SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2022-03-22@ 17:30:36

நன்றி குங்குமம் தோழி

* வேர்க்கடலையை அரைமணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்து கிரேவியுடன் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* பழங்களை எலுமிச்சை சாறு கலந்த நீரில் இரண்டு நிமிடம் மூழ்கவைத்து அலசினால் பழங்களின் மீது தெளிக்கப்பட்ட ரசாயனங்கள் முற்றிலுமாக நீங்கும்.
* வடைக்கு உளுந்தை ரொம்ப நேரம் ஊற விடாமல் அரைமணி நேரம் ஊறவைத்து கெட்டியாக, தண்ணீர் ஊற்றாமல் அரைத்து, உடனே வடை தட்டினால் எண்ணெய் குடிக்காமல் மிருதுவாக இருக்கும்.
* மந்தார இலையை பாத்திரத்தில் போட்டு அதன் மேல் புளியை வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

- யாழினி பர்வதம், சென்னை.

* உளுந்து வடை தட்டும் போது கொஞ்சம் அரிசிமாவை லேசாகத் தொட்டு தட்டினால் மொறு மொறுப்பாக இருக்கும்.
* சாம்பாரில் தக்காளியை நறுக்கிப்
போடுவதை விட மிக்ஸியில் அரைத்துப் போட்டால் ருசியாக இருக்கும்.
* உருளைக் கிழங்கு பொரிப்பதற்கு முன் சிறிது பயத்தமாவை உருளைக் கிழங்குடன் கலக்கினால் பொரியல் மொறு
மொறுப்பாக இருக்கும்.
* கேசரி கிண்டும் போது பேரீச்சம் பழத்தையும் பொடியாக  அரிந்து  சேர்த்தால், சுவை கூடும்.

- ஆர்.பிரகாசம், திருவண்ணாமலை.

* மிளகாய் பொடிக்கு வறுக்கும் போது 2 டேபிள் ஸ்பூன் கொள்ளையும் வறுத்துச் சேர்த்தால் உடம்பிற்கு நல்லது.
* பருப்பு உருண்டை குழம்பிற்கு பருப்புடன் சிறிது கொள்ளும் சேர்த்துத் தயாரித்தால் வாயு பிரச்னை ஏற்படாது.

- இந்திரா கோபாலன், திருச்சி.

* சப்பாத்திக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்குப் பதில் இளநீர் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
* ரவை உப்புமா மிச்சமானால், சிறிதளவு அரிசி மாவு சேர்த்து வடை போல பொரித்தெடுக்கலாம்.
* இட்லி மாவில் ஒரு கரண்டி நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அவித்தால் இட்லி மல்லிகைப் பூப் போல் இருக்கும்.

-  கே. ராகவி, வந்தவாசி.

* சூடான எண்ணெயில் சிறிதளவு மைதா போட்ட பிறகு மீன் பொரித்தால் பாத்திரத்தில் ஒட்டாமலிருக்கும்.
* சர்க்கரை வைக்கும் பாத்திரத்தில் ஒரு கிலோ சர்க்கரைக்கு எட்டு கிராம்பு என்ற கணக்கில் போட்டு வைத்தால் எறும்பு வராது.
* கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.

- கே.எல். புனிதவதி, கோவை.

* அவியல், மோர்க் குழம்பு செய்ய தேங்காய்க்கு பதில், பச்சரிசி 6 ஸ்பூன், கடலைப் பருப்பு கொஞ்சம், சீரகம், பச்சை மிளகாய் அரைத்து செய்தால் சுவையாக இருக்கும்.
* பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத் தூள் தேவையான அளவு அரைத்து, கோதுமை மாவுடன் சேர்த்து தோசை செய்தால் சுவையே தனி.
* இட்லி சாப்பிடுவதற்கு முன் 2, 3 ஸ்பூன் நல்லெண்ணெய் இட்லி மேல் ஊற்றிக் கொண்டால், சாம்பார், பொடி காரம் தெரியாது.
* பாவக்காயை சின்னதாக நறுக்கி, தேவையான அளவு உப்பு, மிளகாய்தூள் சேர்த்து, எலுமிச்சம் பழம் பிழிந்தால், இன்ஸ்டன்ட் பாவக்காய் ஊறுகாய் ரெடி.

- பானுமதி வாசுதேவன், மேட்டூர் அணை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்