீங்கள் நேப்கின் வைத்திருந்தாலும், உள்ளாடையினை மாற்றும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பிறப்புறுப்பு பகுதியில் இருந்து வெளியாகும் சினைப்பை சுரப்பிகள் பேன்டீஸ்களில் தங்கி அதை நீங்கள் மாற்ற தவறினால் தேவையற்ற தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
சுடுதண்ணீரில் துவைப்பது சிறந்தது. மேலும் இதை துவைக்க வாசனை திரவியங்கள் கொண்ட டிட்டெர்ஜென்ட்கள் மற்றும் பேப்ரிக் சாப்னர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வீட்டிற்குள் காயவைக்காமல் வெயிலில் காயவைக்க வேண்டும். மேலும் நீங்கள் அணியும் போது முழுக்க உலர்ந்து இருக்க வேண்டும். ஈரமாக இருந்தால் நன்கு காயவைத்த பிறகே அணிய வேண்டும். உள்ளாடையில் ரசாயனம் சார்ந்த கரைப்பட்டு அது துவைத்த பிறகும் நீங்கவில்லை என்றால் அதனை தூர எறிந்துவிடுவது நல்லது.

இரவு படுக்கும் முன் பேன்டியினை அணியாமல் உறங்க வேண்டும். காரணம் சில பெண்களுக்கு தொற்று பாதிப்பு பிரச்னை இருக்கும். அவர்கள் தூங்கும் போது அதனை கடைப்பிடித்தால், அவர்களின் அந்தரங்கப் பகுதி சுவாசிக்கவும், அங்கு ஈரத்தன்மை இல்லாமலும் இருக்கும். கடைசியானது... ஆனால் எல்லா பெண்களும் மிகவும் அவசியமாக கடைப்பிடிக்க வேண்டியது.

உங்களின் உள்ளாடையில் துர்நாற்றம் ஏற்பட்டால் உடனே அதனை தூர எறிந்துவிட்டு வேறு மாற்றிவிட வேண்டும். அதிக பட்சம் ஒரு செட் உள்ளாடைகளை ஒரு வருஷத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது. சிலது ஆறு மாசத்தில் அதன் எலாஸ்டிக் தன்மை நீங்கிடும். அந்த தருணத்தில் உடனடியாக மாற்றிவிடுவது அவசியம். பொதுவாக உங்களின் உள்ளாடைகளை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம்.

உள்ளாடைகள் என்பது சாதாரண துண்டு துணியல்ல. ஒரு பெண்ணை தன்னம்பிக்கையாக உணர செய்யக்கூடிய ஒரு துணை. நினைவில் கொள்ளுங்கள்... உள்ளாடைகளை தேர்வு
செய்யும் போது சரியான அளவு மட்டுமில்லாமல் அணிந்தால் சவுகரியமாக இருக்க வேண்டும்.

தொகுப்பு: ப்ரியா

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்